Tuesday, July 19, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் (20/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 20/07/2022         புதன் கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 
   
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்                                                                     

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

   அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

 விடை : சமுத்திர குப்தர்

2.பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடு பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?

விடை : மண்டல் கமிஷன்

3.அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?

விடை :  
ஜான் டால்டன்(John Daltan)

4.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
                                             விடை : 1993

5.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?

விடை : கோலாலம்பூர் (மலேஷியா)



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Lucky man needs no counsel
🌷அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. 


🌹The greater the ambition the greater the low
🌹பேராசை பெருநட்டம்.


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை அறிவேன்.

     🌸எனவே தன்மான உணர்வையும், அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

நீதி தவறாத ஆட்சி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

குலசேகர பாண்டியன் மதுரையை ஆட்சி செய்தார். ஒரு நாள் மன்னர்  நகர் வலம் வரும்போது, அந்தணர் ஒருவர் மனைவியிடம் பேசினார். "நான் காசி யாத்திரை போகிறேன் அதுவரை உத்தமரான நம் மன்னர் உன்னை பாதுகாப்பார்" என்றார். மக்கள் தன் மீது கொண்ட நம்பிக்கையை எண்ணி மகிழ்ந்தார். தினமும் அந்த வீட்டை கண்காணித்தார் மன்னர்.


சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு நாள், அந்த வீட்டுப் பெண் யாரோ ஒரு ஆணுடன் பேசுவதை மன்னர் கேட்டார். ஆனால் அந்தணர் தான் அப்போது பேசிக் கொண்டிருந்தார். உண்மை அறியாத மன்னர், அந்நியமான மனிதர் இருப்பதாக எண்ணி சந்தேகத்துடன் கதவைத் தட்டினார். அந்தணர் உள்ளே இருந்து வருவதை ஜன்னல் வழியாக மன்னர் பார்த்தார் ."ஐயோ! தவறுதலாக கதவைத் தட்டி விட்டோமே?"என எண்ணி தெருவில் உள்ள எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டி விட்டு ஓடினார்.


திருடன் தான் கதவை தட்டியிருக்க வேண்டும் என நினைத்த மக்கள், மறுநாள் மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் அமைச்சர்களிடம்,"நள்ளிரவில் வீட்டுக் கதவுகளைத் தட்டி தொல்லை கொடுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"என அமைச்சர்களிடம் கேட்க 'அவன் கையை வெட்ட வேண்டும்' என்றனர் அமைச்சர்கள்.

உடனே வாளை எடுத்து மன்னர் தன் கையை வெட்டி 'தானே குற்றவாளி'என்பதை விளக்கினார். அதன்பின் மன்னருக்கு பொன்னாலான கை பொருத்தப்பட்டு 'பொற்கை மாறன்' எனப் பெயர் பெற்றார். அந்தக் காலத்தில் நீதியை நிலை நாட்டிய சிறப்பை அறிவோம்.


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 அரிசி, கோதுமை, பருப்பு மீதான ஜிஎஸ்டி ரத்து

🎯 மின் கட்டண உயர்வு: ஆகஸ்ட் 22 வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

🎯 தமிழகத்தில் புதிதாக 2142 பேருக்கு கொரோனா.

🎯 சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர். பி. உதயகுமார் நியமனம்.

🎯 கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் , எஸ். பி  இடமாற்றம்.

🎯 நீட் விலக்கில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அரசு தகவல்.

🎯 நீட் மசோதா : கலந்த ஆலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பதில்.

🎯 44 - வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் அழைப்பு.

🎯 டாலருக்கு மாற்றாக மாறுகிறதா இந்திய ரூபாய்? தேச வர்த்தகத்தில் புதிய அத்தியாயம்.

🎯 இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

🎯 உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மைராஜ் அகமது கான்

🎯 ஆசிய விளையாட்டுப் போட்டி எப்போது நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

🎯 2028 -ல்  லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் நடைபெறும் என தேதிகள் அறிவிப்பு.

🎯 48-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் .

🎯13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மைய மண்டல இயக்குனர் தகவல்






TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu Governor sends anti-NEET Bill to Centre

🎯Parliament disrupted on Day 2 over price rise and GST on new items

🎯India to become most populous nation by 2023: Reading the figures

🎯EIA rules amended: projects near LoC, those of strategic value won’t need green nod.

 (EIA-Environment Impact Assessment, LoC-Line of Control)

🎯COVID-19 triples across Europe on past six weeks; hospitalisations double: World Health Organisation

🎯In 2021, over 1.6 lakh Indians renounced citizenship

🎯Railways turns to Google Maps to allot nearer exam centres for candidates

🎯Pythagorean geometry in Vedic-era texts, centuries before Pythagoras

🎯Rishi Sunak tops new vote to edge closer to final spot in British PM race

🎯Sri Lanka to witness three-way contest for Presidency

🎯India-Pakistan cricket match to be “one of the highlights” of CWG 2022: CEO Ian Reid

🎯ENG vs SA 1st ODI Highlights: Ben Stokes’ ODI career ends in defeat as South Africa beat England by 62 runs




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

அமுதவயல்: Tamil online test -1

அமுதவயல்: Tamil online test -1 : தமிழ் திறனறி தேர்வு