Tuesday, January 7, 2020

                         பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
நாள் : 08.01 . 2020.  புதன்கிழமை .
🌸திருக்குறள் : அதிகாரம்:   அறன்வலியுறுத்தல் .
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.                                                                                                                                       🌸பொருள்:
       அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதை செய்ய மறப்பதை விட கெடுதியும் இல்லை.
🌸 பொதுஅறிவு:
1.  தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் ?
விடை  :    மதராஸ் மெயில் (1873).
2.  தமிழ்நாட்டின் முதல் இருப்பு பாதை?
விடை  :  ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை . 
3. தமிழ் தாத்தா உவேசா வின் இயற்பெயர் ?
விடை  :  வேங்கட ரத்தினம் .
4.  சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை?
விடை   : 6000 டிகிரி செல்சியஸ்
5 . பனிப்பந்து என்று அழைக்கப்படுவது?
விடை    : ப்ளூட்டோ.
பழமொழிகள் (proverbs) :
1. One good turn deserves another
🌸 உப்பிட்டவரை உள்ளளவும் நினை .
2. Many hands make work light .
🌸  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 பொய் கூறுதலும் புறங்கூறுதல் என்றென்றும் தீமையை உண்டாக்கும் என்பதை அறிவேன்.                                                       🌸 எனவே எப்பொழுதும்  யாரிடமும் ஒருபோதும் பொய் கூறவும் மாட்டேன் புறங்கூறவும் மாட்டேன் .
 நீதிக்கதை :
சொல்வதை திருந்தச் சொல்லுங்கள்!

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான்.
“”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.
“இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்” பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது.

மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம்.
நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ என்று பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்...

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள் .

குழந்தைகளுக்கு மட்டுமல்ல யாருக்கு எதை கற்று கொடுத்தாலும் அதில் ஒரு தெளிவு வேண்டும் .

கற்றுக்கொள்பவர்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்களா ? என்ற தெளிவும் வேண்டும் .

பாத்திரமறிந்து பிச்சையிடவும் வேண்டும்
விழலுக்கு இழைத்த நீராகவும் ஆகக்கூடாது.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு ஜனவரி 22-ல் தூக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு. பெற்றோர் மகிழ்ச்சி.
🌸  விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ;  மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் .
🌸 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  வினா வங்கி வெளியீடு எப்போது என மாணவர்கள் பெற்றோர் எதிர்பார்ப்பு .
🌸 தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே 60 சதவீத வேலைவாய்ப்பு என தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் தெரிவித்தார்.
🌸 பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.
🌸 பொங்கல் பண்டிகை : சென்னையில் இருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
🌸 உயர் கல்வியை தாய்மொழியில் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து.
🌸 பொறியியல் மாணவர்களுக்கான கணினி தமிழ் பயிற்சி, போட்டிகள் : அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு.
🌸 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என பணியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.
🌸 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில்  2  நாள் தேசிய கல்வி மாநாடு சென்னையில் இன்று தொடக்கம் .
🌸 சத்துணவு பணியாளர்கள் உள்பட குரூப் -  சி ,  டி பிரிவு ஊழியர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் போனஸ் ஓய்வூதியர்களுக்கு ரூ 500 சிறப்பு பரிசு.
🌸 ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவராக ஆ.சக்திவேல் பொறுப்பேற்பு.
🌸 இந்திய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கிய பங்காற்றும் என மத்திய அமைச்சர் பியூஷ்  கோயல் கருத்து.
🌸 பிராந்திய பாதுகாப்பு குறித்து மோடி - டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.
🌸 அமெரிக்கப் படைகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான்.
🌸 இரண்டாவது டி20 : இந்தியா அபார வெற்றி.
🌸 ஒலிம்பிக் வாலிபால் தகுதிச்சுற்று : கத்தாரிடம் தோற்றது இந்தியா.
🌸 இளம் செஸ் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி தொடக்கம்.
Today English news:
🌸 4 nirbhaya case convicts to be hanged on January 22. Court issues death warrants on a plea by victim's parents.
🌸 Government projects slower GDP growth.
🌸 TNPCB seeks citizenship proof to give info under RTI. Petition seeking details on industrial pollution returned.
🌸 Army gets working on GOCO model to improve efficiency.
🌸 It is up to States to provide 10 % quota centre responds to charge that law is not implemented in TN and Karnataka.
🌸 Centre invites foreign envoys to Srinagar  five month after scrapping article 370, they have been asked to assess situation.
🌸 Iran threatens to 'set ablaze' the places 'U.S  likes'.
🌸 Government may cut spending to cure deficit. Coming on the back of poor private investment,move  many hurt economic growth further analysis.
🌸 Saini and shardul Prove too hot for sri Lanka. The two pacers restrict the visitors to 142 ;  Rahul ,dhawan , Shreyas and kohli take India past the finish line in style.


இனிய காலை வணக்கம் ....✍     
இரா மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .                                       



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...