பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 04/07/2022 திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: இனியவை கூறல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களை கூறுதல் கனியிருக்க காயை உண்பது போல் ஆகும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1927
2. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?
விடை: ரிப்பன்
3. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?
விடை: கஞ்சன் ஜங்கா (8586 மீட்டர்)
4. இந்தியாவின் மிக உயரமான பீடபூமி?
விடை: லடாக் (ஜம்மு - காஷ்மீர்)
5. இந்தியாவில் வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது?
விடை: பரம் வீர் சக்ரா
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹Brikness will bring success
🌹சுறுசுறுப்பு வெற்றி தரும்
🌷 Whatever is worth doing , is doing well
🌷 செய்ய வேண்டியதை சரியாகச் செய்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸மனமும் அறிவும் ஒன்றுபடுதலே மாணவனுக்கு அழகு என்பதை அறிவேன்.
🌸எனவே மனதையும் அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
பொறுப்பு
=========
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.
🎯 ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு.
🎯 பகுதி நேர பி.இ பட்டப்படிப்பு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
🎯 ரூபாய் 1000 வழங்கும் கல்வி உதவி திட்டத்திற்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார்.
🎯 தமிழகத்தில் புதிதாக 2672 பேருக்கு கரோனா ; சென்னையில் 1072 பேருக்கு பாதிப்பு
🎯ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் எச்சரிக்கை
🎯காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் பயங்கரவாதிகள்!
🎯 செஸ் ஒலிம்பியாட் : 3வது அணியை அறிவித்தது இந்தியா
🎯 நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 3 days holiday notice for schools and colleges in Karaikal district due to cholera.
🎯 Invitation to apply for temporary teaching post.
🎯 Tamil Nadu government notification that part-time B.E degree program can be applied from today.
🎯 Students and parents complain about problem in uploading details online for Rs 1000 educational assistance scheme.
🎯 2672 new corona cases in Tamil Nadu; 1072 people affected in Chennai
🎯I will become a dictator if disorder and corruption increase: CM warns
🎯Terrorists waiting at the border to infiltrate into Kashmir!
🎯 Chess Olympiad: India announced the 3rd team
🎯 Heavy rain is likely to occur in Nilgiris, Coimbatore, Tirupur, Theni and Dindigul districts for the next five days, according to the Meteorological Department.
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment