Thursday, July 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (22/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 22/07/2022         வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
   


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.X–கதிர் என்பது?

விடை : மின்காந்த அலை

2.புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு?

விடை : பீட்டா கதிர்வீச்சு

3.நரம்பு மண்டலத்தின் அலகு?

விடை : நியூரான்

4.வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?

விடை : ரிபோபிளேவின்

5.லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?

விடை : 545




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Perseverance kills the game.
🌷விடாமுயற்சி வெற்றியை தேடித் தரும்.


🌹Do what you can with that what you have from where you are.
🌹வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸மனமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை அறிவேன்.

     🌸எனவே தன்மான உணர்வையும், அறிவையும் நல்வழியில் நெறிப்படுத்தி என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

*முட்டாள் குருவியும் குரங்கும்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 ஒரு பெரிய மரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவிகள் வசித்து வந்தன. அவை இரண்டும் முன்யோசனையும் நன்கு வேலை செய்யும் குணமும் கொண்டவை. குளிர்காலம் வரும் முன் அவை இரண்டும் ஒரு அழகிய, உறுதியான கூட்டை கட்டின. அதனால் அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
மிகவும் மழை பெய்து கொண்டு இருந்த ஒருநாள் இந்த குருவிகள் வசித்துக் கொண்டிருந்த மரத்தில் ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழையில் மிகவும் நனைந்து அந்த குரங்கு நடுங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்த பெண் குருவி, “ஐயா ஏன் நீங்கள் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்கிறீர்கள், ஏன் உங்கள் வீட்டுக்கு போகவில்லை” என்று கேட்டது. 
அதற்கு குரங்கு சொன்னது “எனக்கு தனியாக வீடு ஒன்றும் இல்லை எல்லா மரங்களிலும் நான் மாறி மாறி தங்குவேன்” என்றது. இதைக்கேட்ட பெண்குருவி “எதிர்காலத்திற்கு  சேகரிக்காத புத்தியில்லாத குரங்கு ஒரு சோம்பேறி” என்று விமர்சித்தது. குரங்கு மிகவும் கோபப்பட்டு அந்த குருவிடம் அமைதியாக இருக்கச் சொன்னது. 
ஆனால் அந்தக் குருவி சொன்னது, “என்னுடைய சிறிய அலகை வைத்து நான் இவ்வளவு பெரிய கூட்டை கட்டி உள்ளேன், ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உன்னால் ஒரு வீடு கட்ட இயலவில்லை” என்று விமர்சித்துக் கொண்டே இருந்தது. குரங்கிற்கு மிகவும் கோபம் வந்தது.
 அந்தக் குரங்கு கோபத்தில் அந்தக் குருவியின் கூட்டை தன் கைகளால் கிழித்து போட்டது. அந்தக் குருவிக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அதால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தது. அந்த இரண்டு குருவிகளும் மழையில் நனைய ஆரம்பித்தன. தேவையில்லாத இடத்தில் தான் செய்த உபதேசம் தான் இதற்கு காரணம் என்று அந்தப் பெண் குருவி மிகவும் வருந்தியது.


*நீதி : கேட்பவர்களுக்கு மட்டும் அறிவுரை கொடுப்பது நல்லது.*


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 நாட்டின் 15வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

🎯அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க பட்டியல் தயாரிப்பு: கவனமுடன் இறுதிசெய்ய கல்வித் துறை உத்தரவு

🎯அக்.30-ல் குரூப்-1 முதல்நிலை தேர்வு: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

🎯மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் Vs சென்னை மேயர் - அனல் பறந்த ஆய்வுக் கூட்டம்

🎯தமிழக மின் கட்டண உயர்வால் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு

🎯 செஸ் ஒலிம்பியா போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்துகள் இயக்கம்

🎯 சட்டப்பேரவையின் மாண்பையும் மரபையும் மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என அப்பாவு கருத்து

🎯 செஸ் ஒலிம்பியாட் சிறப்பு குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

🎯தங்கம் வென்ற வேதாந்த் கவுரவிப்பு: ஒடிசா முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் மாதவன்

🎯 சிங்கப்பூர் செல்ல தில்லி முதல்வருக்கு அனுமதி மறுப்பு.

🎯இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா.... கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் பலி என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு.

🎯 இலங்கை அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

🎯 உலகளவில் குரங்கம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு.

🎯தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯President-elect Murmu: First tribal woman to be elected to highest post in country

🎯In IIMs, few SCs, STs admitted to PhD, pool shallow over the years

🎯International Chess Olympiad only a week away, Tamil Nadu village all decked up

🎯UPSC Key-July 21, 2022: Why you should read ‘Sport Integrity’ or ‘Symbol of Marriage’ or ‘Gender Socialisation’ for UPSC CSE

🎯Govt: No proposal to increase SC, HC judges’ retirement age

🎯Clarify actions taken against hate speeches, Supreme Court tells Centre, States

🎯For future dollar expenses, should you invest in US markets now?

🎯Neeraj Chopra Javelin Throw LIVE: Chopra qualifies for final with 88.39m throw in first attempt

🎯K.L. Rahul’s West Indies tour in doubt after testing positive for COVID-19, rain forces training indoor




வரலாற்றில் இன்று :*

🌹சர்வதேச பெற்றோர் தினம்


🌹காம்பியா மறுமலர்ச்சி தினம்


🌹விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)


🌹போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது(1983)


🌹வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்(1933)











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...