Tuesday, February 18, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 19.02. 2020.   புதன்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  ஊக்கம் உடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னுஞ் செருக்கு.                                                                                                                                                                                             🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வன்மை உடையேம் என்றுத் தம்மை தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. வளி மண்டலத்தில் நைட்ரஜன் அளவு?
விடை  :  0.78
2.  நைட்ரஜன் வாயுவை பூமியில் சேர்த்து வைப்பவை யாவை?
விடை : பாக்டீரியாக்கள்.                       
3. உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை பெற்றுள்ள நுண்ணியிரி?
விடை  : வைரஸ்.
4.   பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?
 விடை   : சித்தன்னவாசல்.
5.  இந்தியாவின் முதல் கலைக்களஞ்சியம் எந்த மொழியில் வெளிவந்தது?
விடை    :  வங்காளதேசம்
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Union is strength

🌸 ஒற்றுமையே பலம்

🌸 United we stand ; divided we fall

🌸 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சந்தோஷம்
************
பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில்
எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு
அறையில் நிரப்ப
சொன்னார்.இப்பொழுது
அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய
பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு பலூனாக எடுத்து
தேடினர் . ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5
நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும்
எடுங்கள்,அந்த பலூனில் யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,’இது தான்
வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம்,
ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.
இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய்
மலரட்டும்....










இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 குடியுரிமை திருத்த சட்டம் :  யாருக்கும் பாதிப்பு இல்லைஎன பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு.
🌸  நிகழாண்டு அரசு பொது தேர்வு : அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை.
🌸  என்சிஇஆர்டி பாட நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு.
🌸  இன்று முதல் பிளஸ் 1,    பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
🌸  1849 ஆம் ஆண்டில் நடப்பட்ட தமிழ் எண் மைல்கற்கள் செங்கிப்பட்டியில் கண்டெடுப்பு.
🌸  சென்னை பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை : கால அவகாசம் நீட்டிப்பு.
🌸  மாணவர்கள், இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் கணினி இணைய தளத்துடன் 11 நூலகங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்.
🌸  வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர் எம்பிபிஎஸ் இடங்கள் 249 ஆக உயர்வு.
🌸  ராணுவ கல்வி நிறுவனத்துக்கு பாரிக்கர் பெயர்.
🌸  தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என மத்திய அமைச்சர் தகவல்.
🌸  வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது கைவினை துறை என மக்களவை தலைவர் பாராட்டு.
🌸  கோவை - 19  வூஹான் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 1869 ஆக உயர்வு.
🌸  லாரியஸ் விருதுகள் 2020. ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் ஹாமில்டன் தேர்வு.
🌸  டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.
🌸  சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்ற குன்னூர் இளைஞர்.





TODAY'S ENGLISH NEWS:

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Pakistan to remind in Terror  financing watchdog's 'Grey list'.
🌸  Steps soon to deal with virus impact. Nirmala meets industry leaders.
🌸  Transport still remains a big question mark for employees.
🌸  High court stays conduct of fresh election in village panchayat. Petitioner challenges collector's order
🌸  Government lowers growth rate of revenue from commercial taxes.
🌸  UIDAI seeks proof of citizenship
🌸  WHO urges calm as China virus death toll nears 1900.
🌸  We have the team to beat newzealand in its backyard : Arun.
🌸  T20 Mining data is a important as hitting sixes and fours.







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...