பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள் : 23.01 . 2020. வியாழக்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்: வாய்மை .
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு. 🌸பொருள்:
. புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளை விட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை என்னும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
🌸 பொதுஅறிவு:
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது ?
விடை : ஞானபீட விருது.
2. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை : ராஜஸ்தான்.
3. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
விடை : மாண்டரின்.
4. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
விடை : வாஷிங்டன் D.C (அமெரிக்கா)
5 . பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர் ?
விடை : லாலா லஜபதி ராய் .
பழமொழிகள் (proverbs) :
🌸 One good turn deserves another
உப்பிட்டவரை உள்ளளவும் நினை .
🌸 Love your neighbour as your self
தன்னைப்போல் பிறரை நேசி
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 இனிய சொற்களை இன்பம் பயக்கும் . கடுஞ்சொற்கள் துன்பத்தை உண்டாக்கும் என்பதை நான் அறிவேன். 🌸 எனவே நான் ஒவ்வொருவரிடமும் எப்பொழுதும் இனிமையான சொற்களையே பேசுவேன். ஒரு போதும் கடுஞ்சொற்களை உச்சரிக்க மாட்டேன் அது பிறர் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.
நீதிக்கதை :
காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.
அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.
சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.
""அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.
""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.
நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.
"நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.
""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.
""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.
""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.
""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.
""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
🌸 இந்தியா என்றுமே மதச்சாா்பற்ற நாடு: என ராஜ்நாத் சிங் கருத்து.
🌸 சிஏஏ-வுக்கு தடைவிதிக்க முடியாது: அரசியல்சாசன அமா்வுக்கு மாற்றம்- பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம்
🌸 335 தலைவா் பதவியிடங்களுக்கு ஜன. 30-இல் மறைமுகத் தோ்தல்: மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு
🌸 தஞ்சை குடமுழுக்கு பிப். 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு.
🌸 தமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.
🌸 விண்வெளிக்கு மனித ரோபோ அனுப்பும் இஸ்ரோ.
🌸 குடியரசு தினம் - பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரம் மாற்றம்.
🌸 43வது புத்தக திருவிழா: 9ம் தேதி எடப்பாடி தொடங்கி வைக்கிறார் .
🌸 தனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ.15 கோடி வருவாய்...3,000 வங்கி கிளைகளின் கணக்கில் புகுந்து கைவரிசை.
🌸 ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடிக்க, உத்தர பிரதேசம் அணிக்கெதிராக மும்பை முன்னிலை பெற்று போட்டியை டிரா செய்தது.
🌸 ஆஸி. ஓபன்: 3-ஆவது சுற்றுக்கு ஆஷ்லி பல்டி, ஒஸாகா, செரீனா, ஜோகோவிச், பெடரா் தகுதி
🌸 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை: காலிறுதியில் நியூஸி, ஆப்கானிஸ்தான்
🌸 தேசிய முதியோா் தடகளம்: உடுமலை வீரா் சிறப்பிடம். மஞ்சள்
Today English news:
🌸 On Valley outreach, Union Ministers promise jobs and education.
🌸 Supreme court refuse to stay citizenship law without hearing the government. CJI indicates the issue maybe eventually referred to constitution Bench.
🌸 Centre seeks guidelines on execution of convicts. MAH moves court appealing for a deadline of 7 days.
🌸 Government arts and Science colleges get full time principles.
🌸 Deadlock over rates hits distribution of of voter ID cards. Arasu cable demanding more money from the EC.
🌸 Science doesn't stop because you have received big award. Nobel literate venki ramakrishnan made history after his shift to biology.
🌸 17 dead as virus spreads to more places.
🌸 Serena and federer storm into the third round.
🌸 Sarfaraz masterminds Mumbai's coup . His unbeaten triple centry helps the host overhaul UP's gargantuan total.
இனிய காலை வணக்கம் ....✍
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

தொடர்ந்து இந்த மகத்தான பணியை செய்ய எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பதை எண்ணி வியக்கிறேன். அருமை சார்
ReplyDeleteநன்றிங்க ஐயா . உங்களைப் போன்றவர்களின் ஆதரவில் நம்பிக்கை பிறக்கிறது.
ReplyDelete