பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 25/11/2022 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம் : அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
விடை : உட்கரு
2. டார்ச் விளக்குகளில் பயன்படும் ஆடிகள் எவை?
விடை : குழி ஆடிகள்
3. முட்டைகள் அழுகும் போது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?
விடை : ஹைட்ரஜன் சல்பைடு
4. மனிதனின் தலையில் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகள் எவை?
விடை : மைக்கோஸ் போரம் ஃபர்ஃபர்
5. நகரும் பொருளின் திசையை மாற்ற உதவுவது எது?
விடை: விசை
பழமொழிகள்🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Example is better than precept
🌸 சொல்வதை விட செய்வதே மேல்
🌸 Experience is the best teacher
🌸 அனுபவமே சிறந்த ஆசான்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பேசும் குகை🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.
உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது.
மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.
“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது. இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.
நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.
“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.
அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால் நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.
நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் - 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்
🎯மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
🎯பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பரில் சிறப்பு அரியர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
🎯தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தகவல்
🎯திட்டக்குடி அருகே வேகமாக நிரம்பும் வெலிங்டன் நீர்த்தேக்கம்: தண்ணீரை திறந்துவிட கோரிக்கை
🎯2022 – 2023 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆக மதிப்பீடு வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
🎯 வரும் 28 -11- 2018 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வரும் 9 -12 -2022 அன்று நடைபெறும் என அறிவிப்பு.
🎯 26/11/2022 அன்று நடைபெற இருந்த சி .ஆர். சி கூட்டம் ரத்து.
🎯 பகுதி நேர ஓவிய பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.
🎯மதுரை அருகே கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
🎯 உச்சநீதிமன்ற தகவல் அறிய ஆர்.டி.ஐ இணையதளம்
🎯 நாளை நவம்பர் 26 விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்
🎯 உலகக் கோப்பை கேமரூனை வீழ்த்திய சுவிட்சர்லாந்து
🎯 கால்பந்து உலகக் கோப்பை பிரேசில் அணி அசத்தல் வெற்றி
🎯 ஐந்து உலக கோப்பைகளில் கோல் ரொனால்டு சாதனை
🎯இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Tamil Nadu Electricity Board has given 2 days more time for electricity bill collection after Aadhaar linking.
🎯 Vocational training with skill development, self-employment training for the differently-abled- Chief Minister M.K.Stal's information
🎯Anna University Announces Special Ariyar Exam for Engineering Students in December
14.6 lakh households in Tamil Nadu do not have bank accounts: Registrar of Co-operative Societies
🎯Wellington Reservoir near Thittakudy is filling up fast: request to open the water
🎯Issuance of guidelines for assessment of first year and second year higher secondary students in the academic year 2022 – 2023.
🎯 Notice that the consultation for graduate teachers which was scheduled to be held on 28-11- 2018 has been postponed due to administrative reasons and will be held on 9-12-2022.
🎯 CR to be held on 26/11/2022 C meeting cancelled.
🎯 Career Transition Consultation for Part-Time Painting Instructors - State Program Director's Proceedings Release.
🎯16th century AD middle stone sculpture discovered near Madurai
🎯 RTI website for Supreme Court information
🎯 PSLV C54 rocket will launch tomorrow November 26
🎯 Switzerland beat Cameroon in the World Cup
🎯 Football World Cup Brazil team amazing victory
🎯 Goal Ronaldo record in five World Cups
🎯 Chance of moderate rain for 4 days from today
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலைத் தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment