Thursday, November 10, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (11-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 11/11/2022      வெள்ளிக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  செய்ந்நன்றி அறிதல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது                                                                                                                                                                                                                         
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்க பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது
    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.  இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை  :  ஞானபீட விருது

 2.  இந்தியாவின்் முதல் செயற்கைக் கோள் எது?

விடை : ஆரியபட்டா.       
             
3 ) இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?

விடை : வேளாண்மை

4. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

 விடை : வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

5. இந்திய தேசியக் கொடியைை வடிவமைத்தவர்?

விடை  :  பிங்கல வெங்கையா

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Practise makes man perfect

🌸 சித்திரமும் கைப்பழக்கம்

🌸 Prevention is better than cure

🌸 வருமுன் காப்பதே சிறந்ததே


இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.    
                                            
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நான் கத்தவே இல்லை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு  வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.


மயங்கி விழுந்தார் விமானி.



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி பொது சுகாதாரத் துறையில் சுகாதார அலுவலர்க்கான காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🎯 கன மழை காரணமாக இன்று சென்னை உள்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் , பெரம்பலூர், சிவகங்கை-(பள்ளிகளுக்கு மட்டும்), புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்-(பள்ளிகளுக்கு மட்டும்) , கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், திருப்பத்தூர்-(எட்டாம் வகுப்பு வரை), மதுரை, தேனி, திண்டுக்கல்-(பள்ளிகளுக்கு மட்டும்), தர்மபுரி (பிள்ளைகளுக்கு மட்டும்) ஆகிய 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

🎯 கனமழை காரணமாக 11, 12 ஆகிய இரண்டு நாட்களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

🎯 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

🎯 ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம் என புதிய உத்தரவு.

🎯 இன்று காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு:ட்ரோன்கள் பறக்க தடை: 3,000 போலீசார் பாதுகாப்பு

🎯இந்தியாவுக்கு கைகொடுத்த சூரிய மின்சக்தி - 6 மாதங்களில் மிச்சமானது ரூ.34,328 கோடி!

🎯கேரளா நிகர்நிலை பல்கலை. வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் நீக்கம்

🎯ஜி20 மாநாடு: வரும் 14-ல் இந்தோனேஷியா செல்கிறார் மோடி

🎯டி20 உலக கோப்பை: பைனலில் இங்கிலாந்து - பாகிஸ்தான்., மோதல்

🎯மிஸ் யூ கேப்டன் தோனி! - இந்திய அணியின் T20 WC அரையிறுதி தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ரியாக்‌ஷன்


TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🎯Tamil Nadu Government Staff Selection Commission has published notification to fill the vacant posts of Health Officer in Public Health Department.

🎯 Due to heavy rain, the respective District Collectors have declared rain holiday for schools and colleges in 10 districts including Chennai including Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Tiruvarur, Ranipet, Nagai, Tanjore and Vellore.

🎯 TNPSC Group 1 Exam Hall Ticket Release.

🎯 New order makes it mandatory to renew Aadhaar card once in 10 years.

🎯 Gandhi Gram University Convocation today; PM Modi, CM Stalin participation: Ban on flying drones: 3,000 policemen for security

🎯Solar power given to India - Rs.34,328 crore left in 6 months!

🎯Kerala Online University. Removal of Governor from the post of Chancellor

🎯G20 Conference: Modi is going to Indonesia on the 14th

🎯T20 World Cup: England vs Pakistan in the final, Clash

🎯Miss you Captain Dhoni! - Fans reaction after India's T20 WC semi-final defeat


🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...