Wednesday, July 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21/07/2022         வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: ஊக்கமுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 
   
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.                                                              

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
   


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.அசோகர் அரியணை ஏறிய ஆண்டு? 

விடை : கி.மு.273

2.வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம் நடைப்பெற்ற ஆண்டு?
 
விடை :  1905 

3.எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை ________________ என்கிறோம்? 

விடை : கோடு 

4.திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்ச்சி? 

விடை : பதங்கமாதல்


5.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?

விடை : ஃபின்லாந்து



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Blood is thicker than water
🌷தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். 


🌹What won’t bend at five will not bend at fifty 
🌹ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை அறிவேன்.

     🌸எனவே தன்மான உணர்வையும், அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கான தேசிய கல்வி உதவித் தொகை கொள்கையில் மாற்றம் என மத்திய அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

🎯நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 10 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

🎯அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவிப்பு.

🎯‘டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்’என்று தேர்வாணைய செயலாளர் பி.உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.

🎯வரும் 29ம் தேதி நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

🎯இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

🎯இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

🎯உலக தடகள சாம்பியன்ஷிப் | டிரிப்பிள் ஜம்ப்பில் தங்கம் வென்றார் யூலிமர் - ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் ஏமாற்றம்

🎯உலக பாரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மேலும் இரண்டு தங்கப்பதக்கம் வென்றது இந்தியா அணி




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯Parliament Monsoon Session updates | It’s wash out again on the third day

🎯Rupee hits all-time low, closes below ₹80 mark against U.S. dollar

🎯In 2021, over 1.6 lakh Indians renounced citizenship

🎯Capital topper, AAP fails to score in Delhi University

🎯Race to become UK PM down to final two, Rishi Sunak and Liz Truss

🎯Ranil Wickremesinghe, a wily political survivor, elected Sri Lanka’s president

🎯Concerned over India’s ability to host the World Cup: International Hockey Federation

🎯Cheteshwar Pujara hits his 16th first class double hundred, on par with Fry, Hobbs, Hick



வரலாற்றில் இன்று :*

🌷தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர் நினைவு நாள் (1984)

🌷பெல்ஜியம் தேசிய தினம்

🌷இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)

🌷ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)

🌷லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...