Monday, July 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (12/07/2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 12/07/2022      செவ்வாய்க்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  அருள் உடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

 அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.                                                                                                                                                                                
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.பி.ஸி.ஜி. எதனைத் தடுக்க உதவுகிறது?

ஆ) காசநோய்

2.மணலின் ரசாயனப் பெயர்?

விடை :  சிலிகன்-டை-ஆக்ஸைடு

3.இந்தியாவின் பெரிய இரும்புத் தாது சுரங்கம் எங்குள்ளது?

விடை : பெய்லாடிலர்

4. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர்?

 விடை : வேதநாயகம் பிள்ளை

5.இருதயத்தின் அசைவுகளை அறிய உதவுவது?

விடை : கார்டியோகிராம்



 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.

🌷Blood is thicker than water
🌷தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

*சிங்கமும் தந்திரமான முயலும்*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.
அதற்கு முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.
முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.
“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க” அப்படி சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.
மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது. 
அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது. 

அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன… என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவைப் கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது. 
“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.

முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
*நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது*




🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்  ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டும் என தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🎯திருப்பத்தூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

🎯திண்டுக்கல், கொடைக்கானல் வனப் பகுதியில் 16,000 ஹெக்டேரில் அந்நிய மரங்களை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்

🎯கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள்: மத்திய அமைச்சரிடம் வானதி கோரிக்கை

🎯திருச்சி மலைக்கோட்டையில் உருவாகும் பிரமாண்ட புராதன பூங்கா பணியில் தொய்வு

🎯கர்நாடகாவில் கனமழை | மேட்டூர் அணையில் இருந்து 15,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

🎯முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீர் தேக்க வேண்டுமெனில் தமிழக அரசு உடனடியாக பேபி அணையை கட்டி பலப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிவிப்பு

🎯புதிய நாடாளுமன்றக் கட்டிட மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

🎯மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு சீனாவை முந்தும் இந்தியா - ஐ.நா கணிப்பு

🎯 ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது ஆடவர் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் , பெண்கள் பிரிவில் தென் ஆப்பிரிக்க வீரர் மரிஜோன் கப்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது


TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯94-year-old Bhagwani Devi Dagar wins gold in World Masters Athletics Championships

🎯Putin decree gives all Ukrainians path to Russian citizenship

🎯From media to medicine to Apple Health V-P: Sumbul Desai’s Indian roots is common strand

🎯Sri Lanka crisis Live Updates: President Gotabaya Rajapaksa flown to airbase as exile rumours spread, says report

🎯New coronavirus mutant BA.2.75 raises concerns in India and beyond

🎯RBI announces measures for international trade settlement in rupees

🎯Sri Lanka records innings victory over Australia in 2nd test

🎯BCCI to finally seek Abey Kuruvilla’s replacement as fifth selector

🎯India women’s cricket squad for 2022 Commonwealth Games announced




🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...