Monday, November 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (22-11-2022)

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 22.11.2022.    செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: அறண் வலியுறுத்தல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

வரத்தான் வருவதே இன்பம்மற்; றெல்லாம் புறத்தே புகழும் இல

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

     அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் அல்லாதவை; புகழும் இல்லாதவை

   
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.ஒளிச் சேர்க்கை என்பது_______?


 விடை : வேதியல் மாற்றம்


2.இயற்பியல் மாற்றம் ______?


 விடை: பதங்கமாதல்


3.வேதியியல் மாற்றம் _______?


விடை: இரும்பு துருப்பிடித்தல்


4.வேலையின் அலகு _____?


விடை: ஜூல்



5.உழவனின் நண்பன் யார்?


விடை : மண்புழு


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A good beginning Makes good ending
🌹 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


🌷 A bad day never hath a good night
🌷 முதலில் கோணல் முற்றிலும் கோணல்



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

சிரிக்கலைன்னா ஓர் அடி விழும் ஜாக்கிரத…! 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணா சேந்து, ’நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’ அப்படீன்னு ஒரு போட்டி வெச்சுது.


சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த விலங்குகள்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கலைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.

குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரிச்சுது. ஆனா ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி விழுந்துச்சு.


அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் ஓர் அடி.

மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. கரடி எதுவும் நகைச்சுவை சொல்லவேயில்லை. ஆனாலும் ஆமை விடாம சிரிச்சிக்கிட்டிருந்திச்சு. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.

உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, ’கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.

அதுக்கு ஆமை, ’குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா… அதை நினைச்சு சிரிச்சேங்க’ அப்படின்னுச்சாம்.

இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்ப செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்

பின்குறிப்பு: நல்ல வேளை… முள்ளம்பன்றி நின்னு கதை சொல்றேன்னு முதல்லியே நிக்கல… இல்லீன்னா அடி கொடுத்த மிருகத்தோட கை என்னா ஆயிருக்கும்..?!



இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஒன்று முதல் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🎯கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 600 டிஎம்சி தண்ணீர் திறப்பு

🎯 மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு

🎯 தமிழகத்தில் நாள்தோறும் 4500 பேருக்கு மெட்ராஸை பாதிப்பு என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்

🎯 நாடு முழுவதும் 71000 அரசுப் பணி நியமன ஆணைகள் இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி.

🎯மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரம் : நிபுணர்களுடன் நிதி அமைச்சர் ஆலோசனை.

🎯முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர்.

🎯புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்பு

🎯இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 162 பேர் பலி; 700 பேர் காயம்.

🎯நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

🎯விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5வது சதம்; 277 ரன் விளாசி ஜெகதீசன் உலக சாதனை; அருணாச்சலை வீழ்த்தியது தமிழகம்: சாதனை மேல் சாதனை!

🎯உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

🎯4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை வாய்ப்பு

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯 Week 3 Eggs in Anganwadi for children between one and two years of age: Chief Minister M.K.Stal's announcement

600 TMC water release from Cauvery to Tamil Nadu after last 60 years

🎯 Veteran Tamil scholar Auwai Natarasan passes away

🎯 In Tamil Nadu, 4500 people are affected by Madras every day. Subramaniam information

🎯 PM Modi issues 71000 government job appointment orders across the country today.

🎯Intensity of central budget preparation work: Finance Minister consultation with experts.

🎯Yasakar who donated Rs.10,000 to the Chief Minister's Relief Fund.

🎯Arun Goyal sworn in as the new Election Commissioner today

🎯Earthquake in Indonesia kills 162; 700 people were injured.

🎯 People stuck indoors due to blizzard in New York..!

🎯Vijay Hazare's 5th consecutive century in the series; Vlasi Jagatheesan's world record of 277 runs; Tamil Nadu defeated Arunachal: achievement after achievement!

🎯World Cup Football Match: England beat Iran 6-2 with a huge victory

🎯 Heavy rain is likely in 4 districts today





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...