Wednesday, November 9, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (10-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 10.11.2022.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்த சுரப்பியின் பெயர் என்ன?


விடை : அட்ரீனல் சுரப்பி


2. மனித உடலில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?


விடை : பிட்யூட்டரி சுரப்பி


3. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எவை?


விடை : மெலட்டோனின்


4. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?


விடை : தைராய்டு ஹார்மோன்


5. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?


விடை: தண்டுவடத் திரவம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.


அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது.


அப்போது ஒரு அப்பத் துண்டு  பெரிதாக இருந்ததினால் அந்த அப்பத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.


இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.


ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவு

🎯’‘அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது’ - அரசாணை எண்.115 விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

🎯கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

🎯 முதுநிலை நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் கடைசி மாற்றாக நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம்

🎯 பகுதி நேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

🎯சரியான பதிலுக்கு தவறு என மதிப்பிட்டதால் கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

🎯வரைவுப் பட்டியல் வெளியீடு | தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் - பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்

🎯அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள்: பறக்கும் படை அமைத்து திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் அறிவுரை

🎯 பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம் கேரளா அரசு முடிவு

🎯 சிறு, குறு நிறுவனங்களுக்கு 10 % மின்கட்டணம் குறைப்பு

🎯உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு

🎯மத்திய அரசு, இபிஎஃப்ஓ ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

🎯 டி 20 உலகக் கோப்பை நியூசிலாந்து வீழ்த்தி பைனலுக்குச் சென்றது பாகிஸ்தான்

🎯வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ. 11, 12-ல் மிக கனமழை என வானிலை மையம் அறிவிப்பு.

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯Court order to suspend tender for purchase of equipment for Government Educational Television

🎯 "Government employees will not be affected" - Chief Minister Stalin's assurance on the matter of Ordinance No. 115

🎯 Cancellation of recognition if additional fee is charged: Tamil Nadu government warns private medical colleges

🎯 Introduction of NEXT exam as last alternative to Master NEET exam next year

🎯 School Education Department notification that part-time teachers will not be paid if they take leave.

🎯I Court Madurai Branch ordered to give teaching job by giving one extra mark for correct answer as wrong

🎯Draft List Release | 6.18 Crore Voters in Tamil Nadu – Female voters are more than male voters in the list

🎯Expired medicines in government hospitals: ICourt advises to set up flying squads and conduct surprise checks

🎯 Kerala Govt passes ordinance to remove Governor from the post of University Chancellor

🎯 10% electricity bill reduction for small and micro enterprises

🎯 Chandrachud sworn in as the 50th Chief Justice of the Supreme Court

🎯 Central Govt, EPFO ​​pensioners can submit digital survival certificate from home

🎯 T20 World Cup defeated New Zealand and Pakistan went to the final

🎯Low Pressure Area in Bay of Bengal: Nov. Meteorological department has announced very heavy rain on 11th and 12th.





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...