பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 02/08/2022 செவ்வாய்க்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: மக்கட் பேறு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?
விடை : மதுரை
2.பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ" என பாரட்டியவர் யார்?
விடை : சர்.ஏ. ராமசாமி முதலியார்.
3.இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி அமைந்துள்ள இடம்?
விடை : செட்டிகுளம்
4.தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம்?
விடை : 1979
5.தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்?
விடை : வ.உ. சிதம்பரம் பிள்ளை
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 Fully filled pot does not spill
🌷 நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும்
🌹 A single tree does not make on orchard.
🌹 தனி மரம் தோப்பாகாது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.
🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁
நம்பிக்கையை விடவே விடாதே :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதென்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.
மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.
ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், ""குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!'' என்று வேடனிடம் கேட்டான்.
""மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,'' என்றான்.
இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 செஸ் ஒலிம்பியாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.
🎯காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2-வது விமான நிலையம் -என மத்திய இணையமைச்சர்
வி.கே.சிங் அறிவிப்பு
🎯 விரைவில் சித்தா, ஆயுர்வேதா படிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகம்.
🎯 ரூ 43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை : 11- ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.
🎯 புதுக்கோட்டை தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.
🎯 காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
🎯 2023 ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு.
🎯வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்ப்பு முதல் ஆதார் இணைப்பு வரை - முழு விவரம் வெளியீடு
🎯மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி
🎯மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க நிரந்தர தடை
🎯ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்
🎯1.59 மில்லி விநாடிகள்... ஜூலை 29-ல் 24 மணி நேரத்திற்கு முன்னரே சுழற்சியை நிறைவு செய்த பூமி
🎯CWG 2022 | லான் பவுல்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு உறுதியானது பதக்கம்: விளையாடும் முறை எப்படி?
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Brace for power tariff hike in Tamil Nadu every July from next year
🎯Chennai to get its second airport at Parandur
🎯IIT-M’s B.Sc in programming and data science introduces 8-month apprenticeship
🎯GST collection in July jumps by 28% to ₹1.49 lakh crore
🎯Another monkeypox case in Delhi, again with no recent international travel history
🎯IIT Delhi in talks to set up campus in UAE: Govt in LS
🎯Biden calls on Russia, China to enter nuclear arms control talks
🎯Commonwealth Games 2022 | Judoka Shushila wins silver in women’ 48kg, Vijay gets bronze
🎯CWG 2022: Full List of Indian Medal Winners in Birmingham
🎯Commonwealth Games 2022 | Defending champions India blank Singapore to enter final
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment