Thursday, February 20, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21.02. 2020.      வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்நன்றி கொன்ற மகற்கு .                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
எந்த அறத்தை அழித்தவருக்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.   வேகமாக சுற்றும் கோளின் பெயர்?
விடை  :  புதன்
2.  ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
விடை : துங்கபத்ரா                       
3. செரிகல்சர் எனப்படுவது?
விடை : பட்டுப்பூச்சி வளர்ப்பு
4.  சாதாரணமாக மனிதனின் இரத்த அழுத்தம்?
 விடை   : 120/80Hg
5.  நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்?
விடை    :  கிரேக்கர்கள்.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Reason rules the world

🌸 அறிவே உலகை ஆள்கிறது
🌸  Variety is the spice of life

🌸  மாற்றம் என்பது மானிடத்தத்துவம்

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
துன்பம் வரும் வேளையில் காப்பாற்றுபவர்கள் யார்?

நண்பன்..!

 ஒரு காட்டில் யானை ஒன்று நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு நண்பனாவது வேண்டும் என்ற ஆசையில் நண்பர்கள் யாராவது கிடைப்பார்களா? என்று அந்த காட்டில் தேடிச் சென்றது. அப்போது யானை முதலில் மரத்தில் உள்ள ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா? என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய் அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. அதனால் நான் உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.

அடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று யானை என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ என்னைவிட பெரிய உடம்பினை கொண்டிருக்கிறாய். அதனால் என்னை போல் உன்னால் வேகமாக ஓடமுடியாது. அதனால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.

அடுத்ததாக செல்லும் வழியில் யானை தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. அதனால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.

கடைசியாக யானை நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் என்னைவிட உடம்பளவில் பெரியவனாக இருக்கிறாய். அதனால் உன்னை என் நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. இப்படியே ஒவ்வொரு விலங்கும் தன்னை நண்பனாக ஏற்றுக் கொள்ளாததை எண்ணி மிகுந்த கவலையுடன் யானை தனது இடத்திற்கு திரும்பிச் சென்றது.

அடுத்தநாள் காட்டில் இருந்த விலங்குகள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு வேகமாக ஓடி கொண்டிருந்தன. அந்த விலங்குகளுள் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது. அதற்கு கரடி, இங்கு உள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக இந்த காட்டில் உள்ள ஒரு புலி கொன்று சாப்பிட்டு வருகிறது.

அதனால் தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது. கரடி கூறியதைக் கேட்ட யானை நேராக புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி இது உனக்கு தேவையில்லாத விஷயம். நான் அப்படித்தான் அனைவரையும் கொன்று சாப்பிடுவேன். இங்கிருந்து பேசாமல் சென்றுவிடு என்றது.

உடனே யானைக்கு கோபம் வந்து புலியை தனது காலால் உதைத்து தள்ளியது. காயம் ஏற்பட்ட புலி காயத்துடன் அந்த காட்டை விட்டு ஓடிச் சென்றது. யானை, புலியை அடித்து துரத்தியதைப் பார்த்த விலங்குகள் அனைத்தும் எங்களின் உயிரைக் காப்பாற்றிய நீ உடம்பில் பெரியவனாக இருந்தாலும், இனி நீ எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்றுக்கொண்டன.

தத்துவம் :

துன்பம் வரும் வேளையில் காப்பாற்றுபவனே சிறந்த நண்பன்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸தமிழக அரசு நேற்று வியாழக்கிழமை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது காவிரி வேளாண் மண்டல சட்ட  மசோதா. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
🌸  தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
🌸 சென்னை ஐஐடியின் 20 ஆய்வகங்கள் உடன் 20 கிராமப்புற பள்ளிகளில் இணைப்பு. மேலும் 15 கிராம பள்ளிகளுக்கு விரிவாக்கம்
🌸 காவலர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌸 தமிழக காவல்துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
🌸 தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பிவைக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🌸 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 பெண் கல்வியை ஊக்குவிக்க போட்டிகள் நடத்த உத்தரவு.
🌸 தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களே இல்லை.  சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி.
🌸 கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை என அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்.
🌸 மக்கள் தொகை பதிவேடு மத்திய அரசிடம் தகவல் கேட்டு கடிதம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தகவல்.
🌸 வேளாண் மண்டலம் : பழைய திட்டங்களை தடை செய்தால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என முதல்வர் பழனிசாமி விளக்கம்.
🌸 தாய்மொழி பயன்பாடு நிர்வாகத் திறனை மேம்படுத்தும் என வெங்கைய நாயுடு கருத்து
🌸 பாலின சமத்துவத்தை ராணுவம் ஊக்குவித்து வருகிறது என தலைமை தளபதி எம் எம் நரவணே கருத்து
🌸 மேல்முறையீடு செய்வதற்கு முன் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு.
🌸 குழந்தைகள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 131 ஆவது இடம்.
🌸 மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை : ரூ 19 ஆயிரத்து 950 கோடி வழங்கியது மத்திய அரசு.
🌸 கரோணா வைரஸ் ஜப்பான் கப்பலில் 8 இந்தியர்களுக்கு பாதிப்பு
🌸 வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சலுகைகள் ரத்து இல்லை என அமித்ஷா தகவல்.
🌸 கரோனா வைரஸ் சீனாவில் இருந்து மேலும்  நூறு இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.
🌸 கரோனா வைரஸ் புற நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் சரிவு. தென் கொரியாவில் முதல் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 2119 ஆக உயர்வு.
🌸 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி இன்று தொடக்கம். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா -இந்தியா மோதல்.
🌸 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று தொடக்கம். இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்?
🌸 எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா ?
🌸 ஆசிய மல்யுத்தம் இந்தியாவுக்கு 3 தங்கம்.



TODAY'S ENGLISH NEWS:                             🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌸 Army hails supreme court for 'enabling judgement' There is equal opportunity for everyone and no gender  discrimination.'
🌸 Tamil Nadu House passes Bill to protect agriculture in Delta region. Ongoing projects not to be affected ; districts of Trichy , Ariyalur and Karur excluded.
🌸 NIT - T wins championship.
🌸 High labour wages hit marginal farmers in Delta region. Government should encourage farmers to purchase medium size harvesters by extending subsidies .
🌸 Only industrial districts omitted from Bill : CM. Trichy, Ariyalur, Karur won't fall under agriculture zone.
🌸 Tamil Nadu assembly passes Bill to protect agriculture in Delta region.
🌸 Tracing the history of Tamil Nadu's noon meal scheme.A School tiffin programme costing just one anna per student per day was  brought in as early as in 1920.
🌸 Supreme court pass interim order on Mahadayi tribunal's award. Implementation subject to judgement in appeals by 3 states.
🌸' Centre won't dilute Article 371' NDA government committed to preserving cultures, traditions of northeast says Shah.
🌸 ICRA revises outlook on Indian pharma industry to 'negative' shift from 'stable' amid likely virus impact on China supplies.
🌸 It could well be an engaging battle of attrition. The India - newzealand match-up may boil  down to strategy and execution of plans ; catching in the slips will be of great importance.
🌸 Indian women pin three gold in freestyle. ASIAN  WRESTLING.








🌸இனிய காலை வணக்கம் ....✍       
      🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...