Monday, February 17, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18.02. 2020.   செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  ஊக்கம் உடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 உள்ளுவ  தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
  தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும், அவ்வுயர்வுக் கைகூட விட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
     
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?
விடை :  செல்
2. புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?
விடை :    ரிபோசோம்கள்                       
3.பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை  : மைசீலியம்.
4.  பட்டுப்புழு உணவாக உண்பது?
 விடை   : மல்பெரி இலை
5. சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டது?
விடை    :  15 நீதிபதிகளை கொண்டது
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Every man is mad on some point

🌸 சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே

🌸 Every pleasure has a pain

🌸 எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!










இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸  முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை அரசு அனுமதிக்காது என பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி.
🌸   ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
🌸   திருச்சி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1.04 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்.
🌸   ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு.
🌸   நீட் தேர்வு மார்ச் 27 முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்.
🌸   கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை தொடக்கம் காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
🌸   கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தகவல்.
🌸   உள்ளாட்சித் துறைக்கு ஒரே ஆண்டில் 12 தேசிய விருதுகள்.
🌸   கரோணா வைரஸ் :  தில்லியில் கண்காணிப்பில் இருந்தவர்களில் 200 பேர் வீடு திரும்பினர் . சீனாவில் மீதமுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவார் என தூதரகம் அறிவிப்பு.
🌸   கோவை  - 19 பரவல் எதிரொலி. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க சீனா ஆலோசனை. சீனாவில் 1770 பேர் பலி.
🌸   தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.
🌸   10 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை.

TODAY'S ENGLISH NEWS: 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Women army officers eligible for permanent commission : supreme court.
🌸   App for SHG products developed by NIT formally launched.
🌸   'Restore cheque payment system' Panchayat president make plea.
🌸   Government plans research on 'indigenous' cows.
🌸   Government presented opposite positions : supreme court. Policy statement endorsed permanent commission for SSC women officers in two sections.
🌸   China virus cases classes 70000.
🌸   Han Milton, Messi clinch world sportsman of the year honours.







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...