Wednesday, December 25, 2019

அரையாண்டு பொதுத் தேர்வு - 2019-20 விடைக் குறிப்பு
ஒன்பதாம் வகுப்பு
பாடம்: தமிழ்
பகுதி- 1
1.ஆ) திருவாரூர் - கரிக்கையூர்
2.அ) மாமல்லபுரம்
3.இ) மோகன் சிங் ஜப்பானியர்
4.ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்.
5.இ) அள்ளல் - சேறு
6. புலவர் குழந்தை
7. இராவண காவியம்
8. தாமரை
9. மரை, பொருகரிக், குரைகழல், புரைதபக்
10.ஈ) எதிர்மறைப் பெயரெச்சம், உவமைத்தொகை
11.ஈ) கெடுதல்
12.இ)இடவாகுபெயர்
13.ஈ) அவர்களுக்கா (ஆ) பரிசு தருவேன்
14.ஆ) வினைத்தொகை
15.அ) அடுக்குத்தொடர்.
பகுதி - 2
பிரிவு - 1
16. அ)தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
      ஆ) யாருடைய காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?
17. தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சிற்பகலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழர்களின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக நாடுகளைக் குறிப்பிடலாம்.
18. இந்திய தேசிய ராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த தமிழக வீரர்கள் கேப்டன் லட்சுமி, ஜானகி, ராஜாமணி ,சிதம்பரம் லோகநாதன் , கேப்டன் தாசன் ,ராமு ,அப்துல்காதர் ஆகியோராவர்.
19. மூவாது மூத்தவர்-ஆண்டுகளால் முதியவர் ஆகாதவர். ஆனால் , அறிவினால் மூத்தவர்களுடன் ஒப்பானவர்.
20. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமையை குறிக்கும். மதுரையின் சிறப்புகளை பற்றியும் நிலையாமை பற்றியும் கூறுவதால் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
இந்நூல் 782 அடிகள் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகின்றன. இதை பெருகு வளமதுரைக் காஞ்சி என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் ஆவார். மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத் தொகையிலும் பதின்மூன்று பாடல்கள் இவர் பாடியுள்ளார்.
21. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்.                                                                                                        அறம்நாணத் தக்கது உடைத்து
பிரிவு -2
22.
   1. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
   2. கல்லாடம் படித்தாரோடு மல்லாடாதே.
23.
1. நானும் எனது நண்பனும் நகமும் சதையும் போல நட்புடன் உள்ளோம்.
2. முருகன் தோட்டத்தில் மூலிகை செடிகளை கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வந்தான்.
24.
  1. கரை------எல்லை.  ------கல்விக்கு கரை இல்லை.
       கறை ----- களங்கம் -----வாழைக்கறை பட்டால் அழியாது.
  2. மரை -----மான் ------------காட்டில் கூட்டமாக மரைகள் திரிந்தன.
      மறை ------வேதம் ---------நான்கு மறைகளையும் கற்றுத்தவர்கள்
                                                      சான்றோர்கள் எனஅழைக்கப்படுவார்கள்.
25.
  1. நேற்று தென்றல் காற்று வீசியது.
  2. கொடியிலுள்ள மலரை பறித்து வா.
26.
  1. Melody ---- மெல்லிசை.  2. Treasury ---- கருவூலம்.
27. இடிகுரல் --உவமைத்தொகை
         பெருங்கடல் - பண்புத்தொகை.
28. 1. ஈகை ---கொடைத்தன்மை. தக்க சமயத்தில் உதவுவது.
       2. காண் --காணுதல், பார்த்தல். நோக்குதல்.
பகுதி 3         பிரிவு 1
29. சங்ககால பெண்பாற் புலவர்கள்:
                ஔவையார் , ஒக்கூர் மாசாத்தியார்  , ஆதிமந்தியார் , வெண்ணிக்குயத்தியார் , பொன்முடியார் , அள்ளூர் நன்முல்லையார்  , நக்கண்ணையார் , காக்கைப்பாடினியார் , வெள்ளிவீதியார் , காவற்பெண்டு நப்பசலையார்.
30.  மூன்று - தமிழ்
மூணு - மலையாளம்
மூடு - தெலுங்கு
மூரு - கன்னடம்
மூஜி-துளு.
31.
  1. இரண்டு வகையாக பிரிக்கலாம்.
  2. முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள்.
2. உருவத்தின் முன் பகுதியும் பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.
3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
32.  இடம்: பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள் வடமதுரையில் எழுந்தருளியுள்ள திருமாலைக் காண எதிர்கொண்டு அழைக்க இளம் பெண்களுடன் கைகளில் விளக்கையும் கலசத்தை ஏந்தி அழைத்தல்.
விளக்கம்: மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளையுடைய சங்குகள் ஊத அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் , முத்துக்களை உடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னை திருமணம் செய்து கொள்கிறான் . இக்காட்சியை கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.
33. ஏமாங்கத நாட்டில் அன்ன சாலைகள் ஆயிரம் இருந்தன; தர்மத்திற்காக விடப்பட்ட இறையிலி நிலங்களும் ஆயிரம் இருந்தன; மகளிர் கோலமிட்டு அழகு செய்யும் இடமும் ஆயிரம் இருந்தன; தொழிலில் சோம்பல் இல்லாத கம்மி வரும் ஆயிரவர் இருந்தனர்: திருமணங்களும் ஆயிரம் நடைபெற்றன. இவ்வாறு ஏமாங்கத நாட்டில் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்கதேவர் பாடியுள்ளார்.
34. காடெல்லாம் கழைக்கரும்பு காவவல்லாம் குழைக் கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மட அன்னம் குலமெல்லாம் கடல் அன்ன
நாடெல்லாம் நீர் நாடு தனைஒவ்வா நலமெல்லாம் .
(அல்லது)
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெல்லம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளிகள் தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
பிரிவு - 3
35. புணர்ச்சி என்பது இயல்பு புணர்ச்சி ,விகாரப் புணர்ச்சி என இருவகைப்படும்.
இயல்பு புணர்ச்சி : நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது எவ்வித மாற்றமுமின்றி இயல்பாக புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா) தமிழ் + நாடு = தமிழ்நாடு.
விகாரப் புணர்ச்சி:
           விகாரப் புணர்ச்சி தோன்றல் , திரிதல் , கெடுதல் என மூன்று வகைப்படும்.
வாழை + பழம் = வாழைப்பழம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது ஒரு எழுத்து தோன்றுவதால் இது தோன்றல் விகாரம் எனப்படும்.
பல் + பொடி = பற்பொடி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்து சேரும்போது ஒரு எழுத்து வேறொரு எழுத்தாக திரிந்து புணர்வது திரிதல் விகாரம் எனப்படும்.
மரம் + வேர் = மரவேர்.
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும்போது ஒரு எழுத்து நீங்கிப் புணர்வது கெடுதல் விகாரம் எனப்படும்.

36. சொல் அமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பை பேணவும் இனிய      ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.
37. பண்பாகு பெயர்:
      (எ.கா) மஞ்சள் பூசினாள்
 மஞ்சள் என்னும் பண்பு , அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது எனவே இது பண்பாகு பெயர் எனப்படும்.
தொழிலாகு பெயர் :
  (எ.கா) வற்றல் தின்றான்.
 வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்துள்ளது எனவே இது தொழிலாகு பெயர்  எனப்படும்.
பகுதி 4


38.அ) காவிரி ஆற்றங்கரையின் வளம் : சோழநாடு காவிரி வளத்தால் நெல் கரும்பு சங்குகள் மரங்கள் போன்றவை பெருகிச் சிறப்புடன் திகழ்ந்தது.
1. காவிரியின் காட்சி:                                                                                           காவிரி நீரானது மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகின்றது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன.
2. உழத்தியர் களை களைதல் :
இடையை தளர்ந்த உழத்தியர்  வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாய் நடந்து அருகில் உள்ள வரைப்பினை  அடைகின்றனர்.
3. நாட்டுவளம்:
காடுகளில் கழையாகிய கரும்புகள், சோலைகளில் மலர் அரும்புகள் , பார்க்குமிடமெல்லாம் குவளை மலர்கள்,  வயல்களில் நெருக்கமாய் சங்குகள்,  குளங்கள் எல்லாம் கடல்போல நீர்ப்பரப்புகள்.
4. மீன்கள் துள்ளி எழும் காட்சி:
சோழ நாட்டு நீர்நிலைகளில் எருமைகள் நெருங்கி மூழ்கும். அங்கு அடர்ந்திருந்த மீன்கள் வானவில்லைப் போலதத்துள்ளி எழும்.
5. குன்றுபோல் குவித்த படங்கள்:
நெல் போராக குவிக்கப்பட்டது. பலவகை மீன்கள் குன்று போல் குவிக்கப்பட்டன. மலர்த்தொகுதிகள்  மலைபோல் குவிக்கப்பட்டன.
6. போர் அடித்த காட்சி:
குவித்து வைக்கப்பட்ட நெற்குவியலைச் சாய்த்துத் தள்ளினர்.  பெரிய எருமை கூட்டங்களைக் கொண்டு வலம் வரச் செய்தனர்.
7. மரங்களின் வகைகள்:
அந்நாட்டில் எங்கும் தென்னை , செருந்தி,  நரந்தம் போன்ற மரங்களும் அரசமரம், கடம்ப மரம் , பச்சிலை மரம், குரா மரம் போன்றவையும் பனை , சந்தனம் , நாகம் , வஞ்சி , காஞ்சி ,கோங்கு முதலியனவும் நிறைந்துள்ளன.
39.ஆ) ராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகள்:
குறிஞ்சி :
அருவிகள் பாறையாய் ஒலிக்கும் பைங்கிளிகள் தமிழ் இசை பாடும் . பொன் மயில்கள் தோகை விரித்து ஆடும்.
முல்லை :
நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவித்து பாடும். முதிரை ,சாமை, கேழ்வரகு , குதிரைவாலி, நெல் போன்ற பயிர்கள் கதிர் அடித்து எழும் ஓசை.
மருதம் :
மலையில் தோன்றும் ஆறும்.  கரையை மோதி தழும்பும் குளத்து நீரும், முல்லை நிலத்தின் காட்டாறும் மருதநிலத்தில் பாய்ந்தோடும். அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும். வளம் நிறைந்த மருத நிலத்தில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும். சிறுவர்கள் குளங்களில் இறங்கி நீந்திக்களிப்பர்; உயரமான வைக்கோல் போரில் ஏறித் தென்னை மரங்களில் உள்ள இளநீர் காய்களை பறித்து அருகேயுள்ள காஞ்சி மரநிழலில் அமர்ந்து இளநீர் அருந்தும் காட்சி அழகானது.
நெய்தல் :
நெய்தல் நிலத்தவர் கடலினின்று கொண்டு வந்து குவித்துள்ள மலையளவு வளங்களும் ஒளிபொருந்திய முத்துக்களும் இயற்கையோடு இயைந்து காணப்படுகின்றன. அங்குள்ள கடற்கரையில் மலையே வருவதுபோல அலைகள் கரையை நோக்கி வருவதும், அவ்வலைகளின்  ஊடு சென்று , கடற்கரை மணலில் உலாவி, காற்றிலே தன் சிறகுகளை உலர வைப்பதற்காக தும்பிகள் பறக்கும் என்னும் இயற்கை எழில் காட்சிகளை இராவண காவியத்தில் காணலாம்.
39. அனுப்புதல்:   அறிவழகன்,
                                  9ஆம் வகுப்பு அ பிரிவு,
                                   அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சி.
      பெறுதல்    :    மேலாளர்,
                                 நெய்தல் பதிப்பகம்,
                                  சென்னை -  8.
ஐயா,
                                  பொருள் : தமிழ் - தமிழ் - ஆங்கிலம் கையடக்க அகராதி 
                                                      வேண்டுதல் - சார்பு.
 எங்கள் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் எங்கள் பாடத்தில் எழும் ஐயங்களை போக்க நாள்தோறும் நூலகத்திற்குச் சென்று படித்து வருவோம்.அங்கு எங்களுக்கு தேவையான தமிழ் தமிழ் ஆங்கில அகராதி மிகவும் குறைவாக உள்ளதாலும் ஒரு பத்து படிகள் எங்கள் பள்ளி நூலகத்திற்கு தேவைப்படுவதாலும் உடனடியாக மேற்கண்ட முகவரிக்கு பத்து படிகள் தமிழ் தமிழ் ஆங்கில கையடக்க அகராதி அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
       இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
அறிவழகன்,
அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சி.
உறைமேல் முகவரி:
                                       மேலாளர்,
                                       நெய்தல் பதிப்பகம்,
                                       சென்னை - 8.
39.ஆ) இலக்கிய மன்ற விழா தொகுப்புரை:
எங்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 18 .6 .2018 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கின. இவ்விழாவில் எங்கள் வகுப்பு இலக்கியமன்ற பொறுப்பாசிரியர் திரு முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் தலைமைப் பொறுப்பு ஏற்று அமர்ந்திருந்த தலைமையாசிரியர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் தமிழறிஞர் இனியன் ஆகியோர் உள்ளிட்ட அவையோர் அனைவரையும் வரவேற்று விழாவினை தொடங்கி வைத்தார். தலைமை வகித்த ஊராட்சிமன்ற தலைவர் இப்பள்ளி அதிக மாணவர்களையும் நல்ல தேர்ச்சியும் பெற்று சிறப்பாக விளங்குகிறது. அதுபோல் கலைகளிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார். சிறப்பு விருந்தினராய் வந்திருந்த இனியன் கலைகளின் முக்கியத்துவத்தையும், இலக்கியங்களின் பெருமையினையும் மிக அழகாக மாணாக்கர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறினார். தலைமை ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து அமர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

40. காட்சியை கண்டு கவினுற எழுதுக:
முயன்று பார் உன் பலம் தெரியும்
முயன்றால் முடியாதது எதுவும் உண்டோ?
இயலாமை என்பதெல்லாம் முயலாமை தான்.
முயற்சி திருவினையாக்கும் முயன்றுபார்.
(அல்லது)
மூடநம்பிக்கை :
கல்லைக் கடவுள் என்பதும் அதற்காக
காலத்தை வீணாக்குவதும்
எல்லையில்லாமல் எப்பொழுதும் இறைவனே
 எல்லாம் என்று எடுத்துரைப்பது மகா மூடத்தனம்.
முயற்சி சிறிதுமின்றி
அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் என்று
ஆயுளைக்கழிப்பது மூடத்தனம் மகாமூடத்தனம்.



                 விடைக்குறிப்பு தயாரிப்பு:
                 இரா. மணிகண்டன்
                 பட்டதாரி தமிழாசிரியர்
                 அரசு மேல்நிலைப்பள்ளி
                 வலையூர்
                  திருச்சிராப்பள்ளி -621005.
                 அலைபேசி எண் : 9789334642.




No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...