Wednesday, February 19, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 20.02. 2020.   வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  இனியவை கூறல்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 இனிய உளவாக இன்னாத கூறல்
  கனியிருப்ப காய் கவர்ந்தற்று.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுவிட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.  நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
விடை  :  காவிரி டெல்டா
2.   இளவரசர் வேல்ஸ் கப் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
விடை : கோல்ப்.                       
3.  விஜேந்தர் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
விடை  : மட்டைப்பந்து (கிரிக்கெட்)
4.  மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்?
 விடை   : 11.
5.  கிரிக்கெட் மை 'ஸ்டெய்ல்' என்ற புத்தகத்தை எழுதியவர்?
விடை    :  கபில்தேவ்
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Fact is stronger than fiction

🌸  கற்பனையை விட உண்மை விசித்திரமானது.

🌸 Failures are stepping stones to success

🌸  தோல்வியே வெற்றிக்கு முதற்படி

இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 கல்வி, கேள்வி இரண்டுமே மனிதனை நல்வழிப்படுத்தும்  என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் கற்றலிலும் சான்றோர் அறிவுரையைக் கேட்ட லிலும்  முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் தகுதியை உயர்த்திக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை குருவி அப்படியொரு
அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.
ஆனால்
போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது
ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன?
அவரிடம் குருவி வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது.
தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக
நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும்
சரி என்றது.
குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
குறிப்பிட்ட இடத்துக்கு மேல்
அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.
பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.
உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.
இன்னொரு சிறகுதானே,
தந்தால் போச்சு என்று
குருவியும் சம்மதித்தது.
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி,
அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்
வழி சொன்னவர்களுக்கெல்லாம்
ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.
முடிவாக,
அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே.
கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்
அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக
இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது
நரை கூடி, திரை வந்து
உடலும் மனசும் தளர்ந்து போகிறது.
எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."..


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 காவிரி வேளாண்மை மண்டலம் : அமைச்சரவை ஒப்புதல்.
🌸 ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் ரூ. 15 கோடியில் புதிய தங்குமிடம்.
🌸 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும்.
🌸 உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை அரசோடு மக்களும் இணைந்து செயல்படுதல் அவசியம்.
🌸 மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்.
🌸 வழிபாட்டுத் தலங்களில் நெகிழிப் பொருட்கள் விற்பனை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவாதம்.
🌸 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25 . 87 லட்சம்.
🌸 தொல்லியல் அலுவலர் பதவிக்கு சென்னையில் மட்டுமே தேர்வு என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
🌸 இந்தோனேசியப் பல்கலைக் கழகத்துடன் சென்னை பல்கலைகழகம் கூட்டு ஆராய்ச்சி.
🌸 ஊரக உள்ளாட்சிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு.
🌸 விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
🌸 ஆதரவற்ற பெண்களுக்கு ரூ 2 லட்சம் : முதல்வர் அறிவிப்பு. ஜெயலலிதா பிறந்த தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைபிடிக்கப்படும்.
🌸 நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
🌸 22 - ஆவது சட்ட ஆணையம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
🌸 இந்தியாவில் இரட்டிப்பாகிறது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை.
🌸 கொவைட் - 19 2 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை.
🌸 உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ.
🌸 ரஞ்சி கோப்பை காலிறுதி இன்று தொடக்கம்.



TODAY'S ENGLISH NEWS: 

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Trade agreement with U.S only delayed & not stuck says govt. It points to grand scale of trump Modi Motera rally as 'key deliverable' of visit.
🌸 President to inaugurate the Huddle on February 22.
🌸 RTI replies raise concerns about use of tea waste as adulterant. Many firms purchase it ostensibly for use in bio - fertilizer and plants.
🌸 Aadhaar notice triggers NRC fears. Unique identification authority of India unable to deliver notices to 52 person says officials.
🌸 Children made 1 in  10 calls to abuse helpline. About 3 lakh cases booked  last year.
🌸 Centre to form new law panel. Commission has been tasked with the review of existing legislation.
🌸 ART Bill proposes national registry of clinics.
🌸 A test of skill and character for kohli & co.







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...