பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻நாள் : 24.11. 2022. வியாழக்கிழமை.
திருக்குறள் : அதிகாரம் : பெருமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும் செய்கின்ற தொழில்ளின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பு இயல்பு ஒத்திருப்பது இல்லை.
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்?
விடை : கால்சியம்
2.Q.) கைரேகையை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
விடை : எட்வர்ட் ஹென்றி
3. கண் பார்வையற்றவர் படிக்கும் பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?
விடை : லூயி பிரெயில்
4. விமானத்தில் இருந்து உயிர் காக்க உதவும் பாராசூட்டை கண்டுபிடித்தவர்?
விடை : ஏ.ஜே.கெமனின்
5. அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை : 1792.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Sadness and gladness succeed eash other
🌸 வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்
🌸 Self help is the best help
🌸 தன் கையே தனக்கு உதவி
இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.
நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது
பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.
அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.
அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.
உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.
கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.
உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.
எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
🎯 BE துணை கலந்தாய்வு நிறைவு 7079 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
🎯 நர்சிங் படிப்போருக்கு ரூ 7500 என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
🎯 அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம்1000 நாட்கள்.
🎯அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம்
🎯சர்வதேச மந்தநிலையிலும் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா
🎯தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து
🎯சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான U-19 கால்பந்து போட்டி: மதரஸா பள்ளி சாம்பியன்
🎯FIFA WC 2022 | இது 2-வது ‘ஷாக்’... ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்!
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம்-622504
அலைபேசி எண்: 9789334642 .
TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🎯 Minister of Higher Education Ponmudi has announced a new syllabus for the coming academic year in all universities.
🎯 Completion of BE Supplementary Counseling Allotment of Seats for 7079 Candidates
🎯 Chief Minister Stalin orders Rs 7500 for nursing students
🎯 Waiting period for US visa interview is 1000 days.
🎯Action if conductors refuse to buy Rs.10, Rs.20 coins in government buses: Transport Corporation
🎯India is growing fast despite the global recession
🎯Chief Election Commissioner should be non-political – Supreme Court Constitution Bench opinion
🎯Chennai Revenue District Inter-Schools U-19 Football Tournament: Madrasa School Champion
🎯FIFA WC 2022 | This is the 2nd 'Shock'... Japan defeated Germany!
🌸இனிய காலை வணக்கம் ....✍
❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம்-622504
அலைபேசி எண்: 9789334642 .
No comments:
Post a Comment