Sunday, November 13, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (14-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 14/11/2022      திங்கட்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  இன்னாசெய்யாமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்?

விடை  : எம்.ஜி.ராமச்சந்திரன்

2.தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?

விடை : மதுரை

3.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?

விடை : 1955

4. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்?

விடை : மறைமலை அடிகள்

5.தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?

விடை : விருதுநகர்

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

. நேரம் தவறாமை 
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.

இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.


சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.

நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய இன்று சீர்காழி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

🎯 மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

🎯10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு: நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.

🎯ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம்; கன மழை தொடர்வதால் டெல்டா விவசாயிகள் கவலை.

🎯சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மை, உழவர் நலத்துறை வேண்டுகோள்

🎯அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகள் என ஒன்றிய அரசு முடிவு

🎯ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் மோடி

🎯பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சியில் இங்கிலாந்து - இந்தியா இடையிலான உறவு மேம்படும்: முன்னாள் பிரதமர் போரிஸ் கருத்து

🎯 டி20 உலக கோப்பை இங்கிலாந்து சாம்பியன்ஷிப்


TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Chief Minister M.K.Stalin is coming to Sirkazhi today to inspect the effects of rain in person

🎯 Today is a holiday for schools and colleges in Mayiladuthurai district

🎯Refusal to buy Rs 10 coin: Warn that action will flow.

🎯 One lakh acres of paddy crop is at risk of rotting; Delta farmers are worried as heavy rains continue.

🎯 Farmers who have not insured their Samba/ Thaladi/ Bisanam paddy crop are requested to get insurance by November 15.

🎯The Union Government has decided to have 100 more medical colleges across the country in the next 5 years

🎯 Prime Minister Modi will go to Indonesia tomorrow to participate in the G20 Summit

🎯UK-India relationship will improve under Prime Minister Rishi Sunak: Former Prime Minister Boris

🎯 T20 World Cup England Championship







🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...