Sunday, February 23, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 24.02. 2020.       திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: புறங்கூறாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
 தீதுண்டோ மன்னும் முயிர்க்கு .                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும் வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.   மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?

விடை  :  கட்டாக்
2.  செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய விண்கலத்தின் பெயர்?
விடை : பாத்ஃபைண்டர்.                     
3. கௌதம புத்தர் பிறப்பு எந்த ஆண்டு?
விடை : கிமு. 563.
4.  பாரம்பரிய பண்புகளைக் கடத்தும் மரபுப் பொருள்?
 விடை : நியூக்ளிக் அமிலம்.
5.  மிர் ( Mir ) என்பது?
விடை    :  ரஷ்ய விண்வெளி நிலையம்.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌸🌸The child is the father of man

🌸 விளையும் பயிர் முளையிலே தெரியும்


🌸 The early bird catches the worm

🌸 ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறியாவானா?

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு அறிகுறி என்பதை என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்
மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.
யாகாவாராயினும் நா காக்க..


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸ட்ரம்ப் என்று வருகை , அகமதாபாத் விழாக்கோலம் , முக்கியத்துவம் பெறும் பயணம்.
🌸  எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு.
🌸  நாசா செல்லும் நாமக்கல் பள்ளி மாணவிக்கு ரூ 2 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு.
🌸  தேசிய அச்சுறுத்தல் கருணா என சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து.
🌸  குடியுரிமை திருத்த சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா கருத்து.
🌸  ரூ 40 கோடியில் கைத்தறி ஆதரவு திட்டம் என ஓ.எஸ். மணியன் தகவல்.
🌸  மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள் விண்ணப்பிக்க மார்ச் 16 கடைசி .
🌸 கல்லூரிகளில் கணக்கு காட்டப்படும் போலி பேராசிரியர்கள்.
🌸 பள்ளிக் கல்வியில் ஆசிரியர் -  மாணவர் விகிதாச்சாரத்தை சரிபார்க்க உத்தரவு.
🌸 இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் : பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு.
🌸 ஃபாஸ்டேக் பாதையில் சென்ற 18 லட்சம் பேருக்கு ரூ 20 கோடி அபராதம்.
🌸 தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை,சிபிஎஸ்சி பள்ளிகளையும் இணைக்க நடவடிக்கை.
🌸 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 'ஞானமார்க்கம்' படிப்பு என துணைவேந்தர் பார்த்தசாரதி தகவல்.
🌸 ஜெயலலிதா பிறந்தநாள் விழா 72 அரிய நூல்கள் இன்று வெளியீடு.
🌸 தமிழகத்தில் 4 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு , சுய உதவி குழு விவரம், செயல்பாடுகளை மின்னணு முறையில் பதிய           'இ - சக்தி' திட்டம் , விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
🌸 ஆடம்பர பாதுகாப்பு வசதிகளுடன் அதிபரிடம் ஹோட்டல்.
🌸 பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மார்ச் 1இல் நடைபயணம் என தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு.
🌸 ஆறு மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் பள்ளிகள் என்று மீண்டும் திறப்பு.
🌸 ஜப்பான் கப்பலில் மேலும் 4 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு.
🌸 சிவகங்கை அருகே 130 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு .
🌸 கரோணா வைரஸ் பரவல் திடீர் அதிகரிப்பு , தென்கொரியாவில் அதிகபட்ச உஷார் நிலை, பலி எண்ணிக்கை 2443 ஆக உயர்வு.
🌸 முதல் டெஸ்ட் : நியூசிலாந்து 348, இந்தியா 144 / 4 . மயங்க் அகர்வால் 58.
🌸 மகளிர் டி20 உலகக்கோப்பை இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும் ஆ வங்கதேசம்?.





TODAY'S ENGLISH NEWS: 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Ahmedabad joint rally with Trump will be historic : Modi. US President to visit sabarmati ashram ahead of 'Namaste Trump' event.
🌸 'Regional integration pegged to SAARC revival ' Ranil wickremesinghe urges India ,Pakistan. to resolve issues.
🌸 Jammu Kashmir students to be back in uniforms.
🌸 New highway threatens Tiger territory in arunachal Pradesh. A 692 to kilometre road through the Pakke reserve has been cleared.
🌸 Exam season beings for school students counsellors teachers create support network to make the exercise stress - free.
🌸 Tamil bags first place in online contest.Twelve of out of 62 participants were first - time contributors.
🌸 COVID - 19 scare likely to divert air travellers to Europe , West Asia.
🌸 No country is doing enough to protect children's health, finds study . India ranks 131 among 180 countries in terms of best chance survival for its children, state WHO - UNICEF lancet report.
🌸 India in bind as Boult puts a spanner in the works. After a fine cameo with the bat, he strikes down three; Mayank does well again, Rahane digs in. India in New Zealand.









🌸இனிய காலை வணக்கம் ....✍       
 ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு