Monday, February 10, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 11.02. 2020.   செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  நட்பாராய்தல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
  நீட்டி அளப்பதோர் கோல்.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு. அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோளாகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக் கொள்ளும் காலம்?

விடை  : 500 வினாடி.
2.  காற்றின் திசை வேகம் அதிகரிக்கும் போது ஒளியின் திசைவேகம்?
விடை : அதிகரிக்கும்
3.  சந்திரகிரணம் நிகழும் பொழுது?

விடை  : சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்கும்
4.  மத்திய அரசுப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை?
விடை   : 97
5 .  சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை    :  1862.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Quick believers need broad shoulder

🌸 உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்
🌸 Waste not ; want not

🌸 இருப்பதை விட்டு இல்லாததற்கு அலையாதே



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁
சபர்மதி ஆஸ்ரமத்தில், உணவு உண்ணுவதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டு முறை மணி அடிக்கப்படுமாம். அதற்குள், உணவுக் கூடத்துக்கு வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்கள், உணவுக் கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும்!

ஒரு நாள், இரண்டாவது முறை மணியடித்து சிறிது நேரம் கழித்த பிறகே வந்து சேர்ந்தார் காந்திஜி. எனவே, கதவருகே காத்திருந்தார். இதை கவனித்த சேவகர் ஒருவர் ஓடி வந்து, ''பாபுஜி, தயவுசெய்து உள்ளே வாருங்கள்!'' என்றார்.
ஆனால், இதை ஏற்க மறுத்தார் காந்திஜி.

''ஆஸ்ரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் அப்படியே தளர்த்த வேண்டியிருக்கும்!'' என்றவர், பொறுமையுடன் காத்திருந்தார்.
நீதி - (எடுத்துக்கொண்ட செயலில் உண்மையோடும் உறுதியோடும் இருத்தல்)





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்.
🌸  காவிரி கோதாவரி இணைப்புக்கு ரூ 60,361 கோடியில் வரைவுத் திட்ட அறிக்கை தயார் என அமைச்சர் கட்டாரியா தகவல்.
🌸 இட ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்.
🌸 தோஹா அபுதாபி டெல்லி மதுரைக்கு திருச்சியிலிருந்து விரைவுவில் விமான சேவை.'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி ; கோடை கால அட்டவணையில் விமானசேவை விவரம்.
🌸 திருச்சியில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி திங்கட்கிழமை தொடங்கியது.
🌸 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1503 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் வழங்கினார்.
🌸 ஹாலிவுட் தெலுங்குத் துறை கூட்டுத் தயாரிப்பில் திரைப்படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு. டெல்லியில் அறிமுக போஸ்டர் வெளியீடு.
🌸 மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தும் 10 பொறியியல் கல்லூரிகள்.சேர்க்கை இடங்களை பாதியாக குறைக்கும் 40 கல்லூரிகள்.
🌸 எஸ்சி, எஸ்டி சட்டம் 2018 செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
🌸 கரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 908- ஆக அதிகரிப்பு.சீனாவுக்கு குழுவை அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு.
🌸 இன்று இறுதி ஒருநாள் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா.
🌸 ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் பதக்கம் வெல்ல இந்திய ஆடவர் தீவிரம்.
🌸 முதல்தர கிரிக்கெட்டில் 10,000 ரன்கள், தமிழகம் சார்பில் 100 ரஞ்சி ஆட்டங்கள். சாதனை நாயகன் அபினவ் முகுந்த்.









TODAY'S ENGLISH NEWS: 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Supreme court upholds changes to SC/ ST atrocities law. In exceptional cases high court can wish cases to prevent misuse.
🌸 'Review court can refer questions to larger bench' Nine- judge SC bench frames 7 questions on religious rights.
🌸 Government teachers resent unrealistic workload. They find themselves handling three to four  batches of status for practical examinations that are under way.
🌸 Enact law to implement decision on declaring Delta a protected zone.
🌸 Integrated testing centre at combined transport office complex on the anvil.
🌸 Special category status not a closed chapter , says Jagan. It may become a reality when the centre feels our need
🌸 Prepared for the coronavirus India has responded in many ways to contain the epidemic.
🌸 WHO Warns of overseas virus spread, case outside China could be the tip of the iceberg, the agency warns as the death toll rises to 908.
🌸 Series sweep : boot is on the other foot. Indian top -  order will have to fire to avoid embarrassment ; Williamson set for return, hosts also add sodhi , Tickner


🌸இனிய காலை வணக்கம் ....✍     
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...