பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 05/07/2022 செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: அடக்கமுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
.தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்
2. வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
3. தந்தியை கண்டுபிடித்தவர் யார்?
விடை : மார்க்கோனி
4. தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்?
விடை : தாமஸ் செயிண்ட்
5.உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
விடை : சவுதி அரேபியா
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 A single tree doesn't make an orchard
🌹 தனி மரம் தோப்பாகாது
🌷 A thorn can only be removed with another thorn
🌷 முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸மனமும் அறிவும் ஒன்றுபடுதலே மாணவனுக்கு அழகு என்பதை அறிவேன்.
🌸எனவே மனதையும் அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.
வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.
சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.
ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.
இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.
ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.
சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.
நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எடுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.
சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும் மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.
நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு ஒடிச்சிடுச்சி.
நீதி : தகாத நட்பு கூடாது
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ஆசிரியர் போட்த் தேர்வு முடிவுகள் வெளியீடு
🎯 விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கல சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
🎯 தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் சர்ச்சைக்கு இடமில்லை என அமைச்சர் விளக்கம்
🎯தமிழகம் முழுவதும் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
🎯தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க 2.50 கோடி நாற்றுகள் நட திட்டம் - வனத்துறை அமைச்சர் தகவல்
🎯 புதிய தொழில் நிறுவனங்களுக்கான முன்னெடுப்புகள். தெளிவான பார்வையுடன் தமிழ்நாடு: மத்திய அரசு.
🎯 மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
🎯ரூ.1.25 லட்சம் கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு.
🎯 இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் தோனியை முந்திய பந்து
🎯இலங்கை வீராங்கனையை அற்புதமாக ரன் அவுட் செய்த இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Don’t nudge us to seek independent Tamil Nadu: DMK’s A. Raja seeks autonomy with CM Stalin on stage
🎯Government taking steps to make State number 1 in ease of doing business, says Stalin
🎯Year after Covid oxygen shortage in Delhi, hospitals struggle to keep PSA plants going
🎯Govt still to clear 26 as judges, Bombay HC down to nearly half its strength
🎯Scientists probing spike in cases look at Omicron sub-variant
🎯PM Modi hails Digital India: Transparency ending network of middlemen
🎯Ukraine lays out $750 billion 'recovery plan' for postwar future
🎯IND vs ENG 5th Test: Bumrah sizzles but Root and Bairstow roast the rest
🎯Wimbledon: Ajla Tomljanovic eliminates Alize Cornet, Simona Halep also advances
🎯England vs India: Jasprit Bumrah breaks Kapil Dev’s 30-year-old record
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment