Wednesday, July 13, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (14/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14/07/2022      வியாழக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும்? 

விடை : பீடபூமி 

2.நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன? 

விடை: விண்துகள்

3.கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 

விடை : கி.பி.1600

4.வேலூர் புரட்சி நடைப்பெற்ற ஆண்டு? 

விடை : கி.பி.1857 

5.அக்பர் தோற்றுவித்த மதம்?
விடை :  தீன் – இலாஹி


 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Good counsel has no price
🌹நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது.


🌷அனுபவமே அருமையான ஆசான். 
🌷Experience is the best teacher



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட  ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.

துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.

தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.

‘அருமை’ என்று பாராட்டிய துறவி, ‘என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்’ என்றார்.

அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.

ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.

தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.

அடித்து விட்டு, ‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று  நின்று கொண்டார்.

இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.

அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.

—————————————————————————————————

மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஆகஸ்டு 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

🎯பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை, இன்று பதிவிறக்கலாம்.அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு.

🎯நிறைவேறும் பல்லாண்டு கனவு - சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு விரைவில் வீடு

🎯நிறைவேறும் பல்லாண்டு கனவு - சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு விரைவில் வீடு

🎯கீழடியில் புதிய அருங்காட்சியகம் கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு: அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

🎯ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: ஒன்றிய அரசு தகவல்

🎯மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேச்சு..!!

🎯 நீட் தேர்வை ஒத்திவைக்க கூறும் மனு : தில்லி நீதிமன்றம் இன்று விசாரணை

🎯 பட்டப்படிப்பு சேர்க்கை காலக்கெடு பல்கலைக்கழகங்களுக்கு யூசிஜி  வலியுறுத்தல்.

🎯பால்வெளி கிரகத்தில் தண்ணீருக்கான அறிகுறி: ஜேம்ஸ் வெப் அடுத்த கண்டுபிடிப்பு

🎯இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு ஓட்டம்: ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்; அதிபர் பொறுப்பை ஏற்றார் ரணில்; பிரதமர் மாளிகை முற்றுகையால் பதற்றம்

🎯ஆஸி. தொடரிலிருந்து பின்வாங்கிய தெ.ஆப்பிரிக்கா: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்.

🎯ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசை: பும்ரா மீண்டும் நம்பர் 1

🎯2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்த இந்தியா


TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Schools gear up for International Chess Olympiad

🎯Traffics fines to get QR-based payment option soon

🎯CM Stalin tests positive for COVID-19

🎯Birth certificates of children born after August 2015 will be available on DigiLocker

🎯India ranks 135 out of 146 in Global Gender Gap Index

🎯Adults to get third dose free at govt centres for 75 days

🎯Why the lions in the emblem for the new Parliament are disturbing

🎯Ranil Wickremesinghe becomes Sri Lanka’s acting President as Gotabaya Rajapaksa flees to Maldives

🎯In diversity of candidates for UK’s next PM, a soft power lesson for India

🎯India overtake Pakistan in latest ICC ODI rankings after big win over England







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...