பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 11/07/2022 திங்கட்கிழைமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: தெரிந்து தெளிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
மிகைநாடி மிக்க கொளல்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1."சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
விடை : ஒளவையார்
2. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணமாக
விடை : மெலனின்
3.சூரியனுக்கு அருகாமையிலுள்ள கிரகம்?
விடை : மெர்க்குரி
4.இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை தொடங்கியவர்?
விடை : அன்னிபெசன்ட்
5.இந்திய தர நிர்ணய நிலையம் (ஐ.எஸ்.ஐ) துவங்கப்பட்ட ஆண்டு?
விடை : 1947
பழமொழிகள்
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 Haste makes waste
🌷பதறாத காரியம் சிதறாது
🌷Measure is treasure
🌷அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 ஊக்கமும் ஆக்கமும் உயர்வுக்கு வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் ஊக்கத்தோடு செயல்பட்டு பல புதிய படைப்புகளையும் சாதனைகளையும் செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
..
*எல்லா உயிர்களுக்கும் உதவி செய்*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.
ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.
அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.
அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.
அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.
அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.
அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.
அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.
போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள்.
போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.
குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.
இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.
இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.
அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.
எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.
நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.
‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’
மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு
🎯தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை: மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
🎯கனமழை: தெலங்கானாவில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
🎯31-வது கரோனா தடுப்பூசி முகாம்: 17 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
🎯தமிழகத்தில் இன்று 2,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி
🎯இலங்கைக்கு இந்திய ஆதரவு உண்டு: வெளியுறவு அமைச்சகம்
🎯கட்டுகட்டாகப் பணம், பதுங்கு குழி, இலங்கை அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்கள்: அடுத்தது என்ன?
🎯உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதல்: பொது மக்கள் 15 பேர் பலி
🎯 இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடு இந்தியா என பிரதமர் மோடி கருத்து.
🎯சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
🎯இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி
.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Hopes of finding survivors in Amarnath flash floods fading
🎯Missing Sri Lankan President back in action, orders gas distribution
🎯Sri Lanka parties scramble to form all party govt.
🎯Uber’s crisis SOP: hit ‘kill switch,’ shut down local system to block info to Govt
🎯Army Aviation augments combat power while ageing Cheetah, Chetaks await replacement
🎯Why demand for OBC quota in local bodies issue is not relevant in T.N.
🎯T.N. govt. must procure buses in conformity with PWD Act, rules and harmonised guidelines: Madras HC
🎯Thiruvalluvar’s image on paddy field turns Malaiappanallur a cynosure for farming community
🎯Natural farming to be successful like Digital India and Swachh Bharat: PM
🎯Eng vs Ind 3rd T20 | Suryakumar Yadav’s century in vain as India loses by 17 runs
🎯Novak Djokovic wins seventh Wimbledon as Nick Kyrgios loses way after first set
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment