Wednesday, November 2, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (03-11-2022)

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 03.11.2022.    வியாழக்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்:  சான்றோண்மை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்.
எந்நலத்து உள்ளதூஉம் அன்று 

                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

சான்றோரின்  நலன் எனக் கூறப்படுவது அவர்களின் பண்புகளின் நலமே மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

விடை: கெப்ளர்

2.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

விடை: குறிப்பறிதல்

3.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

விடை:15 ஆண்டுகள்

4.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?

விடை: postal index code

5.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: 1912

பழமொழி (proverbs ) :

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷True beauty consists in purity of heart
🌷இதயத்தூய்மையே உண்மை அழகு. 


🌹Beauty without bounty avails not
🌹கருணை இல்லா அழகு பயனற்றது.
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      பண்பும் பணிவும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் அன்புடனும் பணிவுடனும் நடந்து  ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

பொறுமைக்கு கிடைத்த பரிசு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.
.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

🎯அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி தொடங்காததால் மாணவர்கள் குழப்பம்

🎯உயர்கல்விகள் தாய் மொழியில் கற்பது சிறப்பு என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் கருத்து.

🎯 மருத்துவர் மாணவர் சேர்க்கை உளவியல் பரிசோதனை கட்டாயம்

🎯 காற்றின் தரம் உயரும் வரை தில்லி பள்ளிகளை மூட பரிந்துரை.

🎯டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!

🎯இவ்வாண்டு கொண்டாடுப்படும் 1037 - ஆவது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு 03.11.2022 அன்று வியாழக்கிழமை , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

🎯தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

🎯2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

🎯ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள் | நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு - 2ம் இடத்தில் புதுச்சேரி

🎯நம் நாட்டில் ‘டிஜிட்டல் கரன்சி’ மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை



TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 North East monsoon yet to become active over Trichy, Ariyalur, Karur.

🎯TIDCO to conduct techno feasibility study on second airport for Chennai

🎯Mamata meets Stalin in Chennai

🎯IIT-M announces Shaastra Juniors make-a-thon contest for schoolchildren

🎯T20 World Cup 2022 | India beats Bangladesh by 5 runs in rain-curtailed thriller

🎯Virat Kohli becomes top run-scorer in T20 World Cup history
 



இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...