Sunday, July 17, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயறல்பாடுகள் (18/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18/07/2022      திங்கட்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  இன்னாசெய்யாமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்?

விடை  : எம்.ஜி.ராமச்சந்திரன்

2.தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?

விடை : மதுரை

3.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?

விடை : 1955

4. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்?

விடை : மறைமலை அடிகள்

5.தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?

விடை : விருதுநகர்

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

மாவீரன் நெப்போலியன்

*************************

#உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்..!!

#தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..!!

#சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..!!

#அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்..!!

#ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..!!

#சிறிது காலத்தில் இறந்தும் போனார்..!!

#பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..!!

#அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறீப்பு சொல்லி இருந்தது..!!

#ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..!!

#உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி..!!

#அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..!!

#மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி..!!

#பதட்டமும் மன உளைச்சலும் அவர்களீன் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது..!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯கரோனாவிலிருந்து முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தார்: இன்று டிஸ்சார்ஜ் என காவேரி மருத்துவமனை அறிவிப்பு

🎯மேட்டூர் அணையில் இருந்து 1,33,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோரங்களில் போலீஸார் கண்காணிப்பு

🎯இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது - பிரதமர் மோடி எச்சரிக்கை

🎯 இலவச தொழிற்பயிற்சி பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🎯வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.!

🎯அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

🎯சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் - இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

🎯IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் - இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chennai Metro plans direct trains between Central and Koyambedu via Anna Salai

🎯All set for Presidential election; Droupadi Murmu has an edge over Yashwant Sinha

🎯Child tests negative for monkeypox in Andhra Pradesh

🎯Power Grid arm seeks timely payment of transmission charges by Tangedco

🎯Chandrasekhar Rao speaks of conspiracy behind heavy flooding in the Godavari basin

🎯Sri Lanka crisis: Centre calls all-party meet on Tuesday; DMK, AIADMK demand India’s intervention

🎯U.K. PM race | At debate, Truss says she will call out Putin in front of “swing” countries like India, Indonesia

🎯P.V. Sindhu clinches Singapore Open title

🎯Anjum Moudgil wins rifle 3-position bronze

🎯IND vs ENG: 18 till I die – then Pant goes bonkers







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...