Monday, January 6, 2020

                         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 07.01 . 2020.  செவ்வாய்க்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   அறன்வலியுறுத்தல் .
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற .                                                                                                                                       🌸பொருள்:
       மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.
🌸 பொதுஅறிவு:
1.  இந்து பத்திரிகையின் நிறுவனர் ?
விடை  :    எஸ். சுப்ரமணிய ஐயர் .
2.  சுதந்திர தொழிலாளர்கள் கட்சி(Free Labours) --ஐ ஆரம்பித்தவர்?
விடை  :  ஈ .வெ. ராமசாமி . 
3. மக்கள்தொகை குறித்த படிப்பின் பெயர் என்ன ?
விடை  :   டெமோகிராபி .
4. டிஜிட்டல் வடகிழக்கு இந்தியா திட்டம் - 2022 எப்பொழுது எங்கு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
விடை   : 2018 ஆகஸ்ட் 12 அன்று அசாம் மாநிலம் குவஹாத்தியில்  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் துவங்கி வைத்தார்
5 . குழந்தைகளுக்கான தேசிய செயல்திட்டம்2016 - எப்பொழுது கொண்டுவரப்பட்டது?
விடை    :     2017 ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்ட தேசிய பெண் குழந்தைகள் தினவிழா அன்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் குழந்தைகளுக்கான தேசிய செயல்திட்டம் 2016 - ஐ வெளியிட்டது.
பழமொழிகள் (proverbs) :
1. Prevention is better than cure
🌸 வருமுன் காப்பதே   சிறந்தது  .
2. Practise makes man perfect .
🌸  சித்திரமும் கைப்பழக்கம்  .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 சுற்றுப்புறமும் சுகாதாரமும் சுகந்தரும் என்பதை நான் அறிவேன்.                                                       🌸 எனவே எப்பொழுதும்  என்னைச் சுற்றியுள்ள இடங்களை சுகாதாரமாக வைத்திருப்பேன். பிறரையும் சுகாதாரமாக வைத்திருக்க உதவுவேன் .
 நீதிக்கதை :
பிறரின் வார்த்தைகளால் பலவீனப்பட வேண்டாம்!


படித்ததில் பிடித்தது

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருடன் போட்டியிடக்கூட யாருமே முன்வருவதில்லை.

அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை!

நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக அறிவித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. இந்த நிலையில் அந்த இளைஞன், தான் போட்டியிட முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்ய சம்மதித்தார்கள்.

அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று, "என்னய்யா ஆச்சு உங்களுக்கு? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே! உடம்பைப் பாத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லா தானே பேசுறேன்?" அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

"ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும், வலிமையும் இப்ப இல்லையே? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

"என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே, என்னாச்சு உங்களுக்கு?" என்று கேட்டுவிட்டு விடைபெற்றான். அவ்வளவுதான். வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது. அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும், வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

பலருடைய வாழ்வில் தாங்கள் பலகீனப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணமே அவர்களை வீழ்த்தி விடுகிறது. எனவே பிறரின் வார்த்தைகளால் பலவீனப்படாமல் நமது எண்ணங்களாலும் நம்பிக்கைகளாலும் பலப்படுவோம்!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 அனைத்து மதத்தவரின் நலன்கள் காக்கப்படும் என ஆளுநர் உரையில் அரசு உறுதி
🌸  நீட் தேர்வு 16 லட்சம் பேர் விண்ணப்பம்
🌸  பிப்ரவரி 8 - ல்  தில்லி பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11.
🌸 ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு. தலைவர் உள்ளிட்ட 434 பதவிகளுக்கு ஜனவரி 11 மறைமுகத் தேர்தல்.
🌸  நாளை வேலை நிறுத்தம் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அழைப்பு.
🌸 564 வன காவலர்களுக்கு பணி நியமன ஆணை  முதல்வர் வழங்கினார்.
🌸 நடப்பாண்டில் ஐந்து லட்சம் நபர்களுக்கு ஓய்வுதியம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌸  அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும்.
🌸 ஒரு லட்சம் கல்லூரி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி.
🌸  உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்குகளை 30 நாள்களில் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
🌸 ஜனவரி 9 வரை சட்டப்பேரவை கூட்டம் என பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு.
🌸 பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு.
🌸 இரண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறாது. டிரம்ப் திட்டவட்டம்.
🌸  இன்று இரண்டாவது டி20 ஆட்ட திறனை நிரூபிக்க தவனுக்கு  நிர்பந்தம்.
🌸  மலேசியா மாஸ்டர்ஸ் :  சிந்து சாய்னா நம்பிக்கை.
🌸  ரஞ்சி கோப்பை:  தமிழகத்துக்கு 3 புள்ளிகள்.
Today English news:
🌸  Smog engulfs Trichy city as garbage Burns. everywhere. Sanitary workers also complicit.
🌸 Ramanujan remembered on national mathematics day
🌸 Lord nampurmal passes through gateway amidst  'Ranga Ranga, Govinda Govinda' chants sea of devotees streams paramapada vaasal police ensure smooth conduct of vaikunda Ekadashi.
🌸 students protest stand by JNU.
🌸 horizontal quota too many  ; not a legal right for jobs, rules HC.
🌸 Tree -way  showdown looms as delhi goes to polls on February 8.
🌸 India stands united to protest JNU violence.
🌸 Merit must be the governing criterion : SC.

🌸 Trump warns of sanctions if Iraq tries to expel US troops. It will make Iranian sanction look some whatTame,' says  US President.
🌸 Looking for a leg - up    .  Hosts hope whether will hold long enough to establish dominance  in 2 -  T20l . 
இனிய காலை வணக்கம் ....✍     
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



2 comments:

  1. அருமையான பயனுள்ள பதிவு ஐயா.
    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  2. Very good effort.keep it up .uesfulto all students as well as trs

    ReplyDelete

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...