பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
நாள் : 13.01 . 2020. திங்கட்கிழமை .
திருக்குறள்: அதிகாரம்: புகழ்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
🌸பொருள்:
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்.இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. .
🌸 பொதுஅறிவு:
1. வளி மண்டலத்தின் அழுத்தத்தை கணக்கிட உதவும் கருவி எது ?
விடை : பாரோமீட்டர் .
2. இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி என்ன?
விடை : ஹுக்ளி .
3. ஆசிய விளையாட்டு முதல் முதலில் எங்கு விளையாடப்பட்டது?
விடை : புதுடெல்லி .
4. மட்டை பந்து விளையாட்டில் பந்தாடும் மட்டையின் நீளம் எவ்வளவு?
விடை : 28 அங்குலம்.
5 .சதுரங்க விளையாட்டு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை : இந்தியா
பழமொழிகள் (proverbs) :
1. A Young calf knows no fear.
🌸 இளங்கன்று பயமறியாது.
2. Brevity is the soul of wit.
🌸 சுருங்கச் சொல்லுதல் அறிவின் அடையாளம் .
இரண்டொழுக்கப் பண்பாடு:
🌸 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை நான் அறிவேன் 🌸 எனவே ஒரு போதும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட மாட்டேன். எப்பொழுதும் பகுத்தறிவோடும் சுயமரியாதையுடனும் நடந்து கொள்வேன்.
நீதிக்கதை:
**************
தன்னம்பிக்கை.
ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும். ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இ;ருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. ‘ நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு. ‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு. நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. ‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போகிறேன்;’ என்றது செவ்வெறும்பு. ‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு. ‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு. எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது. ‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு. கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது. இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது ‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழத்துக்கள் நண்பா’. நண்பர்களை. பயந்து வாழாமல் துணிச்சலோடு போராடினால் வெல்லலாம் என்பதை இந்த கதை உணர்த்திகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் :
🌸 யார் குடியுரிமையும் பாதிக்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து.
🌸 வறுமையை போக்க கல்வி அவசியம் என அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேச்சு.
🌸 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு : 4006 பேர் பங்கேற்பு.
🌸 வாக்காளர் பட்டியலில் திருத்தம் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
🌸 சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு .
🌸 மாற்று மதங்களையும் மதிப்பதுதான் இந்தியர்களின் மாண்பு என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார்.
🌸கொல்கத்தா துறைமுகத்திற்கு சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் என பிரதமர் மோடி அறிவிப்பு.
🌸 ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கேட்பு .
🌸 அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வுக்காக பொங்கல் விடுமுறை நாட்களில் வரும் நாடாளுமன்ற ஆட்சிக்குழு மத்திய அரசு அலுவலர்கள் வேதனை.
🌸 வி ஐ பி களின் பாதுகாப்பு பணியிலிருந்து தேசிய பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ள முடிவு.
🌸பும்ரா, பூனம் யாதவுக்கு பிசிசிஐ சிறந்த வீரர் , வீராங்கனை விருது .
🌸 ரஞ்சிக் கோப்பை வலுவான நிலையில் மும்பை.
🌸 நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.
TODAY ENGLISH NEWS:
🌸CAA meant to give citizenship, not take it away, says PM Modi.
🌸 Publisher evicted from fair for displaying book against government.
🌸 Bharathidasan university makes progress in NIRF ranking .
🌸 Population board appeals for smokeless bhogi.
🌸Freedom fighter VOC's writings to be published in two volumes.
🌸 Two more Maradu towers brought down with precision.
🌸 Private property is a fundamental right says SC .
🌸 Iran agrees escalation is only way to solve crisis.
🌸 A good dilemma to have, says Rathour. The Rahul dhawan tussle for opening slot continuous .
🌸 BCCI set to appoint madanlal and gambhir as CAE members.
🌸இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வலையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621005
அலைபேசி எண்: 9789334642 .

No comments:
Post a Comment