Sunday, November 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (21-11-2022)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 21.11.2022.   திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அடக்கமுடைமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்கு கொண்டு போகும்.


   
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?  


விடை :சாலையைக் கடக்க வேண்டும்


2.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?  


விடை:1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது 


3.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?  


விடை:14.01.1969 


4.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?  


விடை: இந்தியா


5.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?  


விடை: புதுக்கோட்டை


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பேராசை பெருநஷ்டம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு கிராமத்தில் ஜீவா என்கிற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் சில நாட்களுக்கு பக்கத்து கிராமத்தில் சென்று வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார். எனவே தன்னுடைய பொருட்களுடன் தராசு ஒன்றை எடுத்து கொண்டு புறப்பட்டார். சில தூரம் சென்ற பிறகு மிகவும் களைப்புற்றார். 

அந்த தராசு மிகவும் கனமாக இருந்தது. அந்த தராசு ஜீவாவின் தாத்தா அவருக்கு பரிசாக கொடுத்தது. எனவே அதை சுமந்து கொண்டு செல்ல முடியாமல் அதை தன்னுடைய நண்பர் சக்தியின் வீட்டில் கொடுத்து செல்ல முடிவெடுத்தார்.

தன்னுடைய நண்பன் சக்தியிடம் சென்று அந்த தராசை கொடுத்த ஜீவா, “நான் பக்கத்து கிராமத்திற்கு செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு இந்த தராசை உன் கூடவே பத்திரமா வச்சுக்கோ, திரும்பி வந்தவுடனே இந்த தராசை உன் கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன்” என்று ஜீவா சொல்லிட்டு புறப்பட்டார்.

அந்தத் தராசை பார்த்த சக்தி, “இது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருக்கும் போலயே, இதை பேசாமல் நம்ம கூடவே வச்சுக்கலாம்” என்று முடிவு செய்தார். சில நாட்களுக்குப் பிறகு ஜீவா, சக்தி வீட்டுக்கு வந்து தன்னுடைய தராசை கேட்டார் ஆனால் சக்தி, “என்ன மன்னிச்சிடு பா உன்னோட தராசை ஒரு எலி தின்று விட்டது அந்த எலிக்கு நாகரிகமே இல்ல” அப்படின்னு சொன்னார்.

அதைக் கேட்ட ஜீவா மிகவும் மனமுடைந்து போனார். அவர் சக்தியிடம், “சரிப்பா பரவாயில்ல நீ உன்னோட பையனை என் கூட வீட்டுக்கு அனுப்பி வைக்கிறியா  நான் ஊருக்கு போயிட்டு வரும்போது சில பரிசு பொருட்கள் வாங்கிட்டு வந்தேன். அதை அவனிடம் கொடுத்து விடுகிறேன்.” என்று சொன்னார். சக்தியும் அதற்கு சம்மதித்து தன் பையனை ஜீவாவுடன் அனுப்பி வைத்தார்.


நெடுநேரமாகியும் சக்தியின் மகன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. “ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது ஒரு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு வர இவ்வளவு நேரமா” என்று எண்ணிய சக்தி, ஜீவா வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார். அவர் ஜீவாவிடம் சென்று, “ஜீவா என்னுடைய பையன் எங்கே” என்று கேட்டார். 

அதற்கு ஜீவா சொன்னார் “என்னை மன்னித்து விடு சக்தி உன்னுடைய பையனை ஒரு பருந்து தூக்கிக் கொண்டு போனது” என்றார். “என்ன, என்னுடைய பையனை ஒரு சின்ன பருந்து எப்படி தூக்கிக் கொண்டு செல்ல இயலும்” என்று சக்தி மிகவும் கோபப்பட்டார். ஜீவா மற்றும் சக்தி இடையே பெரும் சண்டை ஏற்பட்டது.


அவர்களுடைய சண்டை ஊர் பஞ்சாயத்துக்கு முன்பு வந்தது. அப்போது ஊர் பஞ்சாயத்து தலைவர், “என்ன ஆச்சு?” என்று கேட்டார். அதற்கு சக்தி, ஜீவா, தன்னுடைய பையனை அழைத்து விட்டு பருந்து தூக்கிக் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். “ஒரு பத்து வயசு பையன எப்படி ஒரு சின்ன பருந்து தூக்கிட்டு போக முடியும்?” என்று சக்தி கேட்டார். 

அதற்கு ஜீவா, “என்னுடைய இரும்பு தராசை எலி தின்றதாக சக்தி சொல்கிறார். ஒரு இரும்பு தராசை எலி சாப்பிடும் போது, ஒரு பையன பருந்து தூக்கிட்டு போக முடியாதா” என்று கேட்டார். 

அதற்கு ஊர்த்தலைவர் நீங்க ரெண்டு பேரும் சின்ன குழந்தை தனமா சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று சொன்னார். ஊர் தலைவர் சக்தியிடம், “ஜீவாவுடைய தராசு எங்கே இருக்கு” என்று கேட்டார். அதற்கு சக்தி, “எனக்கு சரியா தெரியல, நான் வீட்ல ஒரு வாட்டி கூட தேடி பார்கிறேன்” என்று சொன்னான். 

 ஜீவாவிடம் பையன் எங்கே என்று கேட்டபோது, அவன் சொன்னான், “என்னுடைய தராசு என் கையில் வந்ததும் சக்தியுடைய பையன அவரிடம் திருப்பி ஒப்படைக்கிறேன்” என்றார். வீட்டிற்கு சென்ற சக்தி ஜீவாவுடைய தராசை எடுத்து அவரிடமே திருப்பி கொடுத்தார். ஜீவாவும்  பையனை சக்தியிடம்  ஒப்படைத்தார்.

நீதி : பேராசை பெரும் நஷ்டம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு: ஆர்டிஐ தகவல்

🎯மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் முதல்வர் ஸ்டாலின் உறுதி

🎯ஆதார் எண் இணைத்தால்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது தவறான பிரசாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

🎯தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

🎯 அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

🎯BE துணை கலந்தாய்வு பட்டியல் தரவரிசை வெளியீடு

🎯 கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதி மாற்றம்

🎯 CPS திட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் அரசு அரசாணை வெளியீடு

🎯ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

🎯கேன்வில்லியம்ஸ் அரைசதம் வீண்; தீபக் ஹூடா அசத்தல் - 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

🎯FIFA WC 2022 | கத்தாரில் கால்பந்து திருவிழா தொடங்கியது: 8 மைதானங்கள், 64 போட்டிகள், 29 நாட்கள்

🎯22-வது உலகக் கோப்பை கால்பந்து | கத்தாரில் இன்று கோலாகல தொடக்கம் - முதல் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வேடார் மோதல்

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯67% Decline in Prime Minister's Kisan Scheme Beneficiaries in 3 Years: RTI Information

🎯 Chief Minister Stalin assured that the demand of disabled people will be fulfilled

🎯Free electricity for farmers only by linking Aadhaar number is a false propaganda: Minister Senthilbalaji interview

🎯Tamil Governor RN Ravi sudden trip to Delhi

🎯 Tamil Nadu Government Notification that you can apply for Avvaiyar Award

🎯BE Supplemental Counseling List Rank Release

🎯 Date Change of Written Test for Selection of Village Assistant

🎯 Punjab Govt issues ordinance canceling CPS scheme

🎯 UN France supports India's permanent membership in the Security Council

🎯Canwilliams half-century in vain; Deepak Hooda Fantastic - India win by 65 runs

🎯FIFA WC 2022 | Football festival begins in Qatar: 8 stadiums, 64 matches, 29 days

🎯22nd World Cup Football | A sensational start in Qatar today - Qatar vs Ecuador clash in the first match





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...