Tuesday, July 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (06/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 06/07/2022         புதன் கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷. 
   
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை                                                    

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

.தன்னை தோண்டுபவரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை : சீனா

2.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?

விடை : கர்நாடகா

3.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?

விடை : Tax Deducted at Source

4.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?

விடை : 1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது

5.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

விடை : பிப்ரவரி 28 ஆம் நாள்



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Don’t step in the river without knowing its depth.

🌷ஆழம் பார்க்காமல் காலை விடாதே.
.

🌹Even elephants do slip.

🌹யானைக்கும் அடி சறுக்கும்.


 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 முயற்சியும் பயிற்சியும் முன்னேற வழி வகுக்கும் என்பதை அறிவேன்.

     🌸 எனவே ஒவ்வொரு நாளும் எனது கடமைகளை உணர்ந்து கற்றலில் தொடர் முயற்சியும் பயிற்சியும் பெற்று என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

மின்னுவதெல்லாம் பொன்னல்ல , யாரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.*

பாலைவனத்தில் ஒரு 🦓 வரிக்குதிரையும் , ஒரு 🐫 ஒட்டகமும் வசித்து வந்தது. வரிக்குதிரை தாம் தான் ஒட்டகத்தை விட அழகாக இருக்கின்றோம், அதனால் தாம் தான் சிறந்தவன் என்ற கர்வத்தோடு இருந்தது. ஒருநாள் ஒட்டகம் வரிக்குதிரையிடம் "நண்பா நாம் இருவரும் மண்ணில் விளையாடலாம் வா" என்று அழைத்தது. வரிக்குதிரையோ, ஒட்டகம் தம்மை போன்று அழகாக இல்லை, ஒட்டகம் தம்மோடு ஒப்பிடுகையில் தாழ்ந்தவன், தனக்கு  நண்பனாக இருக்க ஒட்டகம் தகுதியற்றவன் என்று மனத்திரையில் எண்ணிக்கொண்டது. வரிக்குதிரை, ஒட்டகத்திடம் "நான் மண்ணில் விளையாடினால் எனது உடலிலுள்ள அழகான வெள்ளை கருப்பு நிற கோடுகளில் மண் ஒட்டுவதோடு  அது என் அழகை கெடுக்கும், அழகுதான் முக்கியம் நான் விளையாட வர மாட்டேன்" என்றது. இதைக்கேட்ட ஒட்டகம் தான் மட்டும் மண்ணில் விளையாடி மகிழ்ந்தது. சிறிதுகாலம் கழித்து பாலைவனத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, அருகிலிருந்த நீர்நிலைகள் வற்றின. வரிக்குதிரை அருந்த தண்ணீரின்றி தவித்தது. அப்போது தான் தன் அழகை மட்டும் வைத்து ஒன்றும் பயனில்லை என்று எண்ணி ஒட்டகத்திடம் "தாகமாக உள்ளது தயவுகூர்ந்து நிவீர் சேர்த்த  தண்ணீரைத் தந்து உதவு இல்லையேல் நான் இறக்க நேரிடும்" என்றது. ஒட்டகம் "என்னிடம் நான் சேமித்த தண்ணீர் உள்ளது ஆனால் அதைத் தர இயலாது, அது எனது முதுகில் உள்ளது கவலைப்படாதே தண்ணீர் இருக்கும் இடத்தை என்னால் கண்டுபிடிக்க இயலும், நான் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு உன்னை அழைத்துச் சென்று உதவுகிறேன் என்றது". ஒட்டகமும் வரிக்குதிரையும் நீர் தேடிச் செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் அதிகமுற்றதால் வரிக்குதிரையின் கால்கள் வலித்தது, வரிக்குதிரை ஒட்டகத்திடம் "வெயிலால் கால்கள் நடக்கும் களைப்பில் வலிக்கிறது கண்கள்  சோர்வடைந்துள்ளது உனக்கு கால்கள் வலிக்கவில்லையா?" என்றது. ஒட்டகம் "என் கண் இமைகள் பெரியதாக இருப்பதால் அது என் கண்களை சூரிய ஒளியில் இருந்து காக்கின்றது, மேலும் என் கால்கள் தரையின் சூட்டைத் தாங்கி எளிதாக பாலைவனத்தில் நடப்பதற்காகவே இறைவன் என் கால்களை வலிமையாக படைத்துள்ளார், நீங்கள் என் மீது ஏறுங்கள் நான் பத்திரமாக நீரிருக்குமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன்" என்றது. வரிக்குதிரை "உங்களால் என்னை சுமக்க முடியுமா?" என்று ஒட்டகத்திடம் கேட்டது. ஒட்டகம் "பாலைவனத்தில் மக்கள் என் மீது சவாரி செய்தே பயணிக்கின்றார்கள் அதனால் கவலை கொள்ளாமல் என் மீது ஏறி தாங்கள் பயணிக்கலாம்" என்று வரிக்குதிரையிடம் சொன்னது. பின்னர் வரிக்குதிரை ஒட்டகத்தின் மீது சவாரி செய்து நீர்நிலையை அடைந்து தண்ணீர் பருகியது. தண்ணீர் பருகியவுடன் வரிக்குதிரை ஒட்டகத்திடம் "முன்பு நான் தங்கள் உருவம் கொண்டு மின்னுவது மட்டும் அழகு என்று உங்களை மதிப்பிட்டது என் தவறு அதனை இப்போது உணர்ந்தேன், நீங்கள் பாலைவனத்தில் வாழத் தங்களுக்கு ஏதுவாக இறைவன் தங்களைப் படைத்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன், இப்போது அனைத்து உயிர்களையும் மதிக்கிறேன், உங்களின் நட்பைப் பெற விரும்புகின்றேன்" என்று கூறியது.ஒட்டகமும் வரிக்குதிரையின் நட்பை ஏற்றது.ஒட்டகத்தின் நட்பைப்பெற்று வரிக்குதிரை சிறந்து வாழத்தொடங்கியது.
*நீதி* - _கண்களால் பார்ப்பதற்கு அழகானது மட்டும் அழகன்று உள்ளத்தால் அனைவருக்கும் மனமுவந்து உதவுவதே சிறந்த அழகாகும் என்பதைப் போன்று ஒட்டகம் வரிக்குதிரைக்கு உதவி செய்து உண்மையான நண்பனானது

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா: சிறப்பாக விமர்சனம் செய்தால் அயல் நாட்டு சுற்றுலா - தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

🎯படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

🎯புதுக்கோட்டையில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி: விளையாட்டு துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

🎯காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு. அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை

🎯கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

🎯தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது; ஒரே நாளில் 2,662 பேர் பாதிப்பு

🎯எங்கள் ஆராய்ச்சி பற்றி ‘நாசா’ பொய் கூறுவது முதல் முறை அல்ல என சீனா விமர்சித்துள்ளது.

🎯“என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” - ரணில் நம்பிக்கை

🎯இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

🎯தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯COVID-19 triggered
 stigma, discrimination may keep testing rate low: study

🎯PM Modi’s ‘minority move’ aimed at delinking them from ‘elite’ concerns

🎯Environment Ministry proposes more fines, less imprisonment for violations

🎯Monsoon has come in time. A wet July and August is what both producers and consumers of food in India need

🎯Eng vs Ind fifth Test | England grounds India as Bairstow, Root score tons in landmark win

🎯India drop in WTC rankings, Bumrah rues batting after loss

🎯Badminton Asia Technical Committee apologises to PV Sindhu for ‘human error’





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...