Monday, July 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (26/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 26/07/2022         செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.



🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
   


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1. 'உன்னை போல் ஒருவன்'- என்ற நாவலின் ஆசிரியர்?

விடை : ஜெயகாந்தன்

2. ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர்?

விடை : சத்யஜித்ரே

3. 'வேங்கையின் மைந்தன் என்னும்' புத்தகத்தை எழுதியவர்?

விடை : அகிலன்

4. பென்சிலினை கண்டுபிடித்தவர் யார்?

விடை : அலெக்சாண்டர் பிளமிங்

5. எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

விடை : தஞ்சாவூர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Make hay while the sun shines.
🌹காற்றுள்ள போதே தூற்றிக்கொள்


🌷The patient will rule the world.
🌷பொறுத்தார் பூமி ஆழ்வார்.



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 சுத்தமும் சுகாதாரமும் சுகமான வாழ்வை தரும் என்பதை அறிவேன்.

     🌸எனவே என்னையும் என்னை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

நடப்பதெல்லாம் நன்மைக்கே 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
*நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை*


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯இன்று கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்

🎯உச்சரிப்பு போட்டியில் சாம்பியன்: மாணவிக்கு கவர்னர் பாராட்டு

🎯நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

🎯பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு; சென்னை மாநகராட்சி அதிரடி

🎯திருச்சியில் முதல் முறையாக மாநில துப்பாக்கி சுடும் போட்டி 1300 வீரர்கள் பங்கேற்பு

🎯ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு
 🎯மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

🎯முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்ட தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளின் சம்மதம் தேவை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

🎯 இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு.

🎯2-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து திரில் வெற்றியை தந்த இந்திய அணி

🎯உலக தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை: வாழ்த்து மழையில் நீரஜ் சோப்ரா

🎯9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 






TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Stalin distributes bicycles to Class XI students in Chennai

🎯CM Stalin launches programme for inclusive education

🎯Droupadi Murmu takes oath as 15th President of India

🎯Poor and downtrodden see their reflection in me, says Murmu

🎯Tamil Nadu CM Stalin greets India’s 15th President of India Droupadi Murmu

🎯Monkeypox virus has evolved’

🎯Northern Ireland's David Trimble, Nobel Peace Prize winner, dies at 77

🎯Chess Olympiad torch reaches Tamil Nadu

🎯West Indies vs India 2nd ODI | WI win toss, opt to bat against India

🎯Record-breaking Swede Armand Duplantis soars at World Athletics Championships in Eugene













இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...