Wednesday, February 26, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27.02. 2020.       வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்..                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர் ?

விடை  : கனிஷ்கர்
 2.நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர் ?
விடை :  குமார குப்தர்                   
3.2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
விடை : 'சூல்' என்ற நாவல்..
4.  2019 - ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர் யார்? எந்த நூலுக்காக?
 விடை :  கே. வி .ஜெயஸ்ரீ. (கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர்), 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மனோஜ் குரூரின் மலையாள நூலை மொழிபெயர்த்துள்ளார்.
5.  2020ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேக்கோ - ரோமன் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?
விடை    :   சுனில் குமார்  (21)
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Example is better than precept

🌸 சொல்வதை விட செய்வதே மேல்

🌸 Experience is the best teacher

🌸 அனுபவமே சிறந்த ஆசான்




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போதுத் தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து கீழிரங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து கணப்பட்டது.

” உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் ‘Macedonia’ வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிட்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலெக்சாண்டர்.

யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாகக் கூறினார்.

தனது வேண்டுகோளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலெக்சாண்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார், “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலெக்சாண்டர். என் ஆணையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதைக் கேள்” என்றார்.

யோகியோ தைரியமாக, “உங்களால் மாயையான என் உயிரை கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரை போர்த்திய ஆடைமட்டுமே”, என்று அமைதியாக கூறி மீண்டும் தொடர்ந்தார், “அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.

“ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலெக்சாண்டர்.

“என்னால் என் கோபத்தை கட்டுப் படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எளிதாக உங்கள் கோபத்திற்கு அளாகிவிடுகிறிர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.

யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது. வாயடைத்தவனாய் அங்கிருந்துச் சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலெக்சாண்டர்.

(கோபம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சி அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பெரியோர் வாக்கு. கோபத்தை கட்டுபடுத்தி மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.)





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯    டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.
🎯 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என முதல்வர் கே .பழனிச்சாமி தெரிவித்தார்.
🎯  முக்கொம்பில் புதிய கதவணை பணிகள் அடுத்த ஆண்டில் நிறைவடையும்.
🎯 மாநகராட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு. 7.59 லட்சம் வாக்காளர்கள், 771 வாக்குசாவடிகள்.
🎯 சாமி சிலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
🎯 திருப்புவனம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.
🎯 மார்ச்சு 9 -இல் சட்டப்பேரவை கூடுகிறது. 20 நாள்கள் நடைபெற வாய்ப்பு.
🎯 பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
🎯 மென்பொருள் பிரச்சனை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் தொடரும் சிக்கல்.
🎯 தனியார் கல்வி வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி இல்லை என உயர்நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை தகவல்.
🎯 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பேராசிரியர்கள் 137 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வலியுறுத்தல்.
🎯 புதிய மாவட்டங்கள் : ஊராட்சி ஒன்றியங்கள் பிரிப்பு அரசிதழில் வெளியீடு.
🎯 மாவட்டத்துக்குள் எங்கும் ரேஷன் பொருள்கள் வாங்கும் திட்டம் : நான்கு மாதங்களில் விரிவுபடுத்தத் திட்டம்.
🎯 இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா வந்தார் டிரம்ப் என வெள்ளை மாளிகை அறிவிப்பு.
🎯 திட்டமிட்டபடி வங்கிகள் இணைப்பு என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி.
🎯 ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஐ.நா கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்.
🎯 ராஜஸ்தான் ஆற்றில் பேருந்து விழுந்ததில் 24 பேர் பலி.
🎯 கரோனா வைரஸ் மூன்று வாரங்களில் இல்லாத அளவு பலி விகிதம் குறைவு.
🎯 ஆக்ஸிஜன் இல்லாமல் இயங்கும் அதிசய ஒட்டுண்ணி ! இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
🎯 புவி கண்காணிப்பு ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் மார்ச்- 5இல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.
🎯 திருவானைக்கா கோவிலில் 505 தங்க காசுகள் கண்டெடுப்பு.
🎯 மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து, பாகிஸ்தான் வெற்றி.
🎯 இன்று நியூஸிலாந்துடன் மோதல் : அரையிறுதிச் சுற்றில் நுழையும் முனைப்பில் இந்தியா.
🎯 ஓய்வு பெற்றார் மரியா ஷரபோவா.
🎯 ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி.
🎯 இந்தியாவை பாட்மிட்டன் வல்லரசாக புதிய திட்டம்.

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Death toll rises to 27 in Delhi violence. 14 more succumb two injuries on Wednesday : NSA Ajit doval. CM Arvind kejriwal visit disturbed areas.
🎯 Cabinet approves bill to regulate surrogacy, it will benefit Windows, divorced women.
🎯 High court decides ownership of temple property using chola inscriptions, judge deems  patta and partition deed insufficient proof of ownership.
🎯 Activated charcoal not a permitted food addictive, says Food safety department.Establishments in Chennai have been told not to use it in proprietary dishes.
🎯 Study progress barrage work : CM. Nearly 30% of work had been completed so far.
🎯 Karnataka's Push for dam project goes against supreme court verdict says CM. Tamilnadu has been consistently raising the issue with cauvery management authority.
🎯 Jammu Kashmir an integral part, India tells human rights council. ' cross - border terrorism from Pakistan posing a grave challenge to country'.
🎯 Pending MSME loan revamp by march 15.         5.28 lakh of the 5.53 lakh accounts identified as of  January 6 restructured : Finance Minister.
🎯 Virus cases emerging faster globally : WHO , sudden surge of infections is deeply concerning says its chief : U.S warns pandemic is likely.
🎯 Bumrah and shami need to fire, Both got their lengths wrong at Basin Reserve and let the kiwi tail wag.
🎯 Tennis - I' am saying goodbye. Sharapova announced her decision in an article for Vogue and vanity fair.








💐இனிய காலை வணக்கம் ....✍    
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🍁🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



2 comments:

  1. தினந்தோறும் இதனை செய்வது சிறப்பு பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களைப் போன்ற ஆசிரியர் பெருமக்களின் ஆதரவு எனக்கு ஒவ்வொரு நாளும் ஊக்கமளித்து வருகிறது.

      Delete

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...