Wednesday, July 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 28/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28/07/2022         வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: புறங்கூறாமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.


🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

   அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 
1.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

விடை : கருவிழி

2.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?

விடை : postal index code

3.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?

விடை : சுதேசி மித்ரன்

4.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

விடை : 15 ஆண்டுகள்.

5.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

விடை : ஒரே ஒரு முறை




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Good or bad, it doesn’t come from others.
You are responsible for what you get/face.
🌷தீதும் நன்றும் பிறர் தர வாரா


🌹Make hay while the sun shines.
🌹காற்றுள்ள போதே தூற்றிக்கொள்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 சுத்தமும் சுகாதாரமும் சுகமான வாழ்வை தரும் என்பதை அறிவேன்.

     🌸எனவே என்னையும் என்னை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

 நம்மால் முடியும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯சென்னையில் அம்மா உணவகம் மூலம் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி: அரசிடம் மாநகராட்சி கோரிக்கை

🎯தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை - முழு விவரம்

🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று கோலாகலம்.

🎯செஸ் ஒலிம்பியாட் போட்டி .4- மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

🎯 பிரதமர் மோடி  இன்று வருகை சென்னையில் பலத்த பாதுகாப்பு

🎯மாமல்லபுரத்தில் செஸ் விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

🎯30 ஆம்புலன்ஸ், 1000 மருத்துவப் பணியாளர்கள்: மருத்துவத் துறை கட்டுப்பாட்டில் செஸ் ஒலிம்பியாட்

🎯44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

🎯5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது - அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்

🎯பிஎஸ்என்எல் மறுசீரமைப்புக்காக ரூ.1.64 லட்சம் கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🎯2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு

🎯காமன்வெல்த் போட்டிகள் 2022 | தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் பி.வி.சிந்து

🎯 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.





TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu govt launches breakfast scheme for students of primary schools

🎯Tamil Nadu rolls out ‘Chief Minister’s Breakfast Scheme’ at 1,545 government primary schools to benefit 1.14 lakh children

🎯Chess Olympiad 2022 | Traffic diversions in Chennai: Check which routes to avoid today and tomorrow

🎯Handbooks, health insurance cards to be given to all players

🎯Cabinet clears ₹1.64 lakh crore BSNL revival package: Ashwini Vaishnaw

🎯Data | LPG price crosses ₹1,050, cylinder refills decline among PMUY consumers

🎯ISRO earns $279 million in foreign exchange through satellite launches

🎯Biden tests negative for COVID-19, ends ‘strict isolation’

🎯PV Sindhu to be Team India Flagbearer at the CWG 2022 opening ceremony

🎯Stalin, Rahman, Rajinikanth and Thambi the horseman, Chennai is going all out for India’s first Chess Olympiad

🎯India thrash Windies by 119 runs to complete clean sweep

🎯Mental health being important, resource like Paddy Upton will be helpful: Rahul Dravid












இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...