பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 16/11/2022 புதன் கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருக்குறள்: அதிகாரம் : அறிவுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
விடை : சமுத்திர குப்தர்
2.பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடு பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
விடை : மண்டல் கமிஷன்
3.அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
விடை :
ஜான் டால்டன்(John Daltan)
4.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
விடை : 1993
5.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
விடை : கோலாலம்பூர் (மலேஷியா)
பழமொழிகள்🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 Example is better than precept
🌸 சொல்வதை விட செய்வதே மேல்
🌸 Experience is the best teacher
🌸 அனுபவமே சிறந்த ஆசான்
இரண்டொழுக்கப் பண்பாடு:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன்.
🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்
நீதிக்கதை:🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தாமஸ் ஆல்வா எடிசன் 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
எடிசனுக்கு காலை ஆகாரம் டீ முதலியவை ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் வேலைக்காரன் அவரை ஆகாரம் சாப்பிடுவதற்கு எழுப்பவில்லை. அச்சமயம் அங்கிருந்த அவருடைய உதவியாள் ஒருவன் ஆகாரங்களில் சிலவற்றை முதலில் சாப்பிட்டானாம். பிறகு எடிசனை ஏமாற்ற எண்ணி வந்திருந்த ஆகாரம் அத்தனையையும் சாப்பிட்டு விட்டுத் தட்டை காலியாக அவர்முன் வைத்து விட்டானாம்.
சில நிமிஷங்களுக்குப் பிறகு, எடிசன் கண் விழித்து பார்த்தார். எதிரே இருந்த மேஜைமீது ஆகாரத் தட்டு காலியாயிருந்தது. அதை கண்ணுற்ற எடிசன் தாம் ஆகாரங்களை சாப்பிட்டுவிட்டதாகவே எண்ணி விட்டாராம்.
சிறந்த விஞ்ஞானியான எடிசன் இவ்வளவு ஞாபக மறதியாக இருந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
இன்றைய முக்கிய செய்திகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ரூ2.50 கோடி காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
🎯 தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்.
🎯ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு நிர்வாக அனுமதி
🎯ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் 5 புதிய கட்டிடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
🎯பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு
🎯 உலக மக்கள் தொகை ரூ 800 கோடியை எட்டியது.
🎯உலக நாடுகளுக்கு இந்தியா தான் நம்பிக்கை ஒளி என பிரதமர் மோடி கருத்து.
🎯 வாக்காளர் சிறப்பு முகங்கள் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
🎯இந்திய அணிக்கு எதிரான டி 20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து அணி அறிவிப்பு: குப்தில், டிரன்ட் போல்ட்டுக்கு இடமில்லை
🎯ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணியில் இருந்து பிராவோ உள்பட 8 வீரர்கள் விடுவிப்
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯 Chief Minister Stalin presented a check of Rs 2.50 crore for Tamil seat at University of Houston.
🎯 Moderate rain will last for five days in Tamil Nadu.
🎯Administrative permission granted by Tamil Nadu Government for construction of 10 hostels for the students of Adhiravidar Welfare School with Rs.44.58 Crores
🎯 5 new buildings at a cost of Rs. 28.35 crores for Adhi Dravidar Health Hostels: Tamil Nadu Government Announcement
🎯 Scholarship for students studying higher education under the Backward and Minorities Welfare Department: Collector Notification
🎯 World population reached Rs 800 crore.
🎯 Prime Minister Modi opined that India is the light of hope for the world.
🎯 Voter Special Faces 7.10 lakh applications received.
🎯New Zealand squad announced for T20I, ODI series against India: No place for Guptill, Trent Boult
🎯CSK in IPL series 8 players including Bravo have been released from the team
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment