Tuesday, November 8, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (09-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 09/11/2022         புதன்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: நிலையாமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

      நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்

   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

விடை : 1993 அக்டோபர் 12

2.பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1757 ஆம் ஆண்டு.

3.எந்த கல்வி கொள்கையானது நமது நாட்டில் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை (10 + 2 + 3) அறிமுகபடுத்தியது?

விடை : தேசிய கல்விக் கொள்கை 1986.

4."தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கியவர்" என் கருதப்படுபவர் யார்?

விடை : பூலித்தேவர்

5.தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சையைக் கைபற்றியது யார்?

விடை : மூன்றாம் கிருஷ்ணர்




பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

.🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

எண்ணங்கள் ஈடேறும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .

பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?
" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"
"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"
" ஒரு பசுமாடு இருக்கு ! "
என்னப்பா சொல்றே
ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .
என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
தம்பி ! ஒண்ணு செய்
" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"
" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்
" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?
அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அவுட்சோர்சிங், தனியார்... அரசாணை எண் 115-ஐ ரத்து செய்யக் கோருவது ஏன்?’ - அரசு ஊழியர்கள் சங்கம் விளக்கம்

🎯அபூர்வ நிகழ்வான முழு சந்திர கிரகணம்: மழை குறுக்கீட்டால் காண முடியாமல் மக்கள் ஏமாற்றம்

🎯குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு.

🎯10% இடஒதுக்கீடு தீர்ப்பு | நவ.12-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

🎯உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் 10% இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சர் பொன்முடி தகவல்

🎯 தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.

🎯'மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க, அந்தந்த மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வழக்காடினார்.

🎯நேபாளத்தில் நிலநடுக்கம்: டில்லியிலும் கட்டடங்கள் 
குலுங்கின 

🎯2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ள இந்தியா : பிரதமர் மோடி லோகோ வெளியீடு

🎯ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி கருத்து

🎯பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர், முதல்வர் வருகை: காந்திகிராமம் பல்கலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்: சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி நேரில் ஆய்வு

🎯 இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காணும் என அமெரிக்க நிதியமைச்சர் கருத்து.

🎯வரும் நவ.,10ம் தேதி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!...

🎯திறமையான வீரர்கள் அதிகம் - இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் கணிப்பு

🎯பிஃபா உலகக் கோப்பை கால்பந்து அட்டவணை




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Outsourcing, private... Why demand cancellation of Ordinance No. 115?'-Government Employees Union Explanation

🎯Rare phenomenon of total lunar eclipse: People disappointed because of rain interruption

🎯Group 2, 2A Primary Exam Result Release.

🎯10% Reservation Judgment | All party meeting chaired by Chief Minister Stalin on Nov.12

🎯10% reservation in Assistant Professor appointments void: Minister Ponmudi informs

🎯 Tamil Nadu draft voter list released today.

🎯 Senior lawyer Kapil Sibil argued on behalf of the Tamil Nadu government in the Madras High Court that 'respective state governments have the right to decide on the state's education'.

🎯Earthquake in Nepal: Buildings in Delhi too
shook

🎯India to chair G20 from December 1, 2022: PM Modi logo release

🎯The mantra of one earth, one family, one future will lead to global welfare, says PM Modi

🎯 Prime Minister, Chief Minister visit for graduation ceremony: Security measures intensified at Gandhigram University: Law and order ATGP inspects in person

🎯 US Finance Minister's opinion that Indian economy will continue to grow.

🎯 Chance of heavy rain in 16 districts on November 10!

🎯A lot of talented players - De Villiers predicts India will win the T20 World Cup

🎯FIFA World Cup Soccer Table







இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...