பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்.
நாள் : 14.01 . 2020. செவ்வாய்க்கிழமை .
திருக்குறள்: நிலையாமை.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.
🌸பொருள்:
ஒரு பொழுது கூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டை கட்டுவார்கள்.
🌸 பொதுஅறிவு:
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எப்போது இயற்றப்பட்டது ?
விடை : 1986 .
2. உலக சுகாதார தினம்?
விடை : ஏப்ரல் 7 .
3. சார்லஸ் பாபேஜ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை : இங்கிலாந்து .
4. மனித இதயத்தில் காணப்படும் அறைகள் எத்தனை?
விடை : நான்கு அறைகள்.
5 .தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : முண்டந்துறை.
பழமொழிகள் (proverbs) :
1. Faith is the force of life.
🌸 நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.
2. Failure are stepping stones to success.
🌸 தோல்வியே வெற்றிக்கு முதல் படி .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை நான் அறிவேன் 🌸 எனவே ஒரு போதும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட மாட்டேன். எப்பொழுதும் பகுத்தறிவோடும் சுயமரியாதையுடனும் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
**************
"ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம்
மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு
கண்டிஷனா சொல்லிருச்சு.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.
'இடம்தானே....தாராளமா இருந்துக்கோ!'னு
பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.
ஒரே மாசம்தான்......ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த
தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு
போக ஆரம்பிச்சது.ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த
ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,'அடுத்தவங்களுக்கு
உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....
'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு
எனக்குத்தெரியும்.....நீயும் என்னோட சேர்ந்து சாக
வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...
ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட
சந்தோஷமா நல்லா இருக்கணும்!'
இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி
உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும்
உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும்;
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!!!
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூரில் வாடிவாசல் காண 2500 காளைகள் தயார் களைகட்டத் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா.
🌸 ஜனவரி 17 இல் காணும் பொங்கலையொட்டி எட்டு முக்கிய இடங்களுக்கு செல்ல ரூ10 கட்டணத்தில் சுற்றுலா பேருந்து.
🌸 உதகையில் பனிப்பொழிவால் அவதி வெள்ளிக் கம்பிகளாக காட்சியளித்த புல்வெளி.
🌸 பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இதுவரை 6.5 லட்சம் பேர் பயணம். இன்று 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
🌸 பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 21 வரை பெறலாம் என உணவுத்துறை அறிவிப்பு
🌸 சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்.
🌸 முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகலில் நடைபெறுகிறது .
🌸 கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு நீளம் தாண்டுதலில் தங்கம் தமிழகத்தின் சரண் சாதனை
🌸 அனுபவம் திறமை வாய்ந்த வீரர்களை அணியில் கொண்டிருந்தாலும் கூட்டாக விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என கேப்டன் விராட் கோலி கருத்து.
TODAY ENGLISH NEWS:
🌸 SC not to review sabarimala case to examine larger issues. Nine judge bench to decide constitutional questions raised by religious practices.
🌸 BDU puts of faculty recruitment.
🌸 Institute run by Alagiris Trust de - recognised.
🌸 T.N to showcase folk diety and dancers in R-Day parade . Tableau to reflect the rich cultural tradition of the state.
🌸 Register your drones are face penalty : government
🌸 Government largest road accident database system will be e piloted in 6 States.
🌸 Government gets cracking on GST evaders with data analytics.
🌸 It's time to set up when the world's best Face off.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment