Tuesday, February 25, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26.02. 2020.       புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:நிலையாமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நெருந  லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு  .                                                                                                                                                                                                                                         
🌸 பொருள் :
    🍀🍀🍀🍀🍀
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் யார்?

விடை  :  ஹர்ஷ்வர்தன்.
2. உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
விடை :  எஸ்.ஏ.போப்டே.                   
3. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் யார்?
விடை : உத்தவ் தாக்கரே..
4.  2020 -இல் நடைபெற்ற ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றவர் யார் ?
 விடை :  இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா.(57 கிலோ எடைப் பிரிவில்)
5.  தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் யார்?
விடை    :  பி. தங்கமணி.
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Little drops of water make the mighty ocean

🌸 சிறு துளி பெரு வெள்ளம்

🌸 Little strokes fell great oaks

🌸 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                       🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
யானைகள் பயிற்சி செய்யும் இந்த இடத்தை சுற்றி பார்க்க ஒருவர் வந்திருந்தார். அந்த இடத்தைப் பார்த்து அவருக்கு ஒரே வியப்பு.

        அவ்வளவு பெரிய உருவமுள்ள அந்த யானைகளை அதன் ஒரு முன்னங்கால்களில் சுற்றப்பட்டிருந்த சிறு கயிற்றை மட்டும் கொண்டு கட்டிப்போட்டிருந்தனர்.


சங்கிலிகள் ,கூண்டுகள் ஹூஹூம்ம்ம்ம் எதுவும் இல்லை !


அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் அந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு போய் விடலாம் என்றே தோன்றியது.ஆனால் ஆச்சரியப்படும் விதமாக எந்த ஒரு யானையும் அப்படி செல்ல முயல்வதாகவேத் தெரியவில்லை.


இதைப் பார்த்தவருக்கு வியப்பு தாங்கவில்லை


அப்போது அந்தப் பக்கம் ஒரு பயிற்சியாளர் நடந்து செல்லவும்,அவரை நிறுத்தி தன் மனதிலிருக்கும் கேள்வியைக் கேட்டே விட்டார் !


"இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதே சின்னக் கயிறுல கட்டிப் போடுவோம் சார். அப்போ அதுங்க சைஸுக்கு அதுவே போதும்...அப்போ ஓட முயற்சி செய்தாலும் அதால இந்தக் கயிறை அசைக்க முடியாது.இந்தக் கயிறை நம்மால அறுக்க முடியாதுன்னு அதுங்க மனசுல பதிஞ்சு போய்டும். அதுக்கு அப்புறம் வருஷம் போகப்போக அதுங்க பெருசானாலும்  அதையே உண்மைன்ணு நினைச்சுகிட்டு கயிற்றை அறுக்க முயற்சியே  செய்யாதுங்க ..."


பயிற்சியாளர் சொன்னதைக் கேட்டவர் அதிசயப்பட்டார்.


அந்த யானைகளுக்கு நல்ல பலம் இருந்தது. சின்னதாக அசைந்தாலே அந்தக் கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் மனதினுள் முடியாது என்ற அவநம்பிக்கை இருக்கவே அதை முயற்சி  கூட செய்யாமல் இருக்கின்றன.


இந்த யானைகளைப் போல நம்மில் பலரும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுப் போனதால் நம்மால் அதை செய்ய இயலாது என நினைத்துக் கொள்கிறோம் .


உண்மையில் தோல்வி என்பது நமக்கு ஏற்படும் பாடம். தோற்றுப்போக பயந்தால் வெற்றியும் நம்மை தேடி வராது.






இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯  இந்தியா- அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து. சிஏஏ இந்தியாவின் உள்விவகாரம் என அதிபர் டிரம்ப் கருத்து.
🎯  மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்கள் :  மார்ச26- இல் தேர்தல் அறிவிப்பு வெளியீடு.

🎯  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்மாதிரி விருது விண்ணப்பங்கள் வரவேற்பு.
🎯   மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்.
🎯  அனைத்துக்கும் முதலில் தரம் செயல்திட்டம் ,திருச்சி பெல் புதிய முயற்சி.
🎯  மார்ச்சு 1 முதல் இணையதளம் மூலமாகவே மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
🎯  பதிவு உரிமம் இல்லாத மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் : மருத்துவ சேவைகள் இயக்கம் திட்டம்.
🎯  45 நாட்களில் 172 பேருக்கு பன்றி காய்ச்சல், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரம்
🎯  பொதுத்தேர்வு நேரம் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🎯 தில்லி அரசின் 'மகிழ்ச்சி வகுப்புகள்' மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றன என மெலானியா டிரம்ப் பெருமிதம்.

🎯  கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் தேர்வு : சென்னையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.
🎯  இளம் விஞ்ஞானிகள் திட்டம் : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
🎯  தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன் உள்பட 24 பேருக்கு சாகித்திய அகாதமி விருது.
🎯  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 102 உள்ளாட்சி பதவிகளுக்கு மார்ச் 4 - ல் மறைமுகத் தேர்தல் என மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
🎯  டிக்கெட் முன்பதிவு ரத்து மூலம் 3 ஆண்டில் ரூ. 9 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது ரயில்வே.



🎯  இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்.
🎯  சீனாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர இன்று செல்கிறது விமானப்படை விமானம்.
🎯  ஈரான் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று. சீனா : பலி எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு.
🎯  மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்டான் வாவ்ரிங்கா வெற்றி.
🎯  ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி.



TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Trump renews offer  to mediate on Kashmir , but sticks CAA. India, U.S now 'comprehensive global strategic partners' ink deals on energy.
🎯  Declare Eastern ghats UNESCO cultural heritage sites say environmental groups. 'Five states  encompassed by the ghats should come out with action plan'.
🎯  Centre justify is reduced allocation of PDS kerosene to tamilnadu.'state has achieved very high LPG coverage and 100% electricity supply'.
🎯  Conjoined twins to write SSC exams on separate hall tickets.
🎯  India, U.S to upgrade ties , call on Pakistan. to curb terror. Joint statement at the end of president trump's visit undercores comprehensive strategic partnership, including security cooperation.

🎯  Melania joins students 'happiness class' U.S First lady spends time at Delhi government model School.
🎯  Virus infections cross 80,000 globally. South Korea has most COVID- 19 cases outside China, with 977 infected and 10 dead : Iran toll rises to 16.
🎯  Harnessing the wind is where kiwis scored . New Zealanders exploit Indians lack of knowledge of the intricacies of local conditions India in New Zealand.













🌸இனிய காலை வணக்கம் ....✍         🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...