Tuesday, July 26, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (27/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 27/07/2022         புதன் கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்




🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
   
   


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 
1.சிவப்பு நிறமுடைய கோள் எது?


விடை : செவ்வாய்


2.எலக்ட்ரானின் மின்னூட்டை மதிப்பை கண்டறிந்தவர?


விடை : R.A.மில்லிகன்


3.சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?


விடை : தென்பெண்ணை


4.தென்னந்தியாவின் கங்கை அழைக்கப்படும் ஆறு எது?


விடை : காவிரி


5.இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?


விடை : சாரதா கால்வாய்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹Bigger successes are comprised of little changes. 

🌹ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்



🌷Hope comes with success. But success will come only to those with hope.

🌷நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 சுத்தமும் சுகாதாரமும் சுகமான வாழ்வை தரும் என்பதை அறிவேன்.

     🌸எனவே என்னையும் என்னை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

நம்பிக்கையோடு செயல்படுங்கள் 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?

எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் 3 இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிப்பு

🎯செஸ் ஒலிம்பியாட் | பிரதமரின் வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு; ட்ரோன்கள் பறக்க தடை

🎯இலவச அறிவிப்புகள் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

🎯அரசு பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு

🎯 60 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றுலா செல்லலாம்

🎯19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டது; ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

🎯சர்வதேச செஸ் ஒலிம்பியாட் | பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் - பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை மாநகரம்

🎯காமன்வெல்த் போட்டிகள் 2022: காயம் காரணமாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகல்

🎯டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இளம் வயது பேட்ஸ்மேன் என்ற சாதனையை சர்வதேச கிரிக்கெட் களத்தில் படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டு பேட்ஸ்மேன் கஸ்டவ் மெக்கென்

🎯கொரோனாவுக்கு உலக அளவில் 6,404,321 பேர் பலி





TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯CM to announce site for Chennai’s second airport

🎯Tangedco may revert to monthly billing for domestic consumers after installing smart meters

🎯Defence Ministry approves arms procurement proposals worth ₹28,732 crore

🎯19 MPs sent out, Opp hits back: Suspension of democracy

🎯20 years after Kargil: Newsroom to Govt, reporter to father, how Kargil tipoff travelled

🎯Media house with other business interests becomes vulnerable to external pressures: CJI Ramana

🎯Generation of unique disability IDs ramped up

🎯World Championships: India’s best ever showing in track and field but Neeraj Chopra the only shining star

🎯Ind vs WI 3rd ODI | Record-setting India have their sights on clean sweep












இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...