Sunday, February 2, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 03.02. 2020.      திங்கட்கிழமை.
  திருக்குறள்: அதிகாரம்:   சான்றாண்மை.. 
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.                                                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
      ஆற்றல் உடையவரின் ஆற்றல் பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
🌸 பொதுஅறிவு:
1. LCD என்பதன் விரிவாக்கம்?
விடை  : liquid crystal display.
2. ஜனாதிபதி தேர்தலுக்கான பதவியை நடத்துபவர் யார்?
விடை : இந்திய தேர்தல் ஆணையம் . 
3. இந்தியாவில் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
விடை  : பெங்களூரு .
4. இந்து என்னும் ஆங்கில நாளிதழை தோற்றுவித்தவர் யார்?
விடை   : ஜி .சுப்பிரமணிய ஐயர்..
5 . இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
விடை    :   கைத்தறிகள்.
பழமொழிகள் (proverbs) :
1. Faith is the force of life

🌸நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி

2. Good and Bad are not due others

🌸 நன்றும் தீதும் பிறர் தர வாரா
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                               🌸    எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
நீதிக்கதை:
**************
தோல்வியும் வெற்றியாக
......................................

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து,ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்..மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும் என்று தீர்மானித்துக் கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி.அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

சரி, இதுதான் நமது வாழ்க்கை.இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.

அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.இப்போது மேலே நோக்கி பறக்கும்.

சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை.வலியும் இல்லை.அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடி யிலும் இடிக்காமல் பறக்கும்.

அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.

இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.

ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால்,இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்..

ஆம்.,நண்பர்களே..,

தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டுதான் வருகின்றோம்...

முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும்.

முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.,

'தோல்வியும் வெற்றியாக'' மாறும்...🌷🙏🏻❤


இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 கரோனா வைரஸ்: கேரளத்தில் மேலும் ஒருவர் பாதிப்பு. சீனாவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி.
🌸 நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்.
🌸 குரூப் 2 தேர்வு முறைகேடு மேலும் 3 பேர் கைது.
🌸 ஆசிரியர்கள் பணி ஓய்வு விவகாரம் : நிலுவைப் புகாரை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
🌸 சர்வர் பிரச்சினையில் பாஸ்டேக் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்.
🌸 தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கையொட்டி நாளை முதல் பிப்ரவரி 6 வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்.
🌸 புதிய வரி விதிப்பு முறையால் வரி செலுத்துவோர் பயனடைவர் என நேரடி வரிகள் வாரியத் தலைவர் பேட்டி.
🌸 டில்லி : வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ 5000  உதவித் தொகை , இலவச மின்சாரம் என  தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி.
🌸 மாற்றங்கள் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது மோடி அரசு தான் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கருத்து.
🌸 சிறு, குறு , நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்திற்கு ரூ 7572 கோடி.
🌸 ஜாதிய பாகுபாடு : இந்திய திருமண சேவை வலைதளத்துக்கு பிரிட்டனில் எதிர்ப்பு.
🌸 இந்தியா வரலாற்று சாதனை கோப்பையுடன் இந்திய அணியினர்.

🌸 ஆஸ்திரேலியன் ஓபன் : எட்டாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன். 17ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
🌸 தேசிய டேபிள் டென்னிஸ் : ஹர்மித் சுதிர்தா சாம்பியன்.



TODAY'S ENGLISH NEWS:
🌸  Second case of Corona virus infection confirmed in Kerala. India suspends e-vias for travellers from China.
🌸 Money earned in India by NRIs will be taxed, says Nirmala. Clarifications follows letter from Kerala CM over impact on workers in West Asia.
🌸 'None in T.N hospitals with symptoms of  Corona virus'. 12 in isolation wards only because protocol demands it : Minister.
🌸 Interview R.B.Uday Kumar 'private companies behind  attempts to discredit Bharat net' revenue minister dismiss allegations surrounding IAS officer's transfer.
🌸 Schooling and killing must together, says venkaiah.'It's time revisit our country's education system.
🌸 Removal of DDT will boost Investments : CBDT. Centre believes the new you  regime will encourage low income people to invest in the capital market.
🌸 Men in Blue pull off a rare T20 series whitewash. Newzealand losses the script after looking set for a a consolation win : Bumrah continues to be a conundrum for the kiwis.
🌸 Djokovic continuous his love affair with norman Brookes. The defending champion beats Thiem in five - set epic to win the trophy for the eight time Down under.


🌸இனிய காலை வணக்கம் ....✍       
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



1 comment:

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...