Friday, April 12, 2024

பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன்(2024) மாதம் வெளியாகிறது

 பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன் மாதம் வெளியாகிறது


         பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41,485 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.

         தமிழ் மொழித் திறன் அறிவுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றது.

       அதைத் தொடர்ந்து, தேர்வுக்கான விடைக் குறிப்புகள் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தேர்வர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புகள், நடத்தப்பட்டு பணி நியமனத்துக்கு பள்ளி க்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


(சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024, தினமணி நாளிதழ் செய்தி)

Wednesday, April 3, 2024

TNSET EXAM 2024 FOR ASSISTANT PROFESSOR

 உதவிப் பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்' தேர்வு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

             உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) திங்கட்கிழமை ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

          தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்'(தேசிய தகுதித் தேர்வு) அல்லது 'செட்' (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

          அந்த வகையில் இந்த ஆண்டு 'செட்' தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

           அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு ஜூன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

          தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.2500, எம் பி சி , டி என் சி வகுப்புக்கு ரூ.2000, எஸ் சி , எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ஆம் பாலினத்தவர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

         இந்த தேர்வுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன.

            முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சி திறன், சிந்தனைத் திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம் பெறும்.2-ஆவது தாளில் சார்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேர்வு முறை உள்பட விவரங்களை www.msutnset.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (முன்னதாக செட் தேர்வுக்குரிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது)


Friday, March 29, 2024

”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு

 "தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம். 

For booking 


https://tnwwhcl.in/hostel- deatails




Thursday, March 28, 2024

'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

 'நெட்' மதிப்பெண்கள் மூலம் பிஎச்டி சேர்க்கை யுஜிசி அறிவிப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

புது தில்லி மார்ச் 28; 2024 - 25 கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு (நெட்) மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான (phd) சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: 2024-25 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நெட் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பிஎச்டி பட்டத்துக்கான சேர்க்கையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்துவதை தவிர்த்து விட்டு ஒரே முறையின் கீழ் சேர்க்கை நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை நெட்தேர்வு நடத்தப்படுகிறது. இருமுறையில் ஏதேனும் ஒருமுறை பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரலாம். இந்த நடைமுறை நாட்டில் நல்ல கல்விச் சூழலை மேம்படுத்துவதோடு அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றார்.


         *வெள்ளிக்கிழமை 29 மார்ச் 2024 தினமணி நாளிதழ் செய்தி (பக்கம்-10)*

Thursday, November 30, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 01-12-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.12. 2023.  வெள்ளிக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
.                                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. உ.வே.சா எத்தனை நூல்களை பதிப்பித்தார்?

விடை  :  87 நூல்கள்.

 2. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?

விடை :  அரசில் கிழார்.  
                 
3. வெண்கலம் எதனால் ஆன கலப்புலோகம்?

விடை : காப்பர் மற்றும் டின்..

4.  கம்பியில்லா தந்தி கண்டுபிடித்தவர் யார்?

 விடை : குலீல்மோ மார்கோனி.

5.  நெப்போலியன் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் போர்?

விடை    :  வாட்டர்லூ

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸God helps those who help themselves

🌸 தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்

🌸 God is love

🌸 அன்பே கடவுள்


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 சென்னை புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம். வங்கக் கடலில் டிசம்பர் 3-ல் புயல் உருவாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.

🎯 மக்கள் மருந்தகம் எண்ணிக்கை25000 ஆக அதிகரிக்கிறது. திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

🎯 செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறை சேவை. புதிய ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்து அமைச்சர் தகவல்

🎯 மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை மாற்று நடவடிக்கை.

🎯 கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு.

🎯 அரியலூர் மாவட்டத்தில் நாளை மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம்.

🎯 மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

🎯 வினா வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

🎯 பேரவை செயலருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு . முதன்மைச் செயலாளராக பதிவு உயர்வு

🎯 அதிகாரத்தில் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

🎯 தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் ஒரு நாள் போட்டி தொடருக்கு கே எல் ராகுல் கேப்டன். டி 20 தொடரில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியை வழி நடத்துவார்.

🎯 குஜராத் அணிக்கு வில்லியம்சனை கேப்டனாக நியமித்திருக்கலாம் என டிவில்லியஸ் கருத்து

🎯4_வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல். டி 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

🎯 நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபார சதம். இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேசம் 212 ரன்கள் குவிப்பு.

🎯 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக தகுதி பெற்ற உகாண்டா.

🎯 தேசிய சீனியர் அட்யா பட்டியா போட்டி தமிழக அணிகளுக்கு வெண்கலம்.





TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

.🎯 Hit job is not our policy says India on US charges

🎯2 electrocuted during heavy rain in Chennai.

🎯 Sambhav coverage area shrinks by over 50% in Trichy district says officials

🎯 Opportunities growing in nuclear energy field scientist tells students

🎯 IMD says cyclone likely in bay, predicts heavy rain in Delta districts till December 4.

🎯 Sand mining case effect: government officials now need Prior nod for producing official documents during enquiry.

🎯 National medical commissions comes to rescue of displaced medical students in Manipur.

🎯 UP Government declains opposition demand for a caste census.

🎯 India set to launch x-ray polarimeter satellite says ISRO

🎯 Gasa truce extend by one day as hostage talks continue

🎯 India has another shot at series win even as Australia looks to stay alive

🎯 Shanto's unbeaten ton  puts Bangladesh in control







🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முதுகலைத்தமிழாசிரியர்  
அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.
                                   


Wednesday, November 29, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (30-11-2023)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30.11.2023.   வியாழக்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: மக்கட்பேறு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.நீரில் கரையாத பொருள் எது?

*விடை* : கந்தகம்

2.நீரில் கரையாத வாயு எது ?

*விடை* : நைட்ரஜன்

3.பளபளப்புக்கொண்ட அலோகம் ?

*விடை* : அயோடின்

4.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ?

*விடை* :  ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

5.இரும்பு துருபிடித்தல் என்பது ?

*விடை* : ஆக்சிஜனேற்றம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

திரும்பி வந்த மான்குட்டி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு காடு. மரத்தடியில் இரண்டு புள்ளிமான்கள் படுத்திருந்தன. அம்மா மான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும் போல. தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.

“ஏம்மா, தனியாகப் போகக் கூடாதா?”

“நல்லவேளையாக இந்தக் காட்டில் சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக்காரர்களால் எந்த நேரமும் ஆபத்து உண்டு.”

“எப்படி அம்மா?”


“உன்னைப் போல் குட்டியாக இருந்தபோது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, படாதபாடு பட்டேன்.”


“ஐயோ... அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”


“ஒருநாள் நான் துள்ளிக் குதித்துச் சென்றுகொண்டிருந்தேன். என் கால்கள் அங்கே விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக்கொண்டன. வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான். கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக்கொண்டு போனான்.”

“எங்கே அம்மா?” என்று பதற்றத்துடன் கேட்டது குட்டி மான்.


“என்னை ஒரு பணக்காரரிடம் விற்றுவிட்டான். அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். என்னைக் கட்டிப் போட்டார்கள். பிரியமாக இருந்தார்கள். முள்ளங்கி, கேரட், முட்டைகோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து வருந்தினார்கள். அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும் தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணீரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும் உடம்பு இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் படுத்துவிட்டேன். என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, ‘அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீங்க? பாவம், இதற்கு உடம்பு சரியில்லை. செத்துப்போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. காட்டில் விட்டு விடலாம்’ என்றாள். அன்று மாலையே ஒரு வண்டியில் என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “பங்களா, தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய காய்கறி, பழங்கள்... இவ்வளவு இருந்தும் இங்கே வந்துவிட்டாயே?” என்றது குட்டி மான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள். சுதந்திரமாகத் துள்ளித் திரிய முடியவில்லை. கேவலமான வாழ்க்கை.”


இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன. ‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன்தான் திரும்பி வந்ததோ?’ என்று குட்டி மான் நினைத்தது. ஒருநாள் இரவு நேரம். யாருக்கும் தெரியாமல் குட்டி மான் புறப்பட்டது. காட்டின் எல்லைக்கு வந்துவிட்டது. ‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஊருக்குள் போக வேண்டும். பங்களா ஒன்றுக்குள் புகுந்துகொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். கட்டி அணைப்பார்கள். நிறைய தின்னத் தருவார்கள்’ என்று நினைத்தது.

அப்போது ஒரு முயல் ஓடி வந்தது. அதைப் பார்த்ததும் குட்டி மான், “முயலண்ணே, எங்கிருந்து ஓடி வருகிறாய்?” என்று கேட்டது.

“சிறிது தொலைவில் உள்ள நகரத்திலிருந்துதான். என்னையும் இன்னொரு முயலையும் வேடன் பிடித்துச் சென்று, பணக்காரர் வீட்டில் விற்றுவிட்டான். ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்த வீட்டுக் குழந்தை உமா என்னிடம் அன்பாக இருந்தாள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சமையல்காரர் எங்கள் அருகே வந்தார். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தார். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தார். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று அதைத் தூக்கிக்கொண்டு சமைக்கப் போய்விட்டார். என் உடம்பு நடுங்கியது. தப்பிக்க நினைத்தேன். ஆனாலும், உமாவைப் பிரிய மனம் வரவில்லை.

இன்று அதிகாலை உமா என்னிடம் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும் கலங்கிய கண்களுடன், ‘ஓடு, ஓடு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை. உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது?”

“உண்மையா?”

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற பிராணிகளை மனிதர்களில் பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள்; பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.” ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துதான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்து தமிழ் திசை நாளிதழ் செய்திகள்:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமரிடம் 41 தொழிலாளர்களும் நன்றி தெரிவித்தனர். சுரங்க பாதையில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

🎯 தெலுங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது.

🎯 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக டிசம்பர் 2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🎯 புவியில் மற்றும் சுரங்கத் துறையை அதிகாரிகள் 49 பேர் இடம் மாற்றம்.

🎯 நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களில் டிசம்பர் 1 முதல் மாணவர் சேர்க்கை.

🎯 அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய நடைமுறை நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது.

🎯 பி சி, எம் பி சி கல்லூரி மாணவர்களுக்கு ரூ 12 கோடியில் 5 விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🎯 தமிழகத்தில் சிறு நடுத்தர நூற்பாலைகள் மூடப்பட்டதால் 1.50 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

🎯 விவசாய பயன்பாட்டுக்காக சுய உதவி குழு பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் திட்டம் பிரதமர் மோடி என்று தொடங்குகிறார்.

🎯 உலக கோடீஸ்வரர் பட்டியல் 19 ஆவது இடத்தில் அதானி.

🎯ரூ 2000 மேல் டிஜிட்டல் பணப்பரிவாத்தினை புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்.

🎯 பனிப்பொழிவால் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியாமல் போனது என சொல்கிறார் சூரியகுமார் யாதவ்

🎯 வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் சதம் விலாசல்.

🎯 விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழக அணி பரோடாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் உயர்த்தி ஹாட்ரிக்  வெற்றியை பதிவு செய்தது

🎯 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீட்டிப்பு.

🎯 சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி.


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
The Hindu newspaper-Thursday November 30
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 🎯 U.S blames Indian official for plot against pannun

🎯 Thirunallar gears up for 'sanii peyarchi' on December 20

🎯 Book fair draws school and college students in droves at Trichy

🎯 Water level in mettur dam stands at 66 feet.

🎯 Parents seek action against teacher for 'beating student' for scoring no marks.

🎯 Telangana goes to polls today

🎯 Free food grain scheme to continue for five more years.

🎯 Centre to provide drones to 15000 women's groups for use in agriculture.

🎯 Workers in AIIMS all undergoing check up

🎯 On final day the case fire, mediators seek extension of Israel Hamas deal.

🎯 Dravid and co.reappointed for another term.

🎯IND vs AUS T20Is | Ruturaj Gaikwad — racking up the runs in true classical style, with a touch of artistry

🎯ISL-10 | Honours even as Blasters and Chennaiyin play out a six-goal thriller

🎯 Tamil Nadu beats Baroda in a low scoring encounter.

🎯 New Zealand trials Bangladesh despite Williamson's century




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி 
திருச்சி மாவட்டம் - 621305
அலைபேசி எண் : 9789334642.

Monday, November 27, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (28-11-2023)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28/11/2023         செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
.       ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்தற்கு.

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்  காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?

விடை : கோபால கிருஷ்ண கோகலே

2.‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?

விடை : பகுதி III

3.பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?

விடை : சரத்து 19

4.கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.?

விடை : 86-வது

5.குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?

விடை : உத்திரமேரூர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 A little learning is a dangerous thing
🌷 அரைகுறை படிப்பு ஆபத்தானது

🌹 A little stream will run a light mill.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

 *தைரியமும் தன்னம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு உரம்*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  500 ரூபாய்


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி

” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.


... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து

“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.


அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்

அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.


அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,

தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.


இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க


    இன்றைய முக்கிய செய்திகள்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


    🎯 சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி சிங் சிலை திறப்பு. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வி. பி .சிங் மனைவி சீதா குமாரி மகன் அஜயா சிங், உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் பங்கேற்றனர்.

    🎯 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்பிக்கும் நாள் டிசம்பர் 7 வரை நீட்டிப்பு.

    🎯 அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக் கடலில் டிசம்பர் 1ஆம் தேதி புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

    🎯 பஞ்சபூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் தரை தளத்தில் ஏ.சி அமைக்க அரசுக்கு கருத்துரு.2 எஸ்க லேட்டர்கள்,3 லிப்ட்டுகள் அமைக்கவும் திட்டம்.

    🎯 பெரம்பலூர் எறையூரில் காலனி தொழிற்சாலை இன்று தொடக்கம். காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    🎯 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் பழ மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.

    🎯 வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்காக 15. 33 லட்சம் பேர் விண்ணப்பம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தகவல்

    🎯 நாடாளுமன்ற கூட்டத்தொடரை சமூகமாக நடத்த டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சி கூட்டம் என மத்திய அரசு அழைப்பு.

    🎯டிசம்பர் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்.

    🎯 உத்ரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் 41 பேரை மீட்க'எலி வளை'தொழிலாளர்கள் தீவிர முயற்சி. 36 மணி நேரத்தில் மீட்க முடியும் என நம்பிக்கை.

    🎯 சீனாவில் புதிய வைரஸ்  பாதிப்பு அதிகரிப்பு. நுரையீரல், சுவாச பாதிப்பை கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

    🎯 டேவிஸ்கோப்பை டென்னிஸ் தொடர் 47 வருடங்களுக்கு பிறகு பட்டம் வென்றது இத்தாலி.

    🎯 ஹாக்கியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது ஹரியானா. பட்டம் வெல்வதற்கு பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்சை.

    🎯3-வது டி 20 யில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

    🎯 2004 ஆம் ஆண்டு டிசம்பர் டி20 உலக கோப்பையில் இந்தியா கடும் போட்டியாளராக இருக்கும் என சொல்கிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.





    TODAY'S ENGLISH NEWS: 

    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    🎯 Manual drilling on to reach stuck workers.

    🎯 Chief minister reiterates demand for caste census in Tamilnadu.

    🎯 Trichy- Dindigul National Highway winding work reaches final stage.

    🎯 Thiruvarur- Karaikudi railway line electrification likely to be completed by December 2024

    🎯 Aavins milk sales in Chennai have crossed 15 lakh letters a day: Minister.

    🎯 India has charted space road map for up to 2047, ses chandrayaan 3 project chandrayaan-3 project chief.

    🎯IND vs AUS third T20I | Upbeat India will be keen to seal the series straightaway

    🎯India will be serious challenger for 2024 T20 World Cup title: Ravi Shastri

    🎯Hockey Nationals | Haryana to clash with Punjab in the final

    🎯Indian Premier League 2024 | Green signal for Hardik’s Mumbai Indians move










    இனிய காலை வணக்கம் ....✍       
               
    இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
    அரசு  மேல்நிலைப்பள்ளி
    கோவில்பட்டி , 
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621305
     
    அலைபேசி எண் : 9789334642.

    பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன்(2024) மாதம் வெளியாகிறது

      பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வு முடிவு: ஜூன் மாதம் வெளியாகிறது           பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2,582 காலி...