Thursday, November 17, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (18-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 18ப/11/2022      வெள்ளிக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  செய் நன்றி அறிதல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.   
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரியதாகும் 




    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
விடை : கங்கை.
 2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை : ஹாக்கி                   
3. நமது தேசியக் கொடி நீளம் 12 அடி என்றால் அதன் அகலம் என்ன?
விடை : 8 அடி.
4. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
 விடை : 5 ஆண்டுகள்.
5. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
விடை : M.S.சுவாமிநாதன்

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌷 HUMILITY OFTEN GAINS MORE THAN PRIDE
🌷 அடக்கம் ஆயிரம் பொன் தரும்

🌹HUNGER BREAKS STONE WALLS 
🌹 பசி வந்தால் பத்து பறந்து போகும் 





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நரியும் பூனையும் 

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்துச்சு. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அதுங்கள பிடிக்காது”, என்று நரி சொல்லிச்சு. “ஆமா ஆமா எனக்கும் அவங்கள சுத்தமா புடிக்காது” என்று பூனையும் சொன்னது.

“அதுங்க ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அதுங்களால என்ன புடிக்க முடியாது. ஏன்னா, அதுங்க கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்லு”, என்று அந்தப் பூனை கேட்டது.


அதுக்கு நரி சொல்லிச்சு, “வழியா ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. அப்படி எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.

“நிஜமாகவா” என்று அந்தப் பூனை கேட்டுச்சு. அதுக்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதுல ஒண்ணு கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏன்னா அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க பண்ணக் கூடியது” என்று அந்த நரி பெருமையா பேசிக்கிட்டு இருந்து. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக்கொண்டிருக்கும்போது வேட்டை நாய்கள் ஓடி வர சத்தம் கேட்டது.


உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாத்திக்க போறேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்துல ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாத்திக்க போறேன்னு நானும் பாக்குறேன்” என்று அந்த நரி கிட்ட பூனை சொன்னது. 

அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தி பாத்திச்சு ஆனா அதால அந்த வேட்டை நாய்கள் கிட்ட இருந்து தப்பிக்க முடியல. வேட்டை நாய்கள் அந்த நரியை கொன்று சாப்பிட்டுச்சாம்.


நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள்: ரூ.13 கோடி பங்களிப்பை அரசே ஏற்கும் என அறிவிப்பு

🎯 சீர்காழியில் இன்று 18-11-2022 பள்ளி விடுமுறை

🎯 தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக நீதிபதி பாரதிதாசன் நியமனம்.

🎯வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு 

🎯தமிழ்நாட்டில் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.32 கோடி மானியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு 

🎯கால்பந்து வீராங்கனை மரணம்: மருத்துவ அறிக்கை வெளியீடு

🎯 இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் துவக்கம்

🎯வெலிங்டனில் முதல் டி.20 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்; வெற்றியுடன் தொடங்குமா ஹர்திக் பாண்டியா அன்கோ

🎯காமராஜர் பல்கலை.,யில் தொல் மரபியல் ஆய்வகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

🎯காசி தமிழ்ச் சங்கமம் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார் - இளையராஜா இன்னிசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி

🎯இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை ஏவப்படுகிறது

🎯 அமெரிக்கா பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது குடியரசு கட்சி

🎯டேவிட் மலான் சதம் வீண் - வார்னர், ஸ்மித் அபார ஆட்டத்தில் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

🎯ஃபிஃபா WC | நட்சத்திர விடுதிக்கு பதிலாக கத்தார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள மெஸ்ஸி & அர்ஜென்டினா அணியினர்

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Houses for Retired Dandee Workers: Government to Accept Contribution of Rs.13 Crore Announced

🎯 Today 18-11-2022 is a school holiday in Sirkazhi

🎯 Justice Bharathidasan appointed as Chairman of Tamil Nadu Backward Persons Commission.

🎯 Tamil Nadu government announcement that all schools and colleges will function on Saturday

🎯Rs.32 crore subsidy for 16 government vocational training institutes in Tamil Nadu: Union government announcement

🎯Football player death: Medical report released

🎯 Phase II Medical Counseling Initiation

🎯India-New Zealand clash tomorrow in the first T20 match in Wellington; Will Hardik Pandya start with a win?

🎯 Paleogenetics Laboratory at Kamarajar University: Minister Palanivel Thiagarajan inaugurated

🎯Kasi Tamil Sangamam Prime Minister inaugurates tomorrow - grand event with Ilayaraja Innisai

🎯India's first private rocket 'Vikram S': Launched from Sriharikota this morning

🎯 The Republican Party took over the US House of Representatives

🎯David Malan century in vain - Warner, Smith brilliant Australia beat England easily

🎯FIFA WC | Messi & Argentina team camped at Qatar University instead of star hotel






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலை தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...