பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 04.11.2022. வெள்ளிக்கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: காலம் அறிதல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀🍀
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது?
விடை: கன்னியாகுமரி- சேலம்.
2.நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள கண்டம்?
விடை : ஆப்ரிக்கா
3.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
விடை: 12754 கி.மீ
4.இந்தியாவின் காளான் பாறைகள் எங்கு காணப்படுகிறது?
விடை : இராஜஸ்தான்
5.இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம்
விடை : 4%
பழமொழி (proverbs ) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 Every cloud has a silver lining
🌹 தீமையிலும் நன்மை உண்டு
🌷 Every man is his own doctor
🌷 தன் நோய்க்கு தானே மருந்து
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பண்பும் பணிவும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁
மனமே மாமருந்து
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.
மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டது.
இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும். ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.
ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும் அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.
ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.
ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது.
எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம்: மதுரை மாநகராட்சி அதிரடி
🎯உதவிப் பேராசிரியர் பணியிட நிலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
🎯14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் - போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை
🎯 மத்திய கல்வி அமைச்சக செயல் திறன் ரகக் குறியீடு சண்டிகர் மற்றும் 5 மாநிலங்கள் சிறப்பிடம்
🎯சூரிய மின் உற்பத்தி திறன்: தமிழகம் 4வது இடம்
🎯நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.
🎯கடந்தாண்டில் நாடு முழுதும் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு
🎯தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
🎯 இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு டிசம்பர் 10-இல் தேர்தல் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.
🎯 ஷாக் கொடுத்த பாதாம் அரை இறுதி ஆட்டத்தில் பங்கேற்க நீடிக்கும் பாகிஸ்தான்.
TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Punjab refused to use biodecomposer to control stubble burning: Union Environment Minister
🎯Survey indicates that only 13% of high school students in rural areas curious about tech powering gadgets
🎯 Tamil Nadu Rains | Delta, southern districts likely to get heavy to very heavy rainfall on Friday
🎯 Tamil Nadu Rains | Panel to study a few flooded areas in Chennai to work on solution, says Minister K.N. Nehru
🎯Stop November 6 Khalistan referendum, ban SFJ, India tells Canada
🎯No other country has the locus standi to speak about Kashmir: India
🎯Netanyahu set to return to power in Israel after PM concedes
🎯Men In Blue show their mastery of survival in high-pressure skirmishes
🎯ICC T20 World Cup 2022 | Shadab’s all-round show helps Pakistan stay alive with win over SA
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
No comments:
Post a Comment