Monday, February 24, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25.02. 2020.  செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
 டென்னாற்றும் கொல்லோ உலகு .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
இந்த உலகத்தார்  மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர் ; மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  தேசிய வளர்ச்சியின் உயிரோட்டமாக கருதப்படுவது?

விடை  :  போக்குவரத்து திட்டம்
2.  மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
விடை : மைக்கேல் பாரடே                   
3. இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்?
விடை : போர்ச்சுகீசியர்கள்.
4.  இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
 விடை : விசாகப்பட்டினம்.
5.  வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி?
விடை    :  பாரமானி
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Work is worship

🌸 செய்யும் தொழிலே தெய்வம்

🌸 Work while your work,play while you play

🌸 காலத்தை பயிர் செய்


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
பயனற்ற செயல்

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் தந்தை அவனைப் படிக்க வைக்கப் பல வகையில் முயன்றார். ஆனால் அவனோ படிப்பில் சிறிதும் நாட்டமின்றி இருந்தான்.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. அவன் கல்வி அறிவு இல்லாதவனாகவே வந்தான். இதனால் ஊர் மக்களும் உற்றார் உறவினர்களும் அவனைக் கேலியாகப் பேசினார்கள்.

இதைக் கேட்டு மனம் உடைந்த அவன் கடுந்தவம் புரிந்தாவது கல்வி அறிவு பெற்றுத் திரும்புவேன் என்று உறுதி செய்தான்.

காட்டிற்குச் சென்ற அவன் அங்கே தவத்தில் ஆழ்ந்தான். அருகே கங்கையாறு ஓடிக்கொண்டிருந்தது.

அவனுக்கு நல்லறிவை உணர்த்த வேண்டுமென்று நினைத்தான் இந்திரன். ஒரு முதிய அந்தணன் வடிவம் கொண்டு அவனிருக்கும் இடத்திற்கு வந்தான். பிறகு தன் கையால் மண்ணை அள்ளி அள்ளிக் கங்கையாற்றில் போட்டுக் கொண்டு இருந்தான்.

இதைக் கண்ட சிறுவன் "ஐயா எதற்காக இப்படி மண்ணை அள்ளி அள்ளிப் போடுகின்றீர் " என்று கேட்டான்.

அதற்கு அந்தணன் "மனிதர்களும் விலங்குகளும் ஆற்றைக் கடப்பதற்கும் பாலம் கட்டுவதற்காகவும் மண்ணைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் தந்தான்.

"வெறும் மண்ணால் கங்கையில் பாலம் கட்ட முடியுமா நீங்கள் போடும் மண்ணை எல்லாம் தண்ணீர் அடித்துக் கொண்டு சென்றிருக்குமே முதியவரான நீர் அறிவில்லாத இந்தச் செயலைச் செய்யலாமா இனியாவது ஏதாவது பயனுள்ள செயலில் ஈடுபடுங்கள்" என்றான் அவன்.

அந்தணன் உண்மையான இந்திரன் ஆனான். "நீயும் என்னைப் போலப் பயனற்ற செயல்தான் செய்தாய். எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளாமலும் பாடம் படிக்காமலும் ஆசிரியரிடம் கேட்காமலும் வெறும் தவம் இருப்பதால் அறிவு கிடைக்காது. இன்னும் காலங் கடந்து விடவில்லை. நல்ல ஆசிரியரை நாடி முறைப்படிக் கல்வி கற்க செல். நீ சிறந்த அறிஞனாவாய்" என்று அவனை நோக்கிக் கூறிவிட்டு மறைந்தான்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு. பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.சாலையில் 22 கி.மீ  தூரம் மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சி ஆரவாரம்.
🎯 இந்தியா - அமெரிக்கா இடையே ரூ. 21 கோடியில் பாதுகாப்பு ஒப்பந்தம் தில்லியில் இன்று முடிவு.
🎯 பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டம் முதல்வர்         கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்
🎯 பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள்  ஏற்படுத்தப்படும் என அமைச்சர் க. பாண்டியராஜன் தகவல்.
🎯 தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு. ஒரே நாளில் பவுனுக்கு ரூ 752 உயர்வு.
🎯 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என தமிழக அரசு உத்தரவு.
🎯 பிஎச்.டி  படிப்பில் புதிதாக நெறிமுறைகள் சார்ந்த தாள் அறிமுகப்படுத்துகிறது சென்னைப் பல்கலைக்கழகம்.
🎯 தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்.
🎯 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சுற்றுச்சூழல் துறையும் அறிக்கை வெளியிட்டது.
🎯 பாதுகாப்பாக சாலையை கடக்க சிவப்பு - வெள்ளை குறுக்கு கோடுகள். வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
🎯 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை : அலுவலர்களுக்குப்  பயிற்சி.
🎯 11 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ரூ 2,145 கோடி நிதியுதவி.
🎯 ஜம்மு காஷ்மீர் ஆறு மாதங்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு.
🎯 வூஹானில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை நீக்கம். சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2500 - ஐ கடந்தது
🎯 முதல் டெஸ்ட் நியூஸிலாந்திடம் சரணடைந்தது இந்தியா.10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
🎯 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை : இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி.





TODAY'S ENGLISH NEWS:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🎯 Donald trump calls Modi a 'true friend', lavisges praise on PM. ' story of Indian nation is a tale of astounding progress, a miracle of democracy'.
🎯 Principals desire  responsible hike in salary for guest lectures.
🎯 6 more exam centres for plus Two announced.
🎯 Jayalalithaa's  72nd birth anniversary celebrated. Distribution of welfare assistance marks occasion.
🎯 Government notifies protected Delta region in gazette.
🎯 Income scheme to cover fewer farmers. Kisan samman Nidhi will benefit only 12 core people : center urges West Bengal to join scheme.
🎯 Trump and Melania marvel at monument of love. The mughal - era mausoleum has been refurbished for the high- profile visit.
🎯 COVID - 19 scare drags equities . ICICI Bank, HDFC among top lossers in sensex pack ; Nifty down over 2%.
🎯 100 says the icing on New Zealand's victory cake. Southee and Boult  combine to inflict and emphatic 10 wicket defeat on India. Bring up a milestone win. India in New Zealand.













🌸  இனியகாலை வணக்கம்......✍️
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏
 இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       


























No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...