பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 04.02. 2020. செவ்வாய்க்கிழமை.
திருக்குறள்: அதிகாரம்: சான்றாண்மை..
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
🌸பொருள்:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருளில்லாத குறையாகிய வறுமை இழிவானதன்று
.
🌸 பொதுஅறிவு:
1.மன்னார் வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?
விடை : வைகை ஆறு.
2. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
விடை : கேரளா .
3. அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
விடை : உத்திரப்பிரதேசம் .
4. தமிழ்நாட்டில் இரும்பு உருக்காலை அமைந்துள்ள இடம்?
விடை : சேலம்.
5 . இந்தியாவின் மிகப் பெரிய நீர் பாசன கால்வாய் எது?
விடை : சாரதா கால்வாய்.
பழமொழிகள் (proverbs) :
1. Faith is the force of life
🌸நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி
2. Good and Bad are not due others
🌸 நன்றும் தீதும் பிறர் தர வாரா
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும் முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
நீதிக்கதை:
**************
பிறரின் வார்த்தைகளால் பலவீனப்பட வேண்டாம்!
படித்ததில் பிடித்தது
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருடன் போட்டியிடக்கூட யாருமே முன்வருவதில்லை.
அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை!
நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.
பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.
எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.
எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக அறிவித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.
10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. இந்த நிலையில் அந்த இளைஞன், தான் போட்டியிட முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்ய சம்மதித்தார்கள்.
அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று, "என்னய்யா ஆச்சு உங்களுக்கு? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே! உடம்பைப் பாத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.
"எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லா தானே பேசுறேன்?" அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.
"ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும், வலிமையும் இப்ப இல்லையே? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்தினர்.
அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
"என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே, என்னாச்சு உங்களுக்கு?" என்று கேட்டுவிட்டு விடைபெற்றான். அவ்வளவுதான். வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது. அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.
இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும், வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.
பலருடைய வாழ்வில் தாங்கள் பலகீனப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணமே அவர்களை வீழ்த்தி விடுகிறது. எனவே பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படாமல் நமது எண்ணங்களாலும் நம்பிக்கைகளாலும் பலப்படுவோம்!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதி என பிரதமர் மோடி கருத்து.
🌸 கரோனா வைரஸ் : மாநில பேரிடர் என கேரள அரசு அறிவிப்பு.
🌸 கைப்பந்து போட்டி: திருச்சி கே.கே நகர் அரசு உயர்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
🌸 குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு : காவலர் உட்பட மேலும் 4 பேர் கைது.
🌸 5 ,8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு : மாணவர்கள் அச்சம் அடைய வேண்டாம்.
🌸 குரூப் 1 தேர்வு - முழுநேர கல்லூரியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கோரி மனு.
🌸 5,8 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் மதிப்பீடு - பள்ளி கல்வி துறை விளக்கம்.
🌸 5,8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காது என பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் உறுதி.
🌸 கரோனா வைரஸ் சீனாவில் பலி 361 ஆக அதிகரிப்பு. வூஹானில் 10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை திறப்பு.
🌸 செர்பிய ஜூனியர் குத்துச்சண்டை இந்தியாவுக்கு 6 தங்கம்.
🌸 காயத்தால் ரோகித் சர்மா விலகல் இந்தியாவுக்கு பின்னடைவு.
🌸 விடைபெறுகிறார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்.
TODAY'S ENGLISH NEWS:
🌸 Supreme court to frame issues for nine judge Bench hearing religious rights. CJI knowledges objection to wider review post - sabarimala is a 'formidable point'.
🌸 Coronavirus outbreak declared a state calamity in Kerala. Third case confirmed in kasaragod ; 84 under treatment.
🌸 DGP inspects security arrangements at big temple.
🌸 Get ready for The Hindu young world quiz tomorrow.
🌸 Group - II A service scripps too were tampered with.
🌸 Double standards in dealing with malpractices in TRB and TNPSC exams flayed.
🌸 Most missing women from Maharashtra, M.P. States record highest number of missing children's women cases in 2016, 2017 and 2018.
🌸 India major blow, Rohit ruled out of newzealand tour.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment