Wednesday, November 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (01-12-2022)

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 01.12. 2022.       வியாழக்கிழமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்:அதிகாரம்:அறிவுடைமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
.                                                                                                                                                                                                                                   
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. இந்தியாவில் பெரிய கடல் பாலம் எது?

விடை  :  அண்ணா இந்திரா காந்தி பாலம் (தமிழ்நாடு)

 2. இந்தியாவின் மிகப்பெரிய கோளரங்கம்?

விடை : பிர்லா கோளரங்கம் (கொல்கத்தா)   
              
3 ) இந்தியாவின் மிக உயரமான அணை எது?

 விடை : டெஹ்ரி அணை (உத்தரகண்ட்)

4. இந்தியாவில் மிக உயர்ந்த நுழைவாயில் வழி எது?

 விடை : புலாண்ட் தர்வாஸா

5.  இந்தியாவில் வீர தீரம் மிக்க செயலுக்கான உயர்ந்த விருது எது?

விடை    : பரம்வீர் சக்ரா.

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 🌸Jack of all trade is master of none

🌸 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

🌸 Justice delayed is justice denied

🌸 தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்






 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சொல்லும் செயலும் சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் சொல்வது போலவே நடத்தையிலும் பிறர் போற்றும் வண்ணமே நடந்து கொள்வேன்.




 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...



இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு புதிய பெயர் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

🎯 சிறை அலுவலர் பணிக்கு டிசம்பர் 26 இல் கணினி வழி தேர்வு

🎯தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ரூ.40.89 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

🎯 வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை 100 நிறுவனங்கள் அறிவிப்பு

🎯 ஜல்லிக்கட்டு எந்த வழியிலும் அனுமதிக்க முடியுமா என்பது இறுதி கேள்வியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

🎯 கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு

🎯 இடுக்கி அணையை காண இன்று முதல் அனுமதி

🎯திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

🎯‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்கிறது: நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்கள் ஜொலிக்கும்

🎯எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்

🎯ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் இந்தியாவுக்கு முதல் வெற்றி








TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


🎯 Chief Minister Stalin's announcement that the new name for the School Education Complex is Professor Anbazhagan Education Complex

🎯 Computerized Examination for Jail Officer Job on December 26

🎯Rs 40.89 crore prize to encourage Tamil athletes: Minister Meiyanathan informs

🎯 100 companies working only four days a week

🎯 Supreme Court announcement that whether Jallikattu can be allowed in any way is the final question.

🎯 Additional DGP Tamaraikannan retired

🎯 Permission to visit Idukki Dam from today

🎯Special Trains Notification for Deepa Festival at Thiruvannamalai

🎯India to chair G-20 tomorrow with slogan 'One Earth, One Family, One Future': 100 memorials will light up across the country

🎯Indian Army uses hawks to destroy enemy drones

🎯First win for India in hockey series against Australia














🌸இனிய காலை வணக்கம் ....✍     
         
இரா . மணிகண்டன் முகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
                                   


Tuesday, November 29, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 30-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 30.11.2022.    புதன்கிழமை  .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: மக்கட்பேறு

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

       மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
       

   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.நீரில் கரையாத பொருள் எது?

*விடை* : கந்தகம்

2.நீரில் கரையாத வாயு எது ?

*விடை* : நைட்ரஜன்

3.பளபளப்புக்கொண்ட அலோகம் ?

*விடை* : அயோடின்

4.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ?

*விடை* :  ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

5.இரும்பு துருபிடித்தல் என்பது ?

*விடை* : ஆக்சிஜனேற்றம்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 Union is strength
 🌹 ஒற்றுமையே வலிமை


🌷 Unity in diversity
🌷 வேற்றுமையில் ஒற்றுமை



இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஊக்கமும்  உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன்  உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.




 நீதிக்கதை
🍁🍁🍁🍁🍁🍁

திரும்பி வந்த மான்குட்டி 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஒரு காடு. மரத்தடியில் இரண்டு புள்ளிமான்கள் படுத்திருந்தன. அம்மா மான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும் போல. தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.

“ஏம்மா, தனியாகப் போகக் கூடாதா?”

“நல்லவேளையாக இந்தக் காட்டில் சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக்காரர்களால் எந்த நேரமும் ஆபத்து உண்டு.”

“எப்படி அம்மா?”


“உன்னைப் போல் குட்டியாக இருந்தபோது, நான் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, படாதபாடு பட்டேன்.”


“ஐயோ... அப்புறம், எப்படித் தப்பி வந்தாய்?”


“ஒருநாள் நான் துள்ளிக் குதித்துச் சென்றுகொண்டிருந்தேன். என் கால்கள் அங்கே விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக்கொண்டன. வேடன் வந்தான். என்னை வலையிலிருந்து விடுவித்தான். கால்களை நன்றாகக் கட்டித் தூக்கிக்கொண்டு போனான்.”

“எங்கே அம்மா?” என்று பதற்றத்துடன் கேட்டது குட்டி மான்.


“என்னை ஒரு பணக்காரரிடம் விற்றுவிட்டான். அவர் வீட்டில் இருந்த ஒரு பையனும் பெண்ணும் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து வந்தார்கள். என்னைக் கட்டிப் போட்டார்கள். பிரியமாக இருந்தார்கள். முள்ளங்கி, கேரட், முட்டைகோஸ், தக்காளி, வாழைப்பழம் எல்லாம் கொடுத்தார்கள். நான் எதையுமே சாப்பிடவில்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. நான் எதுவுமே சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து வருந்தினார்கள். அப்பாவிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

அந்த அப்பாவும் யார் யாரையோ அழைத்து வந்து காட்டினார். என் வாய்க்குள் மூங்கில் குழாயை வைத்து அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றினார்கள். முள்ளங்கியையும் தக்காளியையும் நன்றாக அரைத்துத் தண்ணீரில் கலந்து பலவந்தமாக வாய்க்குள் செலுத்தினார்கள். அதனால், நான் சாகாமல் இருந்தேன். ஆனாலும் உடம்பு இளைத்தது. பத்து நாட்கள் இப்படிச் செய்து பார்த்தார்கள். பத்தாம் நாள் நான் படுத்துவிட்டேன். என் நிலைமையைப் பார்த்த அந்தப் பெண் குழந்தை, ‘அப்பா, நாங்கள் சந்தோஷமாக இருக்கத்தானே இதை வாங்கினீங்க? பாவம், இதற்கு உடம்பு சரியில்லை. செத்துப்போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. காட்டில் விட்டு விடலாம்’ என்றாள். அன்று மாலையே ஒரு வண்டியில் என்னை ஏற்றி இந்தக் காட்டிலே கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.”

அம்மா மான் சொன்னதைக் கேட்டதும், “பங்களா, தோட்டம், அன்பான பிள்ளைகள், தின்பதற்கு நிறைய காய்கறி, பழங்கள்... இவ்வளவு இருந்தும் இங்கே வந்துவிட்டாயே?” என்றது குட்டி மான்.

“என்ன இருந்தால் என்ன? என் அம்மா, அப்பா, சிநேகிதர்கள் எல்லாரையும் பிரிந்து இருக்க முடிய வில்லையே! எப்போதும் என்னை அங்கே கட்டிப் போட்டே வைத்தார்கள். சுதந்திரமாகத் துள்ளித் திரிய முடியவில்லை. கேவலமான வாழ்க்கை.”


இப்படி அம்மா மானும் குட்டி மானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன. ‘நானாக இருந்தால், திரும்பியே வந்திருக்க மாட்டேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த அம்மா ஏன்தான் திரும்பி வந்ததோ?’ என்று குட்டி மான் நினைத்தது. ஒருநாள் இரவு நேரம். யாருக்கும் தெரியாமல் குட்டி மான் புறப்பட்டது. காட்டின் எல்லைக்கு வந்துவிட்டது. ‘விடிவதற்குள் மனிதர்கள் வசிக்கும் ஊருக்குள் போக வேண்டும். பங்களா ஒன்றுக்குள் புகுந்துகொள்ள வேண்டும். விடிந்ததும், அந்த வீட்டுக் குழந்தைகள் என்னைப் பார்ப்பார்கள். கட்டி அணைப்பார்கள். நிறைய தின்னத் தருவார்கள்’ என்று நினைத்தது.

அப்போது ஒரு முயல் ஓடி வந்தது. அதைப் பார்த்ததும் குட்டி மான், “முயலண்ணே, எங்கிருந்து ஓடி வருகிறாய்?” என்று கேட்டது.

“சிறிது தொலைவில் உள்ள நகரத்திலிருந்துதான். என்னையும் இன்னொரு முயலையும் வேடன் பிடித்துச் சென்று, பணக்காரர் வீட்டில் விற்றுவிட்டான். ஒரு மாதம் சந்தோஷமாக வளர்ந்தோம். அந்த வீட்டுக் குழந்தை உமா என்னிடம் அன்பாக இருந்தாள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. சமையல்காரர் எங்கள் அருகே வந்தார். என்னைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தார். பிறகு என்னோடு இருந்ததே, அந்த முயலையும் தூக்கிப் பார்த்தார். என்னைவிட அது கனமாக இருக்கிறது என்று அதைத் தூக்கிக்கொண்டு சமைக்கப் போய்விட்டார். என் உடம்பு நடுங்கியது. தப்பிக்க நினைத்தேன். ஆனாலும், உமாவைப் பிரிய மனம் வரவில்லை.

இன்று அதிகாலை உமா என்னிடம் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு என்னைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தாள். இந்தக் காடு தெரிந்ததும் கலங்கிய கண்களுடன், ‘ஓடு, ஓடு’ என்று அனுப்பி வைத்தாள். எனக்கு அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை. உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது?”

“உண்மையா?”

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற பிராணிகளை மனிதர்களில் பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள்; பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.” ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துதான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯மக்கள் தொண்டு தவிர மாற்று சிந்தனை எனக்கு இல்லை சட்டம்-ஒழுங்கை கெடுக்க சதி: அரியலூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

🎯ஒவ்வொரு ஆண்டும் 15 இடங்களை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

🎯பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் உள் புகார் குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

🎯 ஆதார் இணைக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை என மின்வாரியம் அறிவிப்பு

🎯 சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் டிசம்பர் 1 இல் அறிமுகம்

🎯 விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை விண்ணப்பிக்கலாம்

🎯ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

🎯ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

🎯நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

🎯உலகக்கோப்பை கால்பந்து 2022: வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி

🎯உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈரான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது அமெரிக்கா அணி


TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 🎯I have no alternative thought other than people's charity Conspiracy to destroy law and order: Chief Minister M.K.Stalin's attack at Ariyalur function

🎯Action to turn 15 places into tourist destinations every year: Minister Madivendan interview

🎯Internal Complaint Committee should be set up in schools to prevent sexual crimes: Court orders Tamil Nadu Govt

🎯 Electricity board notification to take action if money is collected for linking Aadhaar

🎯 Digital currency for retail transactions launched on December 1

🎯 Special grant for athletes can be applied for

🎯Danger of camel flu spread: World Health Organization warning

🎯Singapore Airlines official announcement of Vistara Airlines merger with Air India

🎯Farming 100 feet below the ground!: "Vertical Farming" gaining popularity in London

🎯World Cup Football 2022: England beat Wales 0-3

🎯World Cup Soccer 2022: USA beat Iran 0-1




இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Monday, November 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (29-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 29.11.2022.    செவ்வாய்க்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: வாய்மை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
   

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர் யார்?

*விடை* : கோமல் சுவாமிநாதன்

2. கம்பராமாயணத்தில் உத்தரகாண்டத்தைப் பாடியவர் யார்?

*விடை* : ஒட்டக்கூத்தர்

3. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர் யார்?

*விடை* : அசலாம்பிகையார்

4. "பராபரக் கண்ணி" - பாடியவர் யார்?

*விடை* : தாயுமாணவர்

5. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர் யார்?

*விடை* : அயோத்தி தாசர்


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹 All covt, all loss
🌹பேராசை பெரு நஷ்டம்

🌷 Art is long and life is short
🌷 கல்வி கரையில, கற்பவை நாள் சில




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கோடாரி உத்தி


மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 'எங்கும் அறிவியல் யாதும் கணிதம்' 13210 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம். 25 லட்சம் மாணவ மாணவியர் பயன்
🎯பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்; பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல்

🎯 மாளிகை மேடு அகழாய்வு பணிகள்: முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு.

🎯 எய்ம்ஸ் சர்வர் ஆறாவது நாளாக நடக்கும் 200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்

🎯அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

🎯இந்தியாவில் முதன்முதலாக தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளம் திறப்பு

🎯டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி; அதிரடி கைது

🎯ஐ.நா. தலைமையக வளாகத்தில் காந்தி மார்பளவு சிலை.

🎯சார்லஸ் டார்வின்கையெழுத்திட்ட ஆவணம் ரூ.9 கோடிக்கு ஏலம்.

🎯இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு

🎯FIFA WC 2022 | ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது பிரேசில்: சுவிட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தியது

TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 'Anywhere Science Any Mathematics' Rainbow forum started in 13210 government schools. 25 lakh students will benefit
🎯Chief Minister inaugurated Chipkot Industrial Park at Eraiyur near Perambalur; Foundation stone for Phoenix Kothari Shoe Park

🎯 Palace Mound Excavation Work: Inspection by Chief Minister M. K. Stalin.

🎯 Hackers asking for 200 crore AIIMS server going on for sixth day

🎯Chief Minister M.K.Stalin gave financial assistance of Rs.10 lakh to Ariyalur hockey player Karthik.

🎯Inauguration of the first rocket launch pad of a private company in India

🎯Fake CBI Officer Stayed in New Delhi Tamil Nadu House; Action arrest

🎯 UN Bust of Gandhi in the headquarters complex.

🎯Charles Darwin's document auctioned for Rs.9 crore.

🎯PT Usha elected as the first woman president of the Indian Olympic Association

🎯FIFA WC 2022 | Brazil advance to Round of 16: beat Switzerland 1-0





இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Sunday, November 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (28-11-2022)

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 28.11.2022.    திங்கட்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷🌷🌷🌷🌷

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
                                                                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

   அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?

*விடை* : 1955

2.தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர்?

*விடை* : முதலமைச்சர்

3.காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி எது?

*விடை* : பவானி

4.வைகை ஆறு தோன்றுமிடம்?

*விடை* : அகஸ்தியர் குன்றுகள்

5.தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு?

*விடை* : 2008


பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌹An artist Lives everywhere
🌹 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

☘️ All things are difficult before they are easy
☘️ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்




 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்
.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

கரடு முரடான மலைப்பாதை... மலைப்பாதையை கரடு முரடு எனும் அடைமொழி சேரக் காரணமாய் கூரிய வளைவுகளும், மேடு பள்ளங்களும்... வளைவிலே இரண்டு வண்டிகள் ஒரே நேரத்தில் பாதையை கடப்பதென்பது மலையிலிருந்து குதிப்பதற்கு சமம்.பேருந்தில் பயணிக்கும்போது, "விழுந்துடுவோமோ..... விழுந்தா அவ்வளவுதான்.....ச்சே..ச்சே...விழாது....." இப்படியெல்லாம் பலவாறு எண்ணங்கள் பயணிகளின் உள்மனதில் 1%விழுக்காடாவது வந்துவிட்டு செல்லும்.அப்படியொரு பாதை..... சரி....சரி....கதைக்கு வந்து விடுகிறேன்.

இந்த மாதிரியான பாதையில் இளைஞன் ஒருவனுக்கு,இரவில் பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம். மனித வர்க்கத்திற்கே உரித்தான ஒரு வார்த்தைதான் நிர்பந்தம். ஆம்.... காலையில் கூட்டிலுருந்து செல்லும் பறவைக்கு, மாலையில் கூடு திரும்பாமலிருக்கவும், சென்ற இடத்திலேயே தங்கி விடவும் எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை. இரவிலே தூங்காமல்,பகலைப் போல் சுற்றித்திரிய விலங்குகளுக்கு எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை.எனவே இந்த சொல் அவைகளுக்கு சொந்தமில்லை.அதற்க்கு சொந்தக்காரன் மனிதன் மட்டுமே.

அப்படி அந்த இளைஞன் செல்லும்போது, திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம்., அவனை பெரிய பாதிப்புக்குள்ளாகியது. "ஆ.....அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக் கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும்.... வேட்டையாடும் புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும்,மண்ணின் மீதும் விரல்களை வைத்து பதித்துக் கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன் செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக.. கடைசியாக அவனுக்கு கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் முதல் வானம் வரை சென்று திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில்...எங்கிருக்கிறோம்..என்னவாகப் போகிறோம்...என்று யோசித்து பார்க்கவே முடியாத அளவுக்கு மனதிற்கும் ,கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு..திக்...திக்...திக்....இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.

மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின் துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில். காப்பாற்றுவார் யாருமில்லையா? "காப்பாத்துங்க...காப்பாத்துங்க... "அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான் உன்னை காப்பாற்றுகிறேன்.நீ பற்றியிருக்கும் மரக்கிளையை விட்டுவிடு".

கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம்.அதிகப் பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும் அப்படியுமாக இரவை விரட்டிக் கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என....

கீழே பார்த்தவனுக்கு பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி.ஆம்.. அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு முழமே இடைவெளி.

விடிந்தது பொழுது மட்டுமல்ல.அவனின் உள்ளத்தின் நம்பிக்கையும்தான்.அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும், தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி மனம் நொந்தான்..தன் மீது தானே சினம் கொண்டான்.

இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 காவலர் தேர்வு 67000 பேர் தேர்வு எழுதவில்லை

🎯 ஜி 20 தலைமை பெறும் வாய்ப்பு

🎯 ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, கல்வி உதவித்தொகை ரத்து.

🎯அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

🎯தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை

🎯அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது

🎯பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

🎯குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பு

🎯லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

🎯FIFA WC 2022 | முத்தான நான்கு கோல்: கனடாவை வீழ்த்தியது குரோஷியா

🎯FIFA WC 2022 | கத்தாரில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ஒலிக்கும் ரசிகர்களின் குரல்

🎯FIFA WC 2022 | ஸ்பெயின் - ஜெர்மனி இடையிலான போட்டி 1-1 என டிரா





TODAY'S ENGLISH NEWS:
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯 Constable Exam 67000 people did not write the exam

🎯 G20 leadership opportunity

🎯 Cancellation of education scholarships given to students from class I to class VIII.

🎯Vanavil Forum' project to stimulate interest in science and mathematics among government school students: Chief Minister M.K.Stalin will inaugurate the day.

🎯Renovation of buildings of 3,808 rural libraries across Tamil Nadu at a cost of Rs.84 crore; Action to buy new books, furniture

🎯Birth certificate mandatory for government jobs, driving license, voter card: Bill to be tabled in Parliament

🎯Annadana program will be expanded to create a hunger-free Tamil Nadu: Minister PK Shekharbabu interview

🎯The President of Egypt will participate as a special guest in the Republic Day

🎯Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians

🎯FIFA WC 2022 | First four goals: Croatia beat Canada

🎯FIFA WC 2022 | Fans chant in support of Sanju Samson in Qatar

🎯FIFA WC 2022 | The match between Spain and Germany drew 1-1











இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Thursday, November 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (25-11-2022)

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 25/11/2022      வெள்ளிக்கிழமை 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம் :  அறிவுடைமை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்   
.                                                                                                                                                                 
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀

 அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


    
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

விடை : உட்கரு

2. டார்ச் விளக்குகளில் பயன்படும் ஆடிகள் எவை?

விடை : குழி ஆடிகள்

3. முட்டைகள் அழுகும் போது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?

விடை : ஹைட்ரஜன் சல்பைடு

4. மனிதனின் தலையில் பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகள் எவை?

விடை : மைக்கோஸ் போரம் ஃபர்ஃபர்

5. நகரும் பொருளின் திசையை மாற்ற உதவுவது எது?

விடை: விசை

 பழமொழிகள்
🌼🌼🌼🌼🌼🌼🌼

🌸 Example is better than precept

🌸 சொல்வதை விட செய்வதே மேல்

🌸 Experience is the best teacher

🌸 அனுபவமே சிறந்த ஆசான்





இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌷 முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்திற்கான வழி என்பதை அறிவேன். 

🌷 எனவே ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கான பல பயிற்சிகளை செய்து என்றென்றும் வாழ்வில் வெற்றி பெறுவேன்


 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பேசும் குகை
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.

உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது. 


மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.

“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.

நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.

“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.


அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.

நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


இன்றைய முக்கிய செய்திகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் - 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்

🎯மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு பயிற்சியுடன் தொழிற்திறன் பயிற்சி- முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

🎯பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பரில் சிறப்பு அரியர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

🎯தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தகவல்

🎯திட்டக்குடி அருகே வேகமாக நிரம்பும் வெலிங்டன் நீர்த்தேக்கம்: தண்ணீரை திறந்துவிட கோரிக்கை

🎯2022 – 2023 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆக மதிப்பீடு வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

🎯 வரும் 28 -11- 2018 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வரும் 9 -12 -2022 அன்று நடைபெறும் என அறிவிப்பு.

🎯 26/11/2022 அன்று நடைபெற இருந்த சி .ஆர். சி கூட்டம் ரத்து.

🎯 பகுதி நேர ஓவிய பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

🎯மதுரை அருகே கி.பி 16-ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

🎯 உச்சநீதிமன்ற தகவல் அறிய ஆர்.டி.ஐ இணையதளம்

🎯 நாளை நவம்பர் 26 விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்

🎯 உலகக் கோப்பை கேமரூனை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

🎯 கால்பந்து உலகக் கோப்பை பிரேசில் அணி அசத்தல் வெற்றி

🎯 ஐந்து உலக கோப்பைகளில் கோல் ரொனால்டு சாதனை

🎯இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

TODAY'S  ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Tamil Nadu Electricity Board has given 2 days more time for electricity bill collection after Aadhaar linking.

🎯 Vocational training with skill development, self-employment training for the differently-abled- Chief Minister M.K.Stal's information

🎯Anna University Announces Special Ariyar Exam for Engineering Students in December

14.6 lakh households in Tamil Nadu do not have bank accounts: Registrar of Co-operative Societies

🎯Wellington Reservoir near Thittakudy is filling up fast: request to open the water

🎯Issuance of guidelines for assessment of first year and second year higher secondary students in the academic year 2022 – 2023.

🎯 Notice that the consultation for graduate teachers which was scheduled to be held on 28-11- 2018 has been postponed due to administrative reasons and will be held on 9-12-2022.

🎯 CR to be held on 26/11/2022 C meeting cancelled.

🎯 Career Transition Consultation for Part-Time Painting Instructors - State Program Director's Proceedings Release.

🎯16th century AD middle stone sculpture discovered near Madurai

🎯 RTI website for Supreme Court information

🎯 PSLV C54 rocket will launch tomorrow November 26

🎯 Switzerland beat Cameroon in the World Cup

🎯 Football World Cup Brazil team amazing victory

🎯 Goal Ronaldo record in five World Cups

🎯 Chance of moderate rain for 4 days from today






🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் ( முதுகலைத் தமிழ் ஆசிரியர்)
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.

Wednesday, November 23, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் (24-11-2022)

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

🌺🌼🌷🌸🏵️🌷🌻🌹💐🏵️🌹☘️🌺🍀🌻
நாள் : 24.11. 2022.      வியாழக்கிழமை.
  திருக்குறள் : அதிகாரம் : பெருமை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
  செய்தொழில் வேற்றுமை யான்.                                                                                                                                                                                                                                           
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀🍀
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும் செய்கின்ற தொழில்ளின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பு இயல்பு ஒத்திருப்பது இல்லை.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.   கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்?

விடை  : கால்சியம்
2.Q.) கைரேகையை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
விடை : எட்வர்ட் ஹென்றி
3.   கண் பார்வையற்றவர் படிக்கும் பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?

விடை  : லூயி பிரெயில்
4.   விமானத்தில் இருந்து உயிர் காக்க உதவும் பாராசூட்டை கண்டுபிடித்தவர்?
விடை   : ஏ.ஜே.கெமனின்
5. அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை    :  1792.
பழமொழிகள் (proverbs) :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌸Sadness and gladness succeed eash other

🌸 வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்

🌸 Self help is the best help

🌸 தன் கையே தனக்கு உதவி




இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 உடல் நலமும் உள்ள நலமும் மனிதனுக்கு நன்மை பயக்கும் என்பதை நான் அறிவேன்.                                                   🌸 எனவே எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து உடலையும், நாள் தவறாது நல்ல நூல்களைக் கற்று உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்வேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁
ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.



கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.





இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

🎯 BE துணை கலந்தாய்வு நிறைவு 7079 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

🎯 நர்சிங் படிப்போருக்கு ரூ 7500 என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

🎯 அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம்1000 நாட்கள்.

🎯அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம்

🎯சர்வதேச மந்தநிலையிலும் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா

🎯தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து


🎯சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான U-19 கால்பந்து போட்டி: மதரஸா பள்ளி சாம்பியன்

🎯FIFA WC 2022 | இது 2-வது ‘ஷாக்’... ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்!








TODAY'S ENGLISH NEWS:
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🎯 Minister of Higher Education Ponmudi has announced a new syllabus for the coming academic year in all universities.

🎯 Completion of BE Supplementary Counseling Allotment of Seats for 7079 Candidates

🎯 Chief Minister Stalin orders Rs 7500 for nursing students

🎯 Waiting period for US visa interview is 1000 days.

🎯Action if conductors refuse to buy Rs.10, Rs.20 coins in government buses: Transport Corporation

🎯India is growing fast despite the global recession

🎯Chief Election Commissioner should be non-political – Supreme Court Constitution Bench opinion


🎯Chennai Revenue District Inter-Schools U-19 Football Tournament: Madrasa School Champion

🎯FIFA WC 2022 | This is the 2nd 'Shock'... Japan defeated Germany!

🌸இனிய காலை வணக்கம் ....✍     
           ❤🌹💛🌷💜🌸💚🌼🧡🌹🤎💐💙🙏🙏🙏🙏
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் 
புதுக்கோட்டை மாவட்டம்-622504
அலைபேசி எண்: 9789334642 .                                       


Tuesday, November 22, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ( 23-11-2022)

                          பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮
நாள் : 23.11. 2020.       புதன்கிழமை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
  திருக்குறள்: அதிகாரம்: கல்வி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 
                                                                                                                                                                                                                                       
🌸பொருள்:
🍀🍀🍀🍀🍀
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
   
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. முதலாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?

விடை  :  1914 முதல் 1918 வரை.

 2. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற ஆண்டு?

விடை : 1939 முதல் 1945 வரை..    
               
3. தேசிய சமதர்மவாதக் கட்சியை நிறுவியவர்?

விடை : ஹிட்லர்.

4. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர்?

 விடை : பூலித்தேவர்.

5. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

விடை    : 1930 நவம்பர் .

பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

🌸The pen is mightier than the sword

🌸 பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது

 🌸 Take time by the fore lock

🌸 காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .



 இரண்டொழுக்கப் பண்பாடு:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

காலமறிதலும், கடின உழைப்பும்  வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.                                               
 🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து குறித்த நேரத்தில் எனது பணிகளை செய்வேன்.
" உழைப்பே உயர்வு தரும்" என்ற பழமொழிக்கேற்ப கடுமையாக உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.



 நீதிக்கதை:
🍁🍁🍁🍁🍁🍁

       ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
நீதி : மனதில் உள்ள பயத்தை நீக்குதல் வேண்டும்.

​​​


இன்றைய முக்கிய செய்திகள் :
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி: பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

🎯 இந்தியாவின் மிகப்பெரிய வலிமை இளைஞர்கள் என 71000 பணி நியமன ஆடைகளை  வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்

🎯 ஆதார் இணைக்காத ஒன்பது லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு 6000 பெறுதமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை அரிட்டாபட்டி அறிவிப்பு.

🎯தமிழில் குடமுழுக்கு, ஓராண்டு மட்டும் அர்ச்சகர் பயிற்சி.

🎯கால்பந்தில் வெற்றி : தேசிய விடுமுறையாக அறிவித்தது சவுதி அரேபியா.

🎯கணவன் கைவிட்ட பெண்களுக்கு விரைந்து கடன் வழங்க அறிவுரை.

🎯சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்

🎯புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது - இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

🎯FIFA WC 2022 | தரமான கால்பந்துகளை தயாரிக்கும் பாகிஸ்தான்: கத்தாருக்கு 3 லட்சம் பந்துகள் பார்சல்






TODAY'S ENGLISH NEWS: 
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🎯Approval of additional 254 posts of post-graduation teachers in government high schools: Commissioner of School Education orders

🎯 Prime Minister Modi is proud to provide 71000 recruitment uniforms to youth as India's greatest strength

🎯 Announcement of Madurai Aritapatti as the first Biodiversity Heritage Site of 6000 per year for nine lakh farmers who are not Aadhaar linked.

🎯Kudamuzku in Tamil, priestly training for one year only.

🎯Success in football: Saudi Arabia declared a national holiday.

🎯Advice to give quick loans to women whose husbands have abandoned them.

🎯Meenakumari appointed as Director General of Siddha Medical Research Group

🎯Buddam Pudu Symphony coming out soon - Interview with Musician Ilayaraja

🎯FIFA WC 2022 | Pakistan that manufactures quality footballs: Parcel of 3 lakh balls to Qatar









🌸இனிய காலை வணக்கம் ....✍       
           
இரா . மணிகண்டன் முதுகலைத் தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
கீரனூர் 
திருச்சி மாவட்டம் - 622504
அலைபேசி எண் : 9789334642.
                                   


தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...