Wednesday, February 12, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
நாள் : 13.02. 2020.      வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
  பேணித் தமராக் கொளல்.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.   செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?
விடை  : ரிபோசோம்
2."தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?                                        விடை : லைசோசோம்
3.  "செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை?
விடை  : மைட்டோகாண்டிரியா
4.   ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
 விடை   : காவலூர் (வேலூர்)
5.ஒரு மைல் என்பது எத்தனை கிலோ மீட்டர்
விடை    :  1.609 கி.மீ.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Take time by the fore lock

🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
🌸 The bough that bear most hang lowest

🌸 நிறை குடம் தளும்பாது





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
காட்டில் ஒரு சிங்கம்,

ஒரு ஆட்டை அழைத்தது.

''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.






இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸
  மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ . 147 உயர்வு.
🌸 ஆசியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் தமிழகம் என முதல்வர் எடப்பாடி                   கே. பழனிச்சாமி பெருமிதம்.
🌸 லக்னோ ராணுவ தளவாட கண்காட்சி.என்.ஐ. டி ஆராய்ச்சி மாணவரின் ராடார் தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு.
🌸 திருச்சி- அபுதாபி இடையே நேரடி விமான சேவை. மார்ச் 30 முதல் ஏர் இந்தியா மீண்டும் இயக்குகிறது.
🌸 விடைத்தாள் மாயமான விவகாரம் பல்கலைக்கழக துணை பதிவாளர் உள்பட 6 பேர் இடமாற்றம்.
🌸 குரூப்-4 நேரடி தேர்வு: தரவரிசை பட்டியல் வெளியீடு . பிப்ரவரி 19 - இல் சான்றிதழ் சரிபார்ப்பு என     டி.என்.பி.எஸ்.சிஅறிவிப்பு.
🌸 கருணை அடிப்படையிலான பணி வாரிசுகளின் அதிகபட்ச வயது வரம்பு 40 -ஆக நிர்ணயம்-புதிய வரைமுறைகள் வெளியீடு.
🌸 இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🌸 நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்துங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.
🌸 கொவை ட்- 19 வைரஸ்  பலி எண்ணிக்கை 1114 ஆக உயர்வு.
🌸 முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.
🌸 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம் 250/7.








TODAY'S ENGLISH NEWS: 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸 Pakistan jails jamaat-ud-dawa chief hafiz Saeed for terror financing. Found guilty of being part of a terrorist outfit and for possessing illegal property.
🌸 Kejriwal to be shown in on Sunday.
🌸 First convocation of IIIT- Trichy on February 15.
🌸 Over 5 lakh tonnes of paddy procured  so far : Minister.
🌸 LPG refill price hiked by up to Rs 149. But subsidy raised for domestic users.
🌸 China's virus cases fall, but toll hits 1,113.
🌸 WHO to decide on emergency status of ebola in Dr Congo.
🌸 Jonassen triggers India's collapse, spins it Australia's way.




🌸இனிய காலை வணக்கம் ....✍     
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...