Thursday, June 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01/07/2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01/07/2022         வெள்ளிக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெருமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.    
                                                                         பெருமை  யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்                                                                         

                                                                  🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவார்


🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

விடை : அன்னை தெரசா

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

விடை : கெப்ளர்

3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

விடை : ரஷ்யர்கள்

4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

விடை : 1860

5.நதிகள் இல்லாத நாடு எது ?

விடை : சவுதி அரேபியா



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷Look before you leep

🌷ஆழம் பார்க்காமல் காலை விடாதே



☘️Even elephants do slip

☘️ஆணைக்கும் அடி சறுக்கும்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     🌹 புறந்தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் என்னும் வள்ளுவர் வாக்கை நான் நன்கு அறிவேன். 

     🌹   எனவே நீரினால் உடலை அன்றாடம் செய்வது செய்வதுபோல நிறைய நூல்களை அன்றாடம் வாசித்து உள்ளத்தை தூய்மை ஆக்குவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

புறாவும்  - கட்டெறும்பும்* 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 .                      ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது.

          மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

      ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

              கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

       ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்லை.

            வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.

       உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது. 


அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது. 

            இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது. தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

               மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.

*நீதி :  நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட   சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.*



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழகத்தில் அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு

🎯புதிய முயற்சி: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

🎯பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை

🎯தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடியில் LKG,UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

🎯 புதுதில்லியில் ஜூலை 18 ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் துவக்கம்

🎯 மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

🎯 புவி வெப்பமயமாதல் கொண்டு வரும் புதிய சிக்கல் ; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள

🎯3 செயற்கைக்கோளுடன்விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 53.

🎯 தமிழகத்தில் புதிதாக 1827 பேருக்கு கொரனோ தொற்று

🎯 இந்தியாவுக்கு எதிராக 5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

🎯தாய்நாட்டுக்காக ரிப்பன் அணிந்து விளையாடிய உக்ரைன் வீராங்கனை; ஆடை கட்டுப்பாட்டை தளர்த்திய விம்பிள்டன்

🎯வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு




TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Deadline for educational assistance scheme extended till July 10

🎯Tamil Nadu has a long way to go in tapping offshore wind energy

🎯 Nirmala sitaraman writes GST: Five years stronger

🎯Maharashtra swearing-in ceremony Live Updates: Newly appointed CM Eknath Shinde vows to give ‘effective, strong government’

🎯WHO: Covid-19 cases rising nearly everywhere in the world

🎯Monsoon session of Parliament to commence from July 18

🎯ISRO's Second commercial success in a week ; Modified PSLV places three foreign satellites into orbit


🎯Eng vs Ind unfinished business: Jasprit Bumrah's India ready to face England 2.0

🎯England vs India: A flawed one-off ‘decider’ at Edgbaston after 10 months of great change

🎯Sania Mirza and partner crashes out in first round of Indian's last Wimbledon


🎯Heavy Rains Lash Mumbai, IMD Issues Alerts Predicting More Showers for Next Two Days






இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...