பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 13/07/2022 புதன் கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: கல்வி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
கெழுமையும் ஏமாப் புடைத்து.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
2.புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?
விடை : பல்லவர் கால கல்வெட்டுகள்
3.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
விடை : ஒடிசா
4.காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
விடை : ஒக்கேனக்கல்
5. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
விடை : 2004
பழமொழிகள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 A little learning is a dangerous thing
🌷அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
🌹 Knowledge is power
🌹அறிவே ஆற்றல்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"
ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.
"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.
அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.
தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.
விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.
ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.
இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.
இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.
அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு.
அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.
சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯மேட்டூர் அணைக்கு 90,873 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு: 68-வது முறையாக 100 அடியை எட்டிய நீர் மட்டம்
🎯உயர் கல்வி அமைச்சர் புறக்கணித்தாலும் திட்டமிட்டபடி நடக்கவுள்ள காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா
🎯கண்காட்சி, நிகழ்ச்சிகள் நடத்தலாம் - பொழுதுபோக்கு இடமாக மாறும் சென்னையின் 100 ஆண்டு பழமையான கட்டிடம்
🎯தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளதாக டிவிட்டரில் தகவல்
🎯ஒரே நாளில் 12 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி
🎯ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை கியூட் நுழைவு தேர்வுக்கு ஏற்பாடு: தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!
🎯இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வி: விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல்
🎯IND vs ENG | 19 ரன்கள், 3 மெய்டன், 6 விக்கெட் - பும்ராவின் மிரட்டல் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து
🎯தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Why new Sri Lanka needs a Tamil leader
🎯Tamil Nadu CM Stalin tests positive for Covid, under isolation
🎯IISc researchers develop technology to make green hydrogen from biomass
🎯Bengaluru: HAL allots Rs 42 crore for first prototype of pseudo satellite
🎯Monsoon tourism picks up in Karnataka; KRS dam, Jog falls see rise in footfall
🎯Centre has no new data on child labour
🎯IAS officer Ashwini Bhide made the MD of Mumbai Metro Rail Corporation
🎯Eight candidates qualify in race to be next U.K. Prime Minister
🎯U.S. ‘rejects’ Gotabaya Rajapaksa’s visa request after recent ousting by mass protests
🎯NASA releases next wave of images from James Webb Space Telescope
🎯England vs India first ODI: Bumrah bamboozles England to script 10-wicket win for India
🎯Women's Hockey World Cup | Savita's heroics hand India first win
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment