Monday, November 7, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (08-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 08/11/2022         செவ்வாய்க்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பொறையுடைமை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

🌸 பொருள்:
🍀🍀🍀🍀🍀

தன்னைத் தோண்டினாலும் தன்னைத் தோண்டுபவர் விழாதபடி தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரையும் பொறுப்பதே தலையாய பண்பாகும்.
   
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 

1. இந்தியாவில் மிக நீளமான அணைக்கட்டு எங்கு உள்ளது?

விடை : ஹிராகுட் அணைக்கட்டு (ஓடிசா)

2. இந்தியாவில் தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் எங்கு உள்ளது?

விடை : புனே

3.இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?

விடை : ரிப்பன்

4.இயற்பியல் துறையில் நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி?

விடை : சர்.சி.வி.ராமன்

5. முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர்?

விடை : தாலமி



பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 A contended mind is a continual feet
🌹 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

🌷 A friend in need is a friend indeed
🌷 ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    🌸 நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும் என்பதை அறிவேன்.

     🌸எனவே எப்பொழுதும் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து என்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
நமக்கு ஒரு வால் கிடைக்காதா!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.


காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.


அடுத்தவன் பார்த்தான்.


நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.


இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் போக வேண்டிய திசை வேறு.


போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. 


கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!


ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...


‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’


ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’


தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯“மாநில அரசுகளே கல்விக்காக அதிக செலவு செய்கின்றன” - கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கில் வாதங்கள் முன்வைப்பு

🎯தமிழகத்தில் பிளஸ் 2-க்கு மார்ச் 14, பத்தாம் வகுப்புக்கு ஏப்.6-ல் பொதுத் தேர்வுகள் தொடக்கம்

🎯 பொது பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

🎯“10% இட ஒதுக்கீடு தீர்ப்பு... சரித்திரப் புகழ் வாய்ந்தது” - அண்ணாமலை வரவேற்பு

🎯வரும் நவ.,9ல் உருவாகுது காற்றழுத்த தாழ்வு பகுதி: 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

🎯 இன்று சந்திரகிரகணம்: தமிழகம் முழுவதும் கோயில் நடை அடைப்பு

🎯ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் படிக்க 49 வெளிநாட்டு பல்கலையுடன் ஒப்பந்தம்: யுஜிசி தலைவர் தகவல்

🎯காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு: ‘காப் 27’ - முக்கிய தீர்மானம்

🎯அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: ஐசிசி அறிவிப்பு

🎯T20 WC | அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்: 'லகான்' படத்தை ஒப்பிட்டு மீம்ஸ் போடும் ரசிகர்கள்




TODAY'S ENGLISH NEWS: 

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Student from Chennai Special School for Muscular Dystrophy wins big in State swimming competition

🎯Class 12 State board exams to commence from March 13, 2023 in Tamil Nadu

🎯NEET coaching for T.N. government school students from November 3rd week

🎯42nd Constitutional Amendment shifting education from State to Concurrent list is ‘a poisonous tree’, HC told

🎯Upholding EWS quota may seal the fate of the challenge to Tamil Nadu quota law without a hearing: Justice Bhat’s note of caution

🎯Reservation policy cannot stay for indefinite period, says Supreme Court

🎯FCRA amendment in 2020 to discourage NGOs from spending on posh buildings and luxurious vehicles: MHA annual report

🎯ICC T20 World Cup 2022 | India has ticked all the boxes en route to the semifinals

🎯Virat Kohli named ICC player of month for October











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன்  முதுகலை தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் , புதுக்கோட்டை மாவட்டம்-622 502
 
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...