பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01/08/2022 திங்கட்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: ஒப்புரவு அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
. ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்தற்கு.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?
விடை : கோபால கிருஷ்ண கோகலே
2.‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?
விடை : பகுதி III
3.பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?
விடை : சரத்து 19
4.கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.?
விடை : 86-வது
5.குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
விடை : உத்திரமேரூர்
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 A little learning is a dangerous thing
🌷 அரைகுறை படிப்பு ஆபத்தானது
🌹 A little stream will run a light mill.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
*தைரியமும் தன்னம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு உரம்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
500 ரூபாய்
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯அரசுப் பள்ளிகளில் இன்று முதல் செயலி மூலம் வருகைப் பதிவு.
🎯புதுக்கோட்டை தேர் விபத்து | துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்: அறநிலையத்துறை
🎯குரூப்-1 தேர்வு: பெண்களின் வரலாற்று சாதனை - தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள்!
🎯வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் கால அவகாசம் முடிந்தது: இனி தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம்
🎯நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு ஒன்றிய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு
🎯44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: 3-வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி
🎯CWG 2022 | இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம்: பளுதூக்குதல் வீரர் ஜெரமி சாதனை
🎯CWG 2022 | தங்கம் வென்றார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி
🎯மேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
🎯ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்
🎯வானிலை முன்னறிவிப்பு | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Vice-President presents the ‘President’s Colours’ to Tamil Nadu Police
🎯Tamil Nadu CM Stalin commends Team India for good start at Commonwealth Games in Birmingham
🎯Directorate of Medical Education calls for applications for paramedical programmes
🎯Kerala monkeypox death | Youth had tested positive in UAE
🎯Commonwealth Games 2022 | Indians in action on August 1, 2022
🎯Chess Olympiad: Indian teams continue winning spree
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment